Bipasha Basu Pregnant: 43 வயதில் கர்ப்பமான சச்சின் பட நடிகை.. போட்டோ வெளியிட்டு இன்ஸ்டாவில் நெகிழ்ச்சி!
பிரபல பாலிவுட் நடிகையான பிபாஷாபாசு தனது கர்ப்ப செய்தியை தனது இன்ஸ்டாகிராமில் போட்டோவுடன் பகிர்ந்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகையான பிபாஷா பாசு தனது கர்ப்ப செய்தியை தனது இன்ஸ்டாகிராமில் போட்டோவுடன் பகிர்ந்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை பிபாசு பாசுவும் நடிகர் கரண் சிங் குரோவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து 6 வருடங்களை கழிந்துள்ள நிலையில், நடிகை பிபாசு பாசு கர்ப்பமாக உள்ளதாக கடந்த மார்ச் மாதமே தகவல் வெளியானது.
ஆனால் அது குறித்து இருவரும் எதுவும் சொல்லவில்லை. இந்த நிலையில்தான் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் நடிகை பிபாசு பாசு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கர்ப்ப செய்தியை அறிவித்ததோடு, கணவருடன் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்து இருக்கிறார்.
View this post on Instagram
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் பிபாசு பாசு, “ புதிய நேரம், புதிய கட்டம், புதிய ஒளி எங்களுடைய வாழ்விற்கு தனித்துவமான ஷேடை கொடுத்திருக்கிறது. முன்பு இருந்ததை விட கொஞ்சம் முழுமையாக உணர்கிறோம். நாங்கள் இந்த வாழ்க்கையைத் தனித்தனியாகத் தொடங்கினோம். பின்னர் ஒருவரையொருவர் சந்தித்தோம். நாம் இருவர் மட்டுமே பகிர்ந்து கொண்ட அன்பு பார்ப்பதற்கே கொஞ்சம் அநியாயமாகத் தோன்றியது. இருவராக இருந்த நாம் மூவராகிவிடுவோம்.
View this post on Instagram
எங்கள் அன்பால் வெளிப்படும் ஒரு படைப்பு, எங்கள் குழந்தை விரைவில் எங்களுடன் சேர்ந்து எங்கள் மகிழ்ச்சியை சேர்க்க இருக்கிறது. அனைவருக்கும் நன்றி, உங்கள் நிபந்தனையற்ற அன்பு, உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் நல்வாழ்த்துக்கள் எப்போதும் எங்களில் ஒரு பகுதியாக இருக்கும். எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பதற்கும், எங்களுடன் மற்றொரு அழகான வாழ்க்கையை வெளிப்படுத்தியதற்கும் நன்றி.எங்கள் குழந்தை துர்கா துர்கா” என்று பதிவிட்டு இருக்கிறார். நடிகை பிபாஷா பாசு விஜய் நடித்த ‘சச்சின்’ படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.