மேலும் அறிய

Savukku shankar: ‛சவுக்கு சங்கருக்கு சப்ஃபோர்ட் பண்ணுவோம்...’ ப்ளூ சட்டை மாறன் திடீர் வீடியோ!

சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. முதலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர், பின்னர் நள்ளிரவில் கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

நீதித்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் குறித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

கடந்த ஜூலை 22 ஆம் தேதி ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என யூட்யூப் தொலைக்காட்சி ஒன்றில் நேர்காணல் அளித்த சவுக்கு சங்கர் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என கூறி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாகவே வந்து வழக்கு தொடர்ந்திருந்தது. மேலும் அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி சிறப்பு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்திருந்தார். இதைக்கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை வாசித்தனர். அதன்படி சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. முதலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர், பின்னர் நள்ளிரவில் கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

இந்நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்  சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை என்பது எதிர்பார்த்த ஒன்றாக இருந்தாலும், அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயமாகவே உள்ளது. அவர் என்னுடைய நெருங்கிய நண்பர் என்ற முறையில் சவுக்கு சங்கர் குறித்து சொல்லணும்னா, மிகுந்த சமூக அக்கறை கொண்டவர். எந்தவொரு விஷயத்தையும் ஆராயாமல் பேசமாட்டார். தெரியும்ன்னா தெரியும்..தெரியாதுன்னா தெரியாதுன்னு தான் சொல்வாரு. அப்புறம் எதையுமே பூசி மெழுக மாட்டார். தன்னுடைய மனதில் என்ன தோணுதோ அதை அப்படியே பேசி விடுவார். அதேபோல ஒரு சார்பா எப்பவும் பேசமாட்டாரு. 

எது நியாயமோ, அந்த நியாயம் பக்கம் தான் நிற்பார். இப்படி அவரை பத்தி சொல்லணும்னா பல விஷயம் சொல்லலாம். எங்கப்பா அடிக்கடி சொல்லுவார். ஆயிரம் வருஷம் அசிங்கமா வாழ்றதை விட ஒருநாள் சிங்கமா வாழந்துட்டு செத்துப்போயிறணும்ன்னு சொல்லுவார். அந்த வார்த்தைக்கு பொருத்தமா என்னுடைய வாழ்க்கையில் நான் பார்த்த ஒரு ஆள் சவுக்கு சங்கர் தான். இன்னைக்கு நடந்த சம்பவத்துல வேற யாராவது மாட்டியிருந்தா நீதிமன்றத்துல போய் என்ன சொல்லிருப்பான்.

நான் சொன்னது ஒன்று. நீங்கள் புரிந்து கொண்டது ஒன்று. அப்படி இல்லன்னா மன்னிப்பு கடிதம் கொடுத்திருப்பான். அப்படியும் இல்லன்னா நெஞ்சுவலின்னு ஆஸ்பத்திரியில போய் படுத்திருப்பான். ஆனால் சொன்ன வார்த்தையில் இருந்து இந்த சூழ்நிலையில கூட பின்விளைவுகள் என்னன்னு தெரிஞ்சும் மாறாம நின்னாரு. அதனால் தான் அவர் மக்கள் மத்தியில் ஹீரோவாக பார்க்கப்படுகிறார். இப்படிப்பட்ட சவுக்கு சங்கருக்கு ஆதரவா அவர் கூட இருக்கிறது தான சரியாக இருக்கும் என தெரிவித்து We support savukku shankar  என கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

முதல்வர் விஜயால் ஓரங்கட்டப்பட்டாரா ராதன் பண்டித்? இதான் காரணமா?
முதல்வர் விஜயால் ஓரங்கட்டப்பட்டாரா ராதன் பண்டித்? இதான் காரணமா?
டாக்சிக் பட நடிகையை குலுங்க குலுங்க சிரிக்கவைத்த நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன்..அப்டி என்ன சொன்னார்?
டாக்சிக் பட நடிகையை குலுங்க குலுங்க சிரிக்கவைத்த நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன்..அப்டி என்ன சொன்னார்?
ஜெயிலர் 2 மேக்கிங் வீடியோ வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
ஜெயிலர் 2 மேக்கிங் வீடியோ வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
ஓடிடி நிறுவனங்கள் போட்டி போடும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2
ஓடிடி நிறுவனங்கள் போட்டி போடும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை.. லாட்டரி மருமகன்.! யாருக்காக விமான நிலையம்.? திமுக- தவெக காரசார மோதல்
ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை.. லாட்டரி மருமகன்.! யாருக்காக விமான நிலையம்.? திமுக- தவெக காரசார மோதல்
Minister Keerthana: பரந்தூர் சரி, மீனம்பாக்கத்தை DMK 5 வருடம் கிடப்பில் போட்டது ஏன்? அமைச்சர் கீர்த்தனா நறுக் கேள்வி
பரந்தூர் சரி, மீனம்பாக்கத்தை DMK 5 வருடம் கிடப்பில் போட்டது ஏன்? அமைச்சர் கீர்த்தனா நறுக் கேள்வி
இந்தியாவின் WagonR? 310 கி.மீ. ரேஞ்ச்- சுஸுகியின் மினி எலெக்ட்ரிக் கார் அறிமுகம்- என்ன விலை?
இந்தியாவின் WagonR? 310 கி.மீ. ரேஞ்ச்- சுஸுகியின் மினி எலெக்ட்ரிக் கார் அறிமுகம்- என்ன விலை?
TN Assembly: இபிஎஸ் vs செங்கோட்டையன்.. சட்டசபையில் வெடித்த மோதல்.. கடுப்பான சபாநாயகர்
TN Assembly: இபிஎஸ் vs செங்கோட்டையன்.. சட்டசபையில் வெடித்த மோதல்.. கடுப்பான சபாநாயகர்
German Luxury SUV: ஜெர்மன் ப்ராண்டின் இந்தியாவிற்கான சீப் ஆன கார் - 7 ஸ்பீட் DCT, AWD - விலை, அம்சங்கள், வசதிகள்
ஜெர்மன் ப்ராண்டின் இந்தியாவிற்கான சீப் ஆன கார் - 7 ஸ்பீட் DCT, AWD - விலை, அம்சங்கள், வசதிகள்
தொண்டையில் சிக்கிய பலூன்.! மூச்சு திணறிய 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி- நடந்தது என்ன.?
தொண்டையில் சிக்கிய பலூன்.! மூச்சு திணறிய 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி- நடந்தது என்ன.?
CM விஜய்க்கு அறிவில்லையா? என சீண்டிய DMKவினர்..! சீன் போட்டாரா ஸ்டாலின்? என TVK பதிலடி
CM விஜய்க்கு அறிவில்லையா? என சீண்டிய DMKவினர்..! சீன் போட்டாரா ஸ்டாலின்? என TVK பதிலடி
TASMAC: இன்னும் முடியல, அடுத்த அதிரடி ரெடி..! டாஸ்மாக்கை கைகழுவ CM விஜய் முடிவு? அசெம்ப்ளியில் அறிவிப்பு?
இன்னும் முடியல, அடுத்த அதிரடி ரெடி..! டாஸ்மாக்கை கைகழுவ CM விஜய் முடிவு? அசெம்ப்ளியில் அறிவிப்பு?
Embed widget