Watch video: புகுபுகுனு புகை! சிகரெட் பிடித்த பிக்பாஸ் போட்டியாளர்கள்.. பகையை கிளப்பிய புகை வீடியோ!
பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் போட்டியாளர்கள் புகைப்பிடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியும் , விமர்சனத்துக்கு உள்ளாகியும் வருகிறது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது முதல் OTT பிரத்தியேகமான பிக்பாஸ் தமிழ் சீசனை நேற்று முதல் 24x7 ஸ்ட்ரீமிங் செய்யப்படும் வருகிறது. இந்த 2022 ஆம் ஆண்டின் முதல், மிகப்பெரிய OTT அறிமுகத்துடன், கமல்ஹாசன் BiggBossUltimate-ஐயும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தொகுத்து வழங்கி வருகிறார்.
மினுமினுக்கும் வீடு.. அதிரடி மாற்றங்களுடன் கோலாகலமாக தொடங்கிய BiggBoss Ultimate நிகழ்ச்சியில் முதலில் கமல்ஹாசன் வனிதாவை அறிமுகப்படுத்தினார். அதனைதொடர்ந்து, ஜூலி, சுரேஷ் சக்கரவர்த்தி, நிரூப், சாரிக், சினேகன், அனிதா சம்பத் உள்பட 14 போட்டியாளர்கள் அடுத்தடுத்து வீட்டிற்குள் களமிறங்கினர்.
முன்னதாக, விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் 5 சீசன்களும் எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வந்தது. தற்போது, 24 மணிநேரமும் நேரடியாக OTT தளத்தில் ஒளிபரப்பப்பட்டு வருவதால் பிக்பாஸ் ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு ஆர்வத்தை தூண்டும் என்று தெரியவில்லை.
இந்தநிலையில், பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் அல்டிமேட்டான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அப்படி என்னடான்னு கேட்டா அதற்கும் எங்களிடம் பதில் உள்ளது. புண் பட்ட மனச புகை விட்டு ஆத்தனும்ன்னு சொல்லுவாங்க. இங்கேயும் அதேமாதிரிதான் போட்டியாளர்கள் போட்டியாளர்கள் புஸ்ஸு,புஸ்ஸுன்னு புகை விட அத நச்சு நச்சுன்னு வீடியோ எடுத்து வெளிய விட்டாங்க.
Smoking room scenes for the first time🍻🤯🤯
— vaathiyar (@vaathiyaaruu) January 30, 2022
#Niroop #Abhinay #Abirami #BiggBossTamilOTT #BiggBossUltimateTamil #bigbossultimate pic.twitter.com/QgtkZcxnby
புகைபிடிக்கும் அறையில் மனதை அமைதிகொள்ள அபிநய் ஆனந்தமா புகைவிட, அடுத்த இடத்தில் இருந்தில் இருந்த நிரூப் வீட்ட பத்தவைக்குறதுக்கு முன்னாடி சிக்ரெட்ட பத்தவச்சிடாரு. அதன்பிறகு, சாரிக், அபிராமி என கையில் புகையுடன் நடை பயில, இதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர்.
Fun dhan polayeee😂😂😂 #ThadiBalaji counters 👌🏻👌🏻👌🏻
— Nithish kumar (@nithishtweets_) January 30, 2022
#Niroop #Abhinay #Abirami #BiggBossTamilOTT #BiggBossUltimateTamil #bigbossultimate #BiggBossTamil #BalajiMurugadoss pic.twitter.com/y7oJJdrN0H
தற்போது, இந்த பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் போட்டியாளர்கள் புகைப்பிடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியும் , விமர்சனத்துக்கு உள்ளாகியும் வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்