BiggBoss tamil 9 : வியானாவின் உள்ளாடையை நடுவீட்டில் வைத்த விக்ரம்...இப்படியா பழிவாங்குவது
Biggboss tamil season 9 : வியானாவின் மீதிருந்த கடுப்பில் அவரது உள்ளாடையை பிக்பாஸ் நடுவீட்டில் விக்கல்ஸ் விக்ரம் வைத்துள்ளது சர்ச்சையாகியுள்ளது

பிக்பாஸ் தமிழில் வாராவாரம் ஒரு போட்டியாளர் வெளியேறிக் கொண்டு வர மிச்ச போட்டியாளர்களிடையே போட்டி சூடு பிரிக்கிறது. அந்த வகையில் வியானா தற்போது பலரது டார்கெட்டாக இருந்து வருகிறார். எஃப் ஜேயுடன் வியானா நெருங்கி பழகி வந்த நிலையில் அதை கெடுக்கும் விதமாக அதிரையை மறுபடியும் வீட்டிற்குள் கொண்டு வந்துள்ளார் பிக்பாஸ். வியானாவிற்கும் விக்ரமுக்கும் இடையில் தற்போது பிரசன்னை ஏற்பட்டுள்ளது. வியானாவின் உள்ளாடைகளை விக்கல்ஸ் விக்ரம் பிக்பாஸ் வீட்டின் நடுவில் வைத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பிக்பாஸ் நெக்லஸ் திருடும் டாஸ்க்
கடந்த வாரம் ஆதிரை பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். தற்போது கானா வினோத் , சாண்ட்ரா , பார்வதி , வியானா , விக்கல்ஸ் விக்ரம் , கமருதின் , அரோரா , ரம்யா , பிரஜின் , கனி . சுபிக்ஷா , அமித் , ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நெக்லஸ் திருடும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு குழு மாடர்ன் திரைப்பட கதாபாத்திரங்களாக நடிக்க இன்னொரு குழு ரெட்ரோ திரைப்பட கதாபாத்திரங்களாக நடிக்க வேண்டும். வாரம் முழுவதும் போட்டியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரமாகவே வாழ வேண்டும். அதே நேரத்தில் எப்படியாவது அந்த நெக்லஸை இன்னொரு டீமிடம் இருந்து திருட வேண்டும். கலகலப்பும் , கலவரமும் என சிறப்பாக நடந்து வருகிறது நெக்லஸ் திடும் டாஸ்க்.
வியானா உள்ளாடையை நடுவீட்டில் வைத்த விக்ரம்
பிக்பாஸ் வீட்டு விதிகளை மீறி, வியானா தனது துவைத்த உடைகளை (உள்ளாடைகள் உட்பட) வாஷிங் ரூமில் வைத்தார். பார்வதி அதை விக்ரமிடம் சுட்டிக்காட்டியபோது, அவர் கேப்டன் ரம்யாவிடம் சொல்ல வியானாவின் துணிகளை லிவிங் ரூமிற்கு கொண்டு வர உத்தரவிட்டார். தனது ஆடைகளை நடுவீட்டில் பார்த்த வியானா விக்ரம் மீது கோபபட்டார். தன் உள்ளாடை இருப்பது தெரிந்தே விக்ரம் அந்த துணிகளை நடுவீட்டில் வைத்து தன்னை பழிவாங்கியதாக வியானா குற்றம்சாட்டினார். ஆனால் விக்ரம் அதில் உள்ளாடை இருக்கிறதா இல்லையே என்பதை கையைவிட்டா பார்க்க முடியும் என திமிராக பதில் சொல்ல வியானா அழத் தொடங்கினார்.
ஆரம்பத்தில் திக்கி திக்கி தமிழ் பேசிய வியானா அண்மையில் டாஸ்க்கில் சரளமாக தமிழ் பேசினார். இதனை சுட்டிக்காட்டி வியானா இத்தனை நாள் நடித்து ஏமாற்றி வந்ததுள்ளதாகவும் போலி ஸ்டார் என்றும் வியானாவை விக்ரம் திட்டியது குறிப்பிடத் தக்கது.
இது அவர்களின் பகைமைக்கு ஒரு சிறிய, அன்றாட விளிம்பைச் சேர்த்தது





















