மேலும் அறிய

கேக் முக்கியம்..  குழந்தை போல் ரசித்து சாப்பிடும் மணப்பெண்.. வைரலாகும் வீடியோ!

திருமண நாள். ஒவ்வொரு இளம் பெண்ணின் பெருங்கனவு நாள். திருமணம் நிச்சயமாகிவிட்டாலே போதும் மணநாள் கனவு இளம் பெண்களை ஆட்கொண்டு விடும்

திருமண நாள். ஒவ்வொரு இளம் பெண்ணின் பெருங்கனவு நாள். திருமணம் நிச்சயமாகிவிட்டாலே போதும் மணநாள் கனவு இளம் பெண்களை ஆட்கொண்டு விடும். உடல் எடை குறைக்க வேண்டும். ஒருவேளை ஒல்லியாக இருந்தால் லேசாக எடை அதிகரிக்க வேண்டும். தலையைப் பராமரிக்க வேண்டும். என்ன ஆடை அணிய வேண்டும். அதற்கு என்னென்ன அணிகலன்களைப் பொறுத்தமாக வாங்க வேண்டும்.

இப்படி கனவுகளும், அதற்கான ஏற்பாடுகளும் சேர்ந்தது தான் வீடு கல்யாணக் களை கட்டக் காரணமாக இருக்கும். அதுவும் வட இந்தியக் கல்யாணங்கள் என்றால் கேட்கவா வேண்டும் மெஹந்தி, சங்கீத் என திருமணத்துக்கு முன்னர் பல்வேறு கொண்டாட்டங்கள் இருக்கும். செல்ஃபிக்களுக்கும், வீடியோக்களுக்கும் பஞ்சமில்லாத கல்யாண சீசனாக டெக்னாலஜி மாற்றிவைத்துள்ளது.

அப்படி ஒரு திருமண வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி அனைவரையும் கவர்ந்து வருகிறது. இளம் பெண் ஒருவர் மணக்கோலத்தில் நடனமாடிக் கொண்டிருக்க ஒரு தட்டு நிறைய பேஸ்ட்ரியுடன் ஒருவர் வருகிறார். அதைப் பாத்தவுடன் கண்களில் அவ்வளவு மகிழ்ச்சியுடன் ஒரு சாக்லேட் பேஸ்ட்ரியை எடுக்கிறார் அந்த மணப்பெண். உதட்டு லிப்ஸ்டிக் போய்விடுமோ என்றெல்லாம் கவலை கொள்ளாமல் சிறு குழந்தை போல் வாயை அகலத் திறந்து பேஸ்ட்ரியை சுவைக்கிறார். மூக்கில் மாட்டப்பட்டிருந்த வளையம் கீழே விழுந்துவிட அதையெல்லாம் யார் சரி செய்வார் என்ற தொனியில் பேஸ்ட்ரியை சுவைக்கிறார். அப்போது அவரின் ஆட்டம் நிற்கவில்லை. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெளிர் இளம் சிவப்பு நிற ஆடையும், அதற்குத் தோதாக பச்சை பாசிமணியும் தங்கமும் இழைத்த நகைகளும். கூடவே நெற்றியில் தொங்கும் அணிகலன்களும் கண்ணைக் கவர்கிறது. ஆனால் அத்தனை அலங்காரத்தையும் மறக்கச் செய்துவிடுகிறது மணப்பெண் சில விநாடிகளுக்கு எடுக்கும் குழந்தை அவதாரம். குழந்தைமையைத் தொலைக்காமல் இருந்தால் வாழ்வினிதாகவே இருக்கும்.

கேக் முக்கியம்..  குழந்தை போல் ரசித்து சாப்பிடும் மணப்பெண்.. வைரலாகும் வீடியோ!

பெர்க் சாக்கலேட்டுக்கு ஒரு விளம்பரம் வரும். மணப்பெண்ணாக வரும் ஆலியா பெட் கையில் பெர்க்குடன் காட்சியளிப்பார். மணப்பெண்ணுக்கு மாலை அணிவிக்க உயரே செல்ல லைட்டான பெர்க் சாப்பிட்டு மேலே போவது போல் அந்தக் காட்சி வடிவமைக்கப்பட்டிருக்கும். மணக்கோலத்தில் ஆலியா அழகாக பெர்க்கை சாப்பிடும் கட்சி ரசிகர்கள் உள்ளத்தை கவ்வி இழுப்பதுபோல் இருக்கும். அது ஒரு விளம்பரக் காட்சி என்பதையே மறந்துவிடும் அளவுக்கு மணப்பெண்ணாக வரும் ஆலியாவின் குறும்பு இருக்கும்.

அதுபோலத் தான் இப்போது வைரலாகியுள்ள இந்த மணப்பெண்ணின் வீடியோவும் கல்யாணக் கோலத்தில் இருக்கும் பெண்ணின் குறும்பு அனைவரையும் ரசிக்க வைக்கிறது. அதுவும் அவர் பேஸ்ட்ரி சாப்பிடும் அழகு. ப்ளீஸ் அப்படியே அந்தப் பேஸ்ட்ரியை எங்களுக்கும் ஒரு காக்கா கடி கொடுங்களேன் என்று கேட்கத் தூண்டுவது போல் இருக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
"சார், பார்த்து சுடுங்க" குறி பார்த்து சுட்ட ராஜ்நாத் சிங்.. அசந்து போன ராணுவ வீரர்கள்!
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mukundan PMK : ’’தாத்தா மாமா அடிச்சுக்காதீங்கஎனக்கு பதவியே வேண்டாம்’’முகுந்தன் எடுத்த முக்கிய முடிவுAnna University Issue | ‘'வீடியோ எடுத்து மிரட்டுனான்’’ பாதிக்கப்பட்ட மாணவி பகீர்!வெளியான FIR ReportAnna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
"சார், பார்த்து சுடுங்க" குறி பார்த்து சுட்ட ராஜ்நாத் சிங்.. அசந்து போன ராணுவ வீரர்கள்!
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
Embed widget