Watch Video: கெட்டப் மாத்துனது பிரச்னையா? பணம் எடுக்க வந்த இயக்குநரை கொள்ளையன் என சுற்றி வளைத்த போலீஸ்!
'பிளாக் பாந்தர்' திரைப்படத்தில் இயக்குநர் ரையான் கூக்ளர் தனது வங்கியல் பணம் எடுக்க முயன்றபோது, அவரை கொள்ளையடிக்க வந்திருப்பவர் என்று நினைத்து அமெரிக்க போலீஸ் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் மிகவும் பிரபலமான மார்வெல் திரைப்படம் ப்ளாக் பாந்தர் (Black Panther). இதை தயாரித்தவர் ரையான் கூக்ளர் (Ryan Coogler).
'பிளாக் பாந்தர்' திரைப்படத்தில் இயக்குநர் ரையான் கூக்ளர் தனது வங்கியல் பணம் எடுக்க முயன்றபோது, அவரை கொள்ளையடிக்க வந்திருப்பவர் என்று நினைத்து அமெரிக்க போலீஸ் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரையான் கூக்ளர் (Ryan Coogler) தலையில் தொப்பியுடன், சன்கிளாஸ் அணிந்து மற்றும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி முகமூடி அணிந்திருந்தார். அவர் அங்குள்ள வங்கியல் தன் பணத்தில் பெரும் தொகையை எடுப்பதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்தார்.
.அப்போது, பண பரிவர்த்தனையின் அளவு வங்கியின் விதிமுறைகளைவிட அதிகமாக இருந்தது. இவர் உருவம் மற்றும் அதிக அளவு தொகை எடுக்க முயற்சி ஆகிய காரணங்களுக்காக அவர் மீது சந்தேகம் எழுந்ததால் வங்கி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே, போலீசார் அங்கு வந்து, விசாரணை மேற்கொண்டர்.
ரையான் கூக்ளர் (Ryan Coogler) பணப் பரிமாற்றம் செய்வதற்காக பாங்க் ஆஃப் அமெரிக்காவிற்குச் சென்றபோது அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரது வங்கிக் கணக்கு மற்றும் விவரங்களைச் சரிபார்த்துவிட்டு, அவர் பிரபல இயக்குநர் என தெரிந்ததும் வருத்தம் தெரிவித்தனர்.
பேங்க் ஆஃப் அமெரிக்கா, அறிக்கையில், "இந்த சம்பவம் நிகழ்ந்ததற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.” என்று தெரிவித்தார்.
ரையான் கூக்ளர் (Ryan Coogler) மார்வெலில் அடுத்த சீரிசில் ப்ளாக் பாந்தர்: வக்காண்டா ஃபாரெவர்(Black Panther: Wakanda Forever) இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு அட்லாண்டாவில் நடந்து வருகிறது. இந்த திரைப்படம், இந்தாண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதி வெளியாகிறது.
வீடியோவைக் காண:
Ryan Coogler was clearly stunned when cops pulled guns on him as he tried to make a legal withdrawal from his bank account ... and it was all caught on police body cam footage. pic.twitter.com/tlFWNSK5iQ
— TMZ (@TMZ) March 10, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்