Bigg Boss OTT Salary: அல்டிமேட் போட்டியாளர்களுக்கு அல்டிமேட்டான சம்பளம்..! வெளியான புதிய தகவல் !
Bigg Boss OTT Contestants Salary Per Day: BiggBossUltimate க்குள் செல்லும் பிரபலங்கள் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் தமிழ் 5 நிகழ்ச்சி கடந்த வாரம் முடிவடைந்த நிலையில், பிக்பாஸ் தயாரிப்பாளர்கள் புது முயற்சியாக பிக்பாஸுக்கென்று பிரத்யேக OTT தளத்தை தொடங்கி உள்ளனர். 13 போட்டியாளர்களுடன் 42 நாட்களுக்கு தொகுத்து வழங்கும் வகையில், இந்த நிகழ்ச்சியை மறுவடிவமைக்கும் பணியில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய நிகழ்ச்சியில் பிக்பாஸில் டைட்டில் வெற்றியாளர்களைத் தவிர அனைத்து பிக்பாஸ் சீசன் போட்டியாளர்களும் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் போன்று பிக்பாஸுக்கென்று பிரத்யேக ஓடிடி தளம் வெளியிடப்பட்டது. பிக் பாஸ் அல்டிமேட் 24x7 பிக் பாஸ் தமிழ் OTT என்னும் பெயரில் இதற்கான லோகோவை சிவகார்த்திகேயன் இறுதி போட்டியன்று வெளியிட்டார்.
View this post on Instagram
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது முதல் OTT பிரத்தியேகமான பிக்பாஸ் தமிழ் சீசனை(இன்று) ஜனவரி 30 முதல் 24x7 ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு முதல், மிகப்பெரிய OTT அறிமுகத்துடன்,கமல்ஹாசன் BiggBossUltimate-ஐயும் தொகுத்து வழங்கவுள்ளார் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில், BiggBossUltimate க்குள் செல்லும் நபர்கள் குறித்து விஜய் டிவி ப்ரோமோ மூலம் அறிவித்து வருகிறது. அதன்படி, பிக்பாஸ் அல்டிமேட்டின் முதல் போட்டியாளராக சினேகன் அறிவிக்கப்பட்டு, அவரைத்தொடர்ந்து, ஜூலி, வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, அபிராமி, தாடி பாலாஜி, அனிதா சம்பத் என 6 பேர் வீட்டிற்குள் வருகிறார்கள் என்று தகவல் தெரிவித்தது. மேலும், கடந்த 5 வது சீசனில் பங்கேற்ற ஸ்ருதி, பாலா,தாமரை, ரேகா, அனிதா சம்பத், ஐஸ்வர்யா தத்தா,சாரிக் ஆகியோர் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, நடிகை ஓவியா பங்கேற்பதாக தகவல் இருந்தநிலையில் கடைசி நேரத்தில் மறுத்து விட்டதாகவும் தெரிகிறது.
தற்போது, BiggBossUltimate க்குள் செல்லும் பிரபலங்கள் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில், பாடலாசிரியர் சினேகன் மற்றும் நடிகை வனிதாவிற்கு நாள் ஒன்றுக்கு 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் சம்பளம் எனவும், காமெடி நடிகர் தாடி பாலாஜிக்கு நாளொன்றுக்கு 30 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை என்றும் கூறப்படுகிறது.
அதேபோல், ஜல்லிக்கட்டு போராட்ட புகழ் ஜூலிக்கு 30 ஆயிரம் சம்பளம் எனவும், மீதமுள்ள போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது வழங்கிய அதே சம்பளம் வழங்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கவிருக்கிறது. இதுகுறித்த ப்ரோமோவை நேற்று வெளியானது. இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்