Biggboss Tamil 5 | தடிமாடு நிரூப்.. அவன் சட்டையை போத்திக்கிட்டுத்தான் படுக்கணும் - வம்புக்கு வரும் இமான், மதுமிதா
மதுமிதா என வருண் கூப்பிட்டதும், என்ன என்று கேட்டார் மதுமிதா. என் உடுப்பை எடுத்தீங்களா என கேட்டார் வருண்.
Biggboss Tamil 5 Episode 16
விஜய் டிவி பிக்பாஸ் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இன்று எபிசோட் 16-இல், மதுமிதா என வருண் கூப்பிட்டதும், என்ன என்று கேட்டார் மதுமிதா. என் உடுப்பை எடுத்தீங்களா என கேட்டார் வருண். இல்லையே நான் எடுக்கல. அந்த தடிமாடு நிரூப் கிட்ட கேளுங்க என்றார். அதற்கு இமான், வருண் உடுப்பையாவது போடலாம். நிரூப்போட உடுப்பை போத்திக்கலாம் என்றார். ரைட்டு சைத்தான் சைக்கிள்ல வருது.
உன் மேல எனக்கு இருக்குற அன்பு மனசுல இருந்து வருது. சும்மா வரல என பாவனியிடம் கதை பேசிக்கொண்டிருந்தார் அபிஷேக். வருணிடம் போய், இனிமே நிறைய பேசு. ஏதாவது பண்ணித்தொலை. இதை முன்னாடியே சொல்லணும்னு இருந்தேன். ஆனா தப்பாகிடுமோன்னு அமைதியா இருந்தேன் என்றார் அக்ஷரா. ப்ரியங்கா மேல் செம்ம காட்டத்தில் இருக்கும் அக்ஷரா, “ராஜு கதையையே கேட்டுக்கிட்டு இருந்தா உன் கதையை எப்படி சொல்லமுடியும்” எனச் சொன்னதாக வருணிடம் புலம்பிக்கொண்டிருந்தார்.
View this post on Instagram
விதிமுறைகளை சரியாக கடைபிடிப்பவர்கள் இமான், ராஜு, இசைவாணி, பாவனி, சிபி என அறிவித்தார் பிக்பாஸ். அவர்களே இந்த வார தலைவர் நாமினேஷனிலும் கலந்துகொள்ளலாம் என டாஸ்க்கை அறிவித்தார் பிக்பாஸ். ”என்னா ஃபீலிங்” என்பதுதான் டாஸ்க். நாமினேஷனில் இருப்பவர்களின் உணர்வுகளை வெளிக்கொணரவேண்டும் என்பதுதான் டாஸ்க்.
இமான் உடனே சிரித்துவிட்டார். ராஜு ஏச்சுக்களுக்கும், காமெடிகளுக்கும் தாக்குப் பிடித்தார். சிபியும் அசையாமல் தீம் பார்க் முன்பு நிற்கும் காவலனைப்போல நின்றுகொண்டிருந்தார். பாவனியும் அடமாக நின்றார். இசைவாணியிடம் போய், அவரின் வறுமையையும், துணி வாங்க முடியாமல் இருந்ததையும் சொல்லி உணர்வை வெளிக்காட்டவைக்க அபிஷேக் முயற்சி செய்துகொண்டிருந்தார். இடைமறித்த இமான் அண்ணாச்சி, “தேவையில்லாமல் தனிப்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேசி இசையை காயப்படுத்தவேண்டாம். தனிப்பட்ட விஷயங்களைச் சொல்லி அப்படியான விளையாட்டு தேவையில்லை” என்றார். சண்டை மூண்டது. டாஸ்க்கையே ஓச்சு விட்டுட்டீங்க. இனிமே, எங்க இருந்து எமோஷன்ஸை வரவைக்கிறது. க்ரூப் சேக்குறீங்க நீங்கதான்னு அபிஷேக் இமானைத் திட்டிக்கொண்டிருந்தார். பின்னாலேயே வந்த அபினய், ப்ரியங்கா எல்லோரும் ஒன்றாக சேர்ந்து இமானை ரவுண்டு கட்ட ஆரம்பித்தார்கள். எல்லா வாரமும் ஜொலிக்கணும்னு நினைக்கிறீங்களா என்றார் அபிஷேக்.
கடைசியாக சிபி, பாவனி, ராஜு எல்லோரும் எமோஷன் ஆகாமல் நிற்கவே, மாலைகளைபோடும் டாஸ்கை கொடுத்து, அதில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் சிபி. அபிஷேக் எல்லாவற்றுக்கும் சத்தமாகப் பேசிக்கொண்டிருந்தார். இமான் குக்கிங் டீம் பற்றி ஏதோ சொல்லியபோது, அண்ணாச்சியின் மீது எரிச்சலைக் காட்டினார் பாவனி. இன்றைய கிட்டத்தட்ட எல்லோருமே அண்ணாச்சியை ரவுண்டு கட்டுகிறார்கள்.
பின்பு நாமினேஷனுக்காக எல்லோரும் கன்ஃபெஷன் ரூமில் ஆஜரானார்கள்...
நாமினேட் ஆனவர்கள், பாவனி, அபிஷேக், அக்ஷரா, சின்னப்பொண்ணு, ப்ரியங்கா, தாமரை, ஐய்க்கி, இசைவாணி, அபினய்.
பாவனி நீ என்கிட்ட பேசாம இருக்குறதே நல்லது. எனக்கு நீ பேசுற தமிழ் புரியல என்றார் ராஜு.