Bigg Boss 5 Tamil: ‛உன்னால எனக்கு பி.பி ஏறிடிச்சுடா’ - நிரூப் அப்பாவின் குரூப் அட்வைஸ்!
பிக் பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. டாப் 10 போட்டியாளர்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து அவர்களை சந்திக்கும் நேரம் இது.
Bigg Boss 5 Tamil Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரியை, அபிஷேக், இமானை அடுத்து டிசம்பர் 19-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் அபினய் எலிமினேட்டாகி வெளியேறினார்.
இந்நிலையில், இந்த வாரத்தின் முதல் நாளன்று தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி நடைபெற்றது. இதில், இந்த வாரத்தின் தலைவராக தாமரைச்செல்வி நியமிக்கப்பட்டார். அதனை அடுத்து, பிக் பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. டாப் 10 போட்டியாளர்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து அவர்களை சந்திக்கும் நேரம் இது. அக்ஷராவின் அண்ணன், தாயார், சிபியின் மனைவி ஆகியோர் நேற்றைய எபிசோடில் வந்த நிலையில், இன்று நிரூப்பின் அப்பா வீட்டிற்குள் சென்றிருக்கிறார். சிபியின் அப்பாவைப் போல நிரூப்பின் அப்பாவும் ஹவுஸ்மேட்ஸூடன் ஜோவியலாக பேசி பழகுவது போன்ற ப்ரொமோ வெளியாகியுள்ளது. எது எப்படியோ, ஃப்ரீஸ் டாஸ்க் என்றாலே, கண்ணீரும், சந்தோஷமும், பாசமும், அன்பும், கோவமும் என எல்லாம் கலந்ததாகவே இருக்கும்!
ப்ரொமோ:1
#Day80 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/zeVfJO1Vyh
— Vijay Television (@vijaytelevision) December 22, 2021
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்