Biggboss Tamil 5 | பிக்பாஸ் ப்ரேக்கிங் நியூஸ்.. ப்ரியங்கா பரிதாபங்களும்.. வாரிவிடும் தாமரைச்செல்வியும்..
“பிரியங்கா எனக்கு ஃபிரண்டே கிடையாது.ந்த வீட்டுல பிரியங்கா அவங்க பேச்சு மட்டும்தான் உயர்ந்து இருக்கனும் அப்படினு நினைக்குறாங்க”
![Biggboss Tamil 5 | பிக்பாஸ் ப்ரேக்கிங் நியூஸ்.. ப்ரியங்கா பரிதாபங்களும்.. வாரிவிடும் தாமரைச்செல்வியும்.. tamil reality show bigg boss season 5 day 58 promo Biggboss Tamil 5 | பிக்பாஸ் ப்ரேக்கிங் நியூஸ்.. ப்ரியங்கா பரிதாபங்களும்.. வாரிவிடும் தாமரைச்செல்வியும்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/30/eb1ded7326ddfc65ee60ed7f3270c80a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணியை அடுத்து, நவம்பர் 28-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் ஐக்கி பெர்ரி எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கடந்த வாரம் நடிகை ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த வாரமும் அவரே தொகுத்து வழங்குவாரா அல்லது உலக நாயகன் மீண்டும் வருவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 58 வது நாளான இன்று (நவம்பர் 30) பிக்பாஸ் வீட்டில் தாமரை மற்றும் பிரியங்காவிற்கான மோதல் இன்னும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பிக்பாஸ் இன்று போட்டியாளர்களுக்கு 'breaking news ’ என்னும் விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி போட்டியாளர்கள் red tv மற்றும் blue tv என இரண்டு செய்தி சேனல் அணிகளாக பிரிய வேண்டும். அவர்கள் செய்ய வேண்டிய ஆக்டிவிட்டீஸை நடுவர்களாக அமர்ந்திருக்கும் தொகுப்பாளர்கள் கூற , போட்டியாளர்கள் செய்ய வேண்டும் .
View this post on Instagram
தற்போது வெளியாகியிருக்கும் புரமோவில் , தாமரையும் பிரியங்காவும் ஒருவரை ஒருவர் எதிர்க்கொள்கின்றனர். அதில் தாமரையிடம் , அபிஷேக் “ பிரியங்கா உங்களுக்கு எப்படியா தோழி ?” என கேட்க, அதற்கு சற்று தயங்காத தாமரை , “பிரியங்கா எனக்கு ஃபிரண்டே கிடையாது. இந்த வீட்டுல பிரியங்கா அவங்க பேச்சு மட்டும்தான் உயர்ந்து இருக்கனும் அப்படினு நினைக்குறாங்க , மற்றவர்கள் எல்லாம் நமக்கு கீழதான்னு நினைக்குற ஆளு பிரியங்கா மட்டும்தான்..என்னை பொருத்த வரையில , நான் எங்க வேணும்னாலும் வந்து சொல்லுவேன்“ என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரியங்கா தாமரை பக்கத்திலிருந்து எழுந்து செல்கிறார். ஆரம்பத்தில் தாமரை ஒரு வெகுளி என பேசியவர் பிரியங்கா. ஆனால் தற்போது தாமரைக்கும் பிரியங்காவிற்கு இடையில் நடக்கும் கருத்து மோதல் , பிக் பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தாமரையின் குற்றச்சாட்டிற்கு பிரியங்கா எப்படி ரியாக்ட் செய்கிறார் என்பதை இன்றைய எபிஷோடில் பார்ப்போம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)