மேலும் அறிய

Paruthiveeran: 'ஞானவேலின் அயோக்கியத்தனம்’ .. பின்னணியில் சிவகுமார் குடும்பமா? - கரு.பழனியப்பன் சரமாரி கேள்வி..

ஞானவேலின் பின்னால் திரு.சிவக்குமாரும் அவர் பிள்ளைகளும் இருப்பார்களோ என்று சந்தேகத்தின் நிழல் விழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இயக்குநர் அமீரை தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு இயக்குநர் கரு.பழனியப்பன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

கடந்த 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் பருத்தி வீரன் படம் வெளியானது. இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். இந்த படத்தின் போது பல பிரச்சினைகள் நடந்ததாக 16 ஆண்டுகளுக்குப் பிறகு தகவல்கள் வெளியானது. இதனை அமீரும், ஞானவேல்ராஜாவும் தங்களுடைய நேர்காணல்களில் தெரிவித்தனர். குறிப்பாக ஞானவேல்ராஜா, இயக்குநர் அமீரை, திர்ய்டன் என தரக்குறைவாக விமர்சித்தார். இதனால் அவருக்கு கண்டனம் குவிந்து வருகிறது. 

அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரகனி, சுதா கொங்காரா, பொன்வண்ணன், கவிஞர் சினேகன் என பலரும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் கரு.பழனியப்பனும் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். 

அதில், “பருத்திவீரன் படம் பற்றியும் அமீர் பற்றியும் திரு ஞானவேல் பேசிய பிறகு அந்தப் படம் தொடர்புடைய சசிகுமார்  தயாரிப்பாளர் கணேஷ்ரகு சமுத்திரக்கனி பொன்வண்ணன் சுதா கொங்குரா  என ஒவ்வொருவராக அமீர் பக்கம் வந்து நிற்கிறார்கள்..சில நாட்களில் மற்றவர்களும் அமீர் பக்கம் நிற்பார்கள்...நிற்க.

இந்த அறிக்கை பருத்தி வீரன் படம் பற்றி அல்ல. ஞானவேலின் பொய்க் குற்றச்சாட்டு பற்றி.! பொன்வண்ணன் மொழியில் சொல்வதானால் ஞானவேலின் வக்கிரமான உடல் மொழி பற்றி.! எகத்தாளமாய் எப்படி ஒருவரால் இத்தனை பொய் சொல்ல முடிகிறது? அமீரை திருடன் என்றும் பொய் கணக்கு எழுதுபவர் என்றும் சொல்லுகிறாரே, நான் சொல்லுகிறேன் .

ஆறு ஆண்டு காலம் தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்தின் செயலாளராகவும், தென்னிந்திய திரைப்பட  சம்மேளனத்தின் தலைவராகவும், தயாரிப்பாளர் தொழிலாளர் இடையே சுமூகம் ஏற்பட உருவாக்கப்பட்ட ஊதியக்குழுவின் தலைமையிலும் பணியாற்றிய அமீரை பக்கத்தில் இருந்து பார்த்த நான் சொல்லுகிறேன்.இத்தனை ஆண்டுகளில் ஒரு வேளை உணவு கூட இந்த சங்கங்களின் பணத்தில் அமீர் உண்டதில்லை. அன்று உடனிருந்த நானும் ஜனநாதனுமே சாட்சி.

இந்நாள் முன்னாள் சங்க நிர்வாகிகளைக் கேட்டாலும் இதையே சொல்வார்கள் . பருத்திவீரன் தயாரிப்பில் நூறு முரண்பாடு இருக்கலாம். ஆனால் பொதுவெளியில் ஒரு இயக்குனரை திருடன் என்றும், ஒன்றும் தெரியாதவன் என்றும், என் காசில் தொழில் பழகியவன் என்றும் character assassination செய்வது அயோக்கியத்தனம்.  ஞானவேலின் எள்ளல் எகத்தாள திமிர் பேட்டியில்,
நானும் கார்த்தியும் பருத்தி வீரனுக்கு பிறகு நிறைய படம் எடுத்து விட்டோம் 25 படங்களை கடந்து விட்டோம் ஆனால் அமீர் ஓடாத குதிரை தோற்றுப் போனவர் என்கிறார்.

அமீர் உங்களிடம் பணத்தில் தோற்றுப் போய் இருக்கலாம் ஆனால் உங்களுடைய படம் என்று நீங்கள் சொல்லும் பருத்தி வீரனை காலமும் உடன் களத்தில் பணியாற்றியவர்களும் ரசிகர்களும் அமீரின் பருத்தி வீரன் அமீரின் பருத்திவீரன் என்று சொல்லச் சொல்ல அவர் ஜெயித்துக் கொண்டிருக்கிறார் என்று பொருள். பருத்திவீரன் படத்தின் உயரத்தைத் தொட  ஒவ்வொரு படமாக எடுத்து எடுத்து ஞானவேலும் அவரைச் சார்ந்தவர்களும் இன்று வரை தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள். காலம் அப்படித்தான் கணக்கில் வைத்துக் கொள்ளும்.

இப்படி பேச ஞானவேலுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது? என்று கேட்டிருந்தார் சமுத்திரக்கனி. இந்தக்கேள்வி எழும்போதே ஞானவேலின் பின்னால் திரு.சிவக்குமாரும் அவர் பிள்ளைகளும் இருப்பார்களோ என்று சந்தேகத்தின் நிழல் விழுவதைத் தவிர்க்க முடியவில்லை. நூறு குறள்கள் படித்த திரு.சிவக்குமார் தன் மகனுக்கு உலகத் தரத்தில் மாபெரும் வெற்றி படத்தைக் கொடுத்து திரை உலகில் ராஜபாட்டை அமைத்துக் கொடுத்த இயக்குனர் அமீருக்கு, திரு சிவக்குமாரும் அவரைச் சார்ந்தவர்களும் திருப்பிக் கொடுத்தது என்ன? 18 ஆண்டுகால மன உளைச்சலும் திருட்டு பட்டமுமா??

நூறு குறள்கள் படித்த திரு.சிவக்குமார், 
"அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை "
என்ற குறளையும் படித்து இருப்பார்.
வள்ளுவர் வாக்கு பொய்க்காது என்று அறிந்த அவர்,
ஞானவேலை பொதுவெளியில் இயக்குனர் அமீரிடம் மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும் .
திரு.சிவக்குமார் சொல்லுவார் என்று நம்புகிறேன் .!" என தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
ABP Premium

வீடியோ

Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்.! திமுக அமைச்சர்களை தூக்க லிஸ்ட் போட்ட எடப்பாடி- நடப்பது என்ன.?
அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்.! திமுக அமைச்சர்களை தூக்க லிஸ்ட் போட்ட எடப்பாடி- நடப்பது என்ன.?
Mahindra XUV 7XO Vs Rivals: போட்டியை சமாளிக்குமா XUV 7XO? அல்கசார், ஹெக்டருடன் மஹிந்த்ரா 7 சீட்டரின் முழு கம்பேரிசன்
Mahindra XUV 7XO Vs Rivals: போட்டியை சமாளிக்குமா XUV 7XO? அல்கசார், ஹெக்டருடன் மஹிந்த்ரா 7 சீட்டரின் முழு கம்பேரிசன்
Maduro's Son Vs America: “பழிதீர்ப்போம்“; அமெரிக்காவிற்கு எச்சரிக்கை; வெனிசுலா மக்களை வீதிக்கு அழைக்கும் மதுரோ மகன்
“பழிதீர்ப்போம்“; அமெரிக்காவிற்கு எச்சரிக்கை; வெனிசுலா மக்களை வீதிக்கு அழைக்கும் மதுரோ மகன்
Bullet 350, Classic 350 பிரியர்களுக்கு ஷாக்; விலையை உயர்த்திய ராயல் என்ஃபீல்டு; இப்போ எவ்வளவு.?
Bullet 350, Classic 350 பிரியர்களுக்கு ஷாக்; விலையை உயர்த்திய ராயல் என்ஃபீல்டு; இப்போ எவ்வளவு.?
Embed widget