Biggboss Tamil 5 | இவர்தான் வெளியேறினாரா? பக்பக்குன்னு அடிச்சுக்குதுல்ல..பிக்பாஸ் காதல் கேமும், எலிமினேஷனும்..
நேற்று செம்ம ஹைப்பர் டென்ஷன் மோடில் பாதுகாப்பற்ற ஸோனில் இருக்கும் 5 பேரை கமல் அறிவித்தார்.
![Biggboss Tamil 5 | இவர்தான் வெளியேறினாரா? பக்பக்குன்னு அடிச்சுக்குதுல்ல..பிக்பாஸ் காதல் கேமும், எலிமினேஷனும்.. Nadiya Chang is out Claims Biggboss first elimination today episode 15 Biggboss tamil season 5 Day 16 Biggboss Tamil 5 | இவர்தான் வெளியேறினாரா? பக்பக்குன்னு அடிச்சுக்குதுல்ல..பிக்பாஸ் காதல் கேமும், எலிமினேஷனும்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/17/cedf2e85c10cad71f8913b2f6deffcf9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நேற்றைய 14-வது எபிசோடில் யார் யாரெல்லாம் பாதுகாப்பற்ற ஸோனில் இருக்கிறார்கள் என்பது தெளிவானது. வருண், அபிஷேக், மதுமிதா, நாடியா, சின்னப்பொண்ணு ஆகிய ஐவரில் யாரோ ஒருவர் வெளியேறுவதுதான் இன்றைய எபிசோடில் காண்பிக்கப்படப்போகிறது. ஆனால் வழக்கம்போலவே இந்த முறையும் எலிமினேட் ஆனது யார் என்பது மக்களுக்கு முன்கூட்டியே கிட்டத்தட்ட தெரிந்துவிட்டது. நாடியா சங்தான் வெளியேறி இருப்பதாக தகவல்கள் ஏற்கெனவே வைரலாகிறது.
View this post on Instagram
நேற்றைய எபிசோடில், அபிஷேக்கிடம் எதையோ ரகசியமாக பேசிக்கொண்டிருந்தார் பாவனி. உடனே அபிஷேக் சத்தமான குரலில், “இன்னும் நான் விளையாடவே ஆரம்பிக்கல. நான் ஆரம்பிச்சா ஒருத்தனையும் விடமாட்டேன். வெளியேத்திடுவேன்” என்கிறார். அடுத்த நாள், மதுமிதாவிடம், ”அக்கறையாதான் இருக்கான், ஆனா அது என் மனச டிஸ்டர்ப் பண்ணுது. இது கேம் ப்ளானா இருக்கலாமோ” என்கிறார் பாவனி. அந்த நேரத்தில் கேமரா அபினயைக் காட்டுகிறது. (அபினய் குடும்பஸ்தன் ப்பா ஏய்). அதன்பிறகு, அபினயைக் கூப்பிட்டு நான் உன்னை அண்ணன் மாதிரிதான் நினைக்கிறேன் என பாவனி சொல்கிறார். உடனே அபினய் அதில் என்ன சந்தேகம், நீங்க தேவையில்லாம யோசிக்க தேவையில்ல என சந்தேகத்தைக் க்ளியர் செய்தார். கமல் லிவிங் ரூமைப் பார்த்துப் பேச ஆரம்பித்தார். சின்னப்பொண்ணு, தாமரைச்செல்விக்கு இடையில் வந்த கிராமியமா, நாடகமா சண்டையைப் பற்றிப் பேசினார். சின்னப்பொண்ணு ஒன்றுமே நடக்காதது போல சமாளித்தார். போட்டியில் கடைசி வரை விளையாடுவதுதான் பக்குவத்தின் வெளிப்பாடு என சின்னப்பொண்ணும், அபினய்க்கும் குட்டு வைத்தார் கமல். மேலும் பிக்பாஸ் செய்திகளைப் படிக்க..
Biggboss Tamil 5 | ”ஃப்ரெண்டுனு சொல்றான். ஆனா அது என் மனச தொந்தரவு பண்ணுது” : பிக்பாஸ் ஆரம்பிக்கும் காதல் கேம்..#BiggbossTamil5 #PavaniReddy #Abhinayhttps://t.co/u8LS1X1szV
— ABP Nadu (@abpnadu) October 17, 2021
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)