மேலும் அறிய
Advertisement
Bigg Boss 7 Tamil: டிஆர்பில் கலக்கும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி - மகிழ்ச்சியின் உச்சத்தில் விஜய் தொலைக்காட்சி
Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் சீசன் 7 டிஆர்பி-யில் சாதனை படைத்து வருவதால் விஜய் தொலைக்காட்சி உற்சாகத்தில் உள்ளது.
Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் சீசன் 7 டிஆர்பி-யில் சாதனை படைத்து வருவதால் விஜய் தொலைக்காட்சி உற்சாகத்தில் உள்ளது.
கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் வழகத்திற்கு மாறாக பிக்பாஸ் ஹவுஸ், ஸ்மால் ஹவுஸ் என இரு வீடுகள் பிரிக்கப்பட்டு போட்டியாளர்களும் இரு வீடுகளில் தனியாக பிரித்து வைக்கப்பட்டனர். ஸ்மால் ஹவுசில் இருப்பவர்கள் மட்டும் தான் சமைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
பிக்பாஸ் போட்டி தொடங்கிய முதல் வாரத்திலேயே அடிப்படை கல்வி குறித்த விவகாரத்தில் விசித்ராவுக்கும், ஜோவிகாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. விசித்ராவை எதிர்த்து ஜோவிகா பேசியது இணையத்தில் டிரெண்டானது. அடுத்ததாக பிரதீப்க்கு எதிராக பெண் போட்டியாளர்கள் உரிமைக்குரல் தூக்கி ரெட் கார்டு கொடுத்தது, விசித்ரா பகிர்ந்த பாலியல் புகார், வினுஷாவை நிக்சன் உருவகேலி செய்தது என ஒவ்வொரு சர்ச்சையாக பிக்பாஸ் வீட்டில் ஏற்பட்டு வைரலானது. சமூக வலைதளங்களிலும் பிக்பாஸ் சீசன் 7 டிரெண்டானது.
பிக்பாஸ்க்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட 45வது வாரத்தில் விஜய் தொலைக்காட்சி டிஆர்பியில் 6.7 புள்ளிகளாக இருந்தது. அடுத்த வாரத்தில் பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்ட விவகாரத்தில் விசித்ரா, மாயா கூட்டணி மோதிக் கொண்டதில் 46வது வாரத்தில் விஜய் டிவி டிஆர்பி புள்ளிகள் 6.9 ஆக உயர்ந்தது. இதற்கு முன்னதாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 6 சீசன்களை காட்டிலும் இந்த 7வது சீசனில் டிஆர்பி அதிகமாக இருப்பதால் விஜய் டிவி உற்சாகத்தில் உள்ளது.
இதற்கிடையே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிரதீப் ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாக முகத்தில் காயங்களுடன் புகைப்படத்தை வெளியிட்டு அனிதா அதிர்ச்சி அளித்தார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு ஆதரவாக அவர்களது வீட்டார்களும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு பிக்பாஸ் போட்டியை மேலும் டிரெண்டாக்கினர். வனிதா விஜயக்குமார் தினமும் பிக்பாஸ் போட்டியை விமர்சித்து கருத்து பதிவிட்டு வந்தார். இதேபோல் ஐஷூ தந்தை, விசித்ராவின் கணவர், விக்ரமின் தங்கை என ஒவ்வொருவரும் பிக்பாஸ் போட்டி குறித்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர்.
மேலும் படிக்க: Entertainment Headlines: ஞானவேலை திட்டிய கரு பழனியப்பன்.. டிசம்பரில் ரிலீசாகும் படங்கள்.. இன்றைய சினிமா செய்திகள்..!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion