Kavin : ஸ்டார் படத்துல 20 நிமிஷம் ட்ரிம் பண்ண சொன்னேன்...வெளிப்படையாக பேசிய கவின்
ஸ்டார் படத்தில் இருந்து இருபது நிமிட காட்சிகளை ட்ரிம் செய்யும்படி தான் கேட்டுக்கொண்டதாகவும் ஆனால் இயக்குநர் நம்பிக்கையாக இருந்ததால் காட்சிகளை நீக்க மறுத்துவிட்டார் என்று நடிகர் கவின் தெரிவித்துள்ளார்
கவின்
வளர்ந்து வரும் நடிகரான கவின் நடித்துள்ள பிளடி பெக்கர் படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நெல்சன் திலிப்குமாரின் உதவி இயக்குநர் சிவபாலன் இந்த படத்தை இயக்கியுள்ளார். நெல்சனின் ஃபிலமெண்ட் பிக்ச்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் டிரைலர் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஆனால் கவின் நடித்து கடைசியாக வெளியான ஸ்டார் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் பிளடி பெக்கர் படத்தின் மீது சில கேள்விகள் இருந்து வருகின்றன.
ஸ்டார் படம் பற்றி நடிகர் கவின் வெளிப்படை
கவின் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான படம் ஸ்டார். பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இந்த படத்தை இயக்கியிருந்தார். டாடா படத்தின் வெற்றிக்கும்ப் பின் கவின் நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவானது. மேலும் படத்தின் டீசர் அனைவரையும் கவர்ந்ததால் மக்கள் இடையே இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் படம் திரையரங்கில் வெளியானபின் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. மேலும் ப்ரோமோஷன் பில்டப் கொடுத்து இப்படியான மொக்கை படத்தை ப்ளாக்பஸ்டர் ஹிட் படமாக்கிவிட்டார்கள் என சமூக வலைதளத்தில் கண்டனங்கள் எழுந்தன.
"#STAR had mixed reviews, During story narration it was good. But while watching the Final output, I felt lag in some portions. I told to trim 20 mins, as it will affect good moments also. But the team said they are confident & don't want to trim"
— AmuthaBharathi (@CinemaWithAB) October 22, 2024
- #Kavin pic.twitter.com/yD2nYThzHQ
ஸ்டார் படம் குறித்து தற்போது நடிகர் கவின் வெளிப்படையாக பேசியுள்ளார் ' ஸ்டார் படத்தின் கதையை கேட்டபோது எனக்கு சரியாக தான் இருந்தது. படப்பிடிப்பு எல்லாம் முடிந்து கடைசியாக பார்த்தபோது எனக்கே சில குறைகள் தெரிந்தது. படம் நல்லா இருக்கு ஆனால் ஒரு சில இடங்களில் மட்டும் கொஞ்சம் தொய்வாக இருக்கிறது. அந்த தொய்வு படத்தில் நன்றாக வந்திருக்கும் காட்சிகளையும் பாதிக்கிறது. ஒரு இருபது நிமிட காட்சிகளை ட்ரிம் செய்துவிட்டார் நிச்சயமாக அது படத்தின் வசூலிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் இயக்குநரிடம் சொன்னேன். ஆனால் இயக்குநர் குழு ரொம்ப நம்பிக்கையாக இருந்தார்கள். நம்மால் முடிந்ததை சொல்கிறோம் அதனை ஏற்காவிட்டால் அதற்கு மேல் என்ன சொல்ல முடியும். எனக்கு சம்பளம் வந்துவிட்டது. தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் அதனால் அவரும் எதுவும் சொல்லவில்லை. ஆனால் எதிர்பார்த்தபடி தான் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன அதனால் அது எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கவில்லை" என்று கவின் தெரிவித்துள்ளார்.