Vijay Antony: சக்ஸஸ் மீட் வைங்க; தமாசா இருக்கும்: விஜய் ஆண்டனியை மீண்டும் மீண்டும் சீண்டும் ப்ளூ சட்டை மாறன்
ரோமியோ படம் குறித்து நடிகர் விஜய் ஆண்டனிக்கும் திரை ஆர்வலர் ப்ளூ சட்டை மாறனுக்கும் இடையில் சர்ச்சை பெரிதாகியுள்ளது
![Vijay Antony: சக்ஸஸ் மீட் வைங்க; தமாசா இருக்கும்: விஜய் ஆண்டனியை மீண்டும் மீண்டும் சீண்டும் ப்ளூ சட்டை மாறன் Blue sattai maaran slams back vijay Antony says vijay Antony gave back to back hatrick flops Vijay Antony: சக்ஸஸ் மீட் வைங்க; தமாசா இருக்கும்: விஜய் ஆண்டனியை மீண்டும் மீண்டும் சீண்டும் ப்ளூ சட்டை மாறன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/20/38164f99408a8c95ca3ca4d45abc4cf91713603922009572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ரோமியோ படத்தை அன்பே சிவம் மாதிரி ஆக்கிடாதீங்க என்று விஜய் ஆண்டனி தெரிவித்த கருத்தை கிண்டல் செய்து ப்ளூ சட்டை மாறன் கருத்து பதிவிட்டு வருகிறார்.
ரோமியோ படம் குறித்து விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி நடித்து சமீபத்தில் வெளியான படம் ரோமியோ. ரொமாண்டிக் காமெடியாக உருவான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தை கடுமையான மொழியில் விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறனை குறிப்பிட்டு நடிகர் விஜய் ஆண்டனி இன்று ஏப்ரல் 20 காலை கருத்து தெரிவித்திருந்தார். அதில் அவர் " பல நல்ல படங்களை விமர்சனம் என்கிற பெயரில் கொல்லும் ப்ளூ சட்டை மாறன் போன்றவர்களுக்கும் ரோமியோ போன்ற நல்ல படங்களை கொண்டாடாமல் தமிழ் சினிமாவை குறை சொல்பவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ரோமியோ படத்தை அன்பே சிவம் படம் மாதிரி ஆக்கிடாதீங்க " என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
ஹாட்ரிக் ஃப்ளாப் தந்ததுக்கு நாங்க தான் அனுதாபம் தெரிவிக்கனும் - ப்ளூ சட்டை மாறன்
சமீபத்தில் வந்த ரத்தம், கொலை மட்டுமல்ல. பல ஃப்ளாப்களை தந்தவர். எப்படியாவது இந்த படத்தை ஓட்ட வேண்டிய கட்டாயம்.
— Blue Sattai Maran (@tamiltalkies) April 20, 2024
ஆகவே.. முதலிரவில் மனைவி சரக்கடிக்கும் போஸ்டரை வைத்து வித்யாசமான பப்ளிசிட்டி செய்தார். ஆனாலும் மக்கள் கண்டுகொள்ளவில்லை.
இப்போது விமர்சகர்களை பிராண்டி வருகிறார்.… pic.twitter.com/NlIuooF47T
இதனைத் தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் அடுத்தடுத்த பதிவுகளில் விஜய் ஆண்டனியை விமர்சித்து வருகிறார். முதல் பதிவில் " ரோமியோ படம்... அன்பே சிவம் போல இருக்கும் - நவீன நடிகர் திலகம் விஜய் ஆண்டனி." என்று நக்கலாக கவுண்டமணி மீம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து "சமீபத்தில் வந்த ரத்தம், கொலை மட்டுமல்ல. பல ஃப்ளாப்களை தந்தவர். எப்படியாவது இந்த படத்தை ஓட்ட வேண்டிய கட்டாயம். ஆகவே.. முதலிரவில் மனைவி சரக்கடிக்கும் போஸ்டரை வைத்து வித்யாசமான பப்ளிசிட்டி செய்தார். ஆனாலும் மக்கள் கண்டுகொள்ளவில்லை. இப்போது விமர்சகர்களை பிராண்டி வருகிறார். அடுத்து... சக்ஸஸ் மீட் வைங்க. தமாசா இருக்கும். மொதல்ல கொஞ்சமாவது நடிக்க கத்துக்கங்க. இயக்குனர், எடிட்டர் வேலைல தலையிட்டு படத்தை காலி பண்ணாதீங்க. உங்க படம் நல்ல படம்னு மக்கள் சொல்லனும். அப்பறம்... தப்பு தப்பா ப்ரமோசன் ஐடியா தர்ற அல்லக்கைகளை விரட்டி விடுங்க. உங்கள மாதிரி அப்பாவிகளை அவங்க அழகா மொட்டை அடிச்சிருவாங்க. மண்ட பத்தரம். அன்பே சிவம்." என்று பதிவிட்டுள்ளார் ப்ளூ சட்டை.
அடுத்தபடியாக "தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜூவிகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் - விஜய் ஆண்டனி. ரத்தம், கொலை, ரோமியோ... ஹாட்ரிக் ஃப்ளாப் தந்ததுக்கு நாங்கதான் அனுதாபம் தெரிவிக்கனும். இவர் ஏன் காமெடி பண்றாரு? " என்று பதிவிட்டுள்ளார்.
ப்ளூ சட்டை மாறனின் கருத்துக்கள் விஜய் ஆண்டனி ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் கோபத்தை கிளப்பியுள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)