Bigg Boss Season 7 : இத்தனை கோடி கொடுத்தால் டபுள் ஒகே... பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு கமல்ஹாசன் வைத்த செக்...
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வரும் ஜூலை மாதம் துவங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல் சம்பளமாக எவ்வளவு தொகை பெறுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரை ரசிகர்களின் பேராதரவை பெற்ற ஒரு நிகழ்ச்சி பிக் பாஸ். ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி பின்னர் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்க கன்னட நிகழ்ச்சியை கிச்சா சுதீப்பும், தெலுங்கில் நாகார்ஜுனாவும், மலையாளத்தில் மோகன்லாலும் தொகுத்து வழங்கி வருகிறார்கள். தமிழில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த 6 சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்தது.
பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் :
சில மாதங்களுக்கு முன்னர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்தது. பிக் பாஸ் 6வது சீசனில் ஜிபி முத்து, திருநங்கை ஷிவின் கணேசன், அசல் கோலார், நிவாஷினி, குயின்ஸி, சாந்தி, விஜே மகேஸ்வரி, அஸிம், ராபர்ட் மாஸ்டர், ஏடிகே, அஸிம், ஜனனி, கதிரவன் ,மணிகண்டா , ரச்சிதா,நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், டிக்டாக் பிரபலம் தனலட்சுமி,ராம் ராமசாமி,விக்ரமன் மற்றும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக மைனா நந்தினி ஆகியோர் பங்கேற்றனர். அந்த சீசன் டைட்டில் வின்னர் பட்டத்தை அசீம் கைப்பற்றினார். விக்ரமன் 2வது இடத்தையும் ஷிவின் 3வது இடத்தையும் கைப்பற்றினர்.
பிக் பாஸ் சீசன் 7 கமல் சம்பளம் :
அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 7 பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் ஜூலை மாதம் துவங்கப்படும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. அதற்காக அவருக்கு சம்பளமாக எவ்வளவு தொகை பெறுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுவரையில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கமல்ஹாசன் 75 கோடி ரூபாய் பெற்று வந்தார் என்றும் இந்த 7 வது சீசனை தொகுத்து வழங்க 100 கோடி ரூபாய் பேசப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது கமல்ஹாசன் 130 கோடி வேண்டும் என டிமாண்ட் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 130 கோடி கொடுப்பதாக இருந்தால் சம்மதம் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு 130 கோடி ரூபாய் சம்பளமா என வாய் பிளந்து உள்ளனர் பார்வையாளர்கள். இந்த சீசன் துவங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் போட்டியாளர்கள் பற்றியும், இந்த சீசன் எந்த தேதியில் துவங்க உள்ளது என்ற தகவலும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.