Bigg Boss Ramya Joo : எல்லார் கூட சேர்ந்து சாப்பிடனும்..எமோஷனலாக பேசி கவர்ந்த ரம்யா ஜோ..யார் இவர்
Bigg Boss 9 Tamil Contestant Ramya Joo : பிக்பாஸ் 9 தமிழில் 11 ஆவது போட்டியாளராக பங்கேற்றுள்ள ரம்யா ஜோ பற்றிய முழு விபரங்களை பார்க்கலாம்

பிக்பாஸ் 9 தமிழ்
பிக்பாஸ் தமிழின் 9 ஆவது சீசனின் துவக்க நிகழ்ச்சி இன்று மாலை 6 மணி முதல் கோலாகலமாக நடந்து வருகிறது. விஜய் சேதுபதி இரண்டாவது ஆண்டாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை 11 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்கள். வாட்டர்மெலன் ஸ்டார் ஸ்டார் திவார் , அரோரா சின்க்ளேர் , ராப் பாடகர் எஃப்.ஜே , விஜே பார்வதி , கெமி , இயக்குநர் பிரவீன் காந்தி , சீரியல் நடிகர் சக்தி , கனி , ரம்யா ஜோ ஆகியோர் அடுத்தடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்கள். இதுவரை வந்தவர்களில் போட்டியாளர் ரம்யா ஜோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.
யார் இந்த ரம்யா ஜோ
சின்ன வயதில் பெற்றோர்களால் கைவிடப்பட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் தனது சகோதரிகளுடன் வளர்ந்தவர் ஸ்டெல்லா. இவரது மற்றொரு பெயர் ரம்யா ஜோ. மைசூரைச் சொந்த ஊராக கொண்ட இவர் தற்போது தஞ்சாவூரில் வசித்து வருகிறார். பொருளாதார நிலையை சமாளிக்க ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளில் நடனமாடத் துவங்கினார். மேடையில் நடனமாடும் போது பலமுறை பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளதாக தன்னைப் பற்றி அறிமுக வீடியோவில் தெரிவித்துள்ளார். ஒரு திரைப்பட கலைஞராக வேண்டும் என்பதே தனது ஆசை என ரம்யா ஜோ கூறியுள்ளார்.
பிக்பாஸ் 9 ஆவது சீசனில் இதுவரை பல போட்டியாளர்கள் தங்களைப் பற்றிய அறிமுகத்தை கொடுத்தார்கள். இதில் பெரும்பாலானவர்கள் மேடையில் தங்களை ப்ரோமோட் செய்துகொள்ளும் விதமாகவே பேசினர். ரம்யா ஜோ பேசுகையில் " நான் சின்ன வயதில் இருந்தே தனியாக இருந்து வளர்ந்தவள். குடும்பத்துடன் சேர்ந்து உட்கார்ந்து எல்லாம் நான் சாப்பிட்டது இல்லை. இந்த பிக்பாஸ் வீட்டில் நான் செல்வதற்கு முக்கிய காரணம் எனக்கான கொஞ்சம் பேர்களுடன் ஒரு வீட்டில் இருந்து அவர்களுடன் சேர்ந்து சாப்பிட வேண்டும் என்பதற்காகதான். " என்று கூறினார். ரம்யா ஜோ பேசிய விதம் பலரை கவர்ந்துள்ளது.
View this post on Instagram






















