Rachitha Mahalakshmi: அடேங்கப்பா... 91 நாட்கள் தாக்குப்பிடித்த ரச்சிதாவுக்கு இவ்வளவு சம்பளமா? பிக்பாஸ் வீட்டில் அடித்த லாட்டரி
பிக் பாஸ் சீசன் 6ல் இருந்து இந்த வாரம் வெளியேறிய ரச்சிதா ஒரு நாளைக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? விவரம் உள்ளே
விஜய் டிவியில் இறுதிக்கட்டத்தை நெருங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் எவிக்ட் செய்யப்பட்டது ரச்சிதா. இது வரையில் ஒளிபரப்பான மற்ற சீசன்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்த சீசனில் ஸ்வாரஸ்யம் சற்று குறைவாகவே இருக்கிறது என்பது மக்களின் கருத்தாக உள்ளது.
தப்பித்த அமுதவாணன் :
பிக் பாஸ் சீசன் 6 இன்று முதல் 14 வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நேற்று எவிக்ட் செய்யப்பட்ட ரச்சிதாவையும் சேர்த்து 14 பேர் வெளியேறி தற்போது அசீம், அமுதவாணன், விக்ரமன், ஷிவின், கதிர், மைனா, ஏடிகே என 7 பேர் பிக் பாஸ் வீட்டினுள் உள்ளனர். மைனா மற்றும் நந்தினி என இருவரும் தான் வாக்கு எண்ணிக்கையின் படி குறைவான வாக்குகளை பெற்று இருந்தனர். வீட்டினுள் உள்ள மத்த ஹவுஸ் மேட்ஸ் மைனா தான் வெளியேறுவார் என எதிர்பார்த்த நிலையில் ரச்சிதா வெளியேறுகிறார் என்ற இறுதி அறிவிப்பு வெளியானது. இதை எதிர்பார்க்காத ரச்சிதா மிகுந்த ஏமாற்றத்துடன் அழுதுகொண்டே பிக் பாஸ் வீட்டினில் இருந்து வெளியேறினார். இருப்பினும் மிகவும் பொறுமையாக ஆரம்பம் முதல் விளையாடிய போட்டியாளர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Heartbreaking 💔
— Roja (@angel20SK) January 8, 2023
Why da dei @vijaytelevision #Shivin #Rachita #BiggBossTamil6 pic.twitter.com/POPth9n9ss
சரவணன் மீனாட்சி மூலம் பிரபலம் :
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் தொடக்கத்தில் சற்று சுவாரஸ்யம் குறைவாக தான் விளையாடினார். ஆனால் சில வாரங்களாக மிகவும் ஆர்வமாக விளையாடினார். அதற்கு உதாரணம் டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் அவரின் பங்களிப்பு. ரச்சிதாவை காட்டிலும் குறைவான வாக்கு எண்ணிக்கைகளை கொண்டு இருந்த அமுதவாணன் டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் வெற்றிபெற்றதால் அதற்கு அடுத்தாக இருந்த ரச்சிதா வெளியேறினார்.
View this post on Instagram
ரச்சிதாவின் ஒரு நாள் சம்பளம் :
நேற்று வெளியேறிய ரச்சிதா பிக் பஸ் வீட்டினுள் இருந்ததற்காக பெற்ற சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாளைக்கு ரச்சிதாவிற்கு பேசப்பட்ட சம்பளம் ரூ. 28,000. அவர் 91 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தாக்கு பிடித்ததற்காக அவருக்கு வழங்கப்பட இருக்கும் சம்பளம் ரூ. 26 லட்சம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.