Bigg Boss Tamil :எனக்கு நீ உனக்கு நான்...பிக்பாஸ் மெய்யழகன்களாக மாறிய விஜே பாருவும் வாட்டர்மெலன்ஸ் ஸ்டாரும்
Bigg Boss Tamil 9 : இந்த சீசனில் விஜே பார்வதி மற்றும் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் கூட்டணி பிக்பாஸ் பார்வையாளர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று வருகிறது

பிக்பாஸ் தமிழின் 9 ஆவது சீசனின் முதல் வாரம் பரபரப்பாக நடந்து வருகிறது. முதல் நாளில் சிரித்த முகத்தோடு அறிமுகமாகி ஆட்டம்போட்ட போட்டியாளர்கள் அடுத்தடுத்த நாட்களில் இரு துருவங்களாக பிரிந்து நிற்கிறார்கள். இதில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரை மற்ற போட்டியாளர்களுக்கு பிடிக்காவிட்டாலும் விஜே பாரு அவருக்கு தொடர்ந்து ஆதரவாக இருந்து வருகிறார். தற்போது விஜே பாரு மற்றும் மற்ற பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸுடன் சண்டை போட்டுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக வாட்டர்மெலன் ஸ்டார் இருந்து வருகிறார்
ராஜினாமா செய்த விஜே பாரு
பிக்பாஸ் போட்டியாளர்களின் மத்தியில் ஓரளவிற்கு பிரபலமானவர் விஜே பார்வதி. மற்ற போட்டியாளர்களிடயே உரசல் ஏற்பட்டாலும் முடிந்த அளவிற்கு அனைத்து போட்டியாளர்களுடனும் சகஜமாக பழகி வந்தார் விஜே பாரு . ஆனால் அடுத்தடுத்த நாட்களில் அவருக்கு சுபிக்ஷா மற்றும் பிற போட்டியாளர்களுடன் மோதல் வலுத்து வருகிறது. முன்னதாக சுபிக்ஷா தன்னிடம் வேலை சொன்ன விதம் தனக்கு பிடிக்கவில்லை என்பதால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் பாரு. சூப்பர் டீலக்ஸ் பிரிவில் உள்ள போட்டியாளர்களின் அறையை சுத்தம் செய்ய சொன்னபோது கடுப்பான விஜே பார்வதி தனது சுத்தம் செய்யும் பொறுப்பை ராஜினாமா செய்வதாக சொல்லி ஒதுங்கிக் கொண்டார். இதனால் மற்ற போட்டியாளர்கள் விஜே பாருவைப் பற்றி பிக்பாஸிடம் புகாரளித்துள்ளார்கள்
விஜே பார்வதி வாட்டர்மெலன் ஸ்டார் ஜோடி
முன்பு வாட்டர்மெலஸ் ஸ்டார் மற்ற போட்டியாளர்களுடன் சண்டைப் போட்டபோது அவருக்கு ஆதரவாக விஜே பாரு இருந்து வந்தார். மற்றவர்கள் எல்லாம் திவாகரை கடுமையாக டீல் செய்தபோது விஜே பாரு அவரை மிகவும் சாதாரணமாக டீல் செய்தார் . மேலும் இருவரும் சேர்ந்து பாட்டுக்கு நடனமாடுவது , நள்ளிரவில் மற்ற போட்டியாளர்களைப் பற்றி புரளி பேசுவது என பல சேட்டைகள் செய்து வந்தார்கள். இந்த ஜோடியை வைத்து ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பல எடிட்களை செய்து வெளியிட்டு ரசித்து வருகிறார்கள்
அந்த வகையில் தற்போது விஜே பாருவுக்கு எதிராக சூப்பர் டீலக்ஸ் ஹவுஸ்மேட்ஸ் செயல்பட்டு வரும் நிலையில் திவாகர் அவருக்கு ஆதரவாக இருந்து வருகிறார். பாருவைப் பற்றி மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கேட்டுவந்து சொல்வது . அவருக்கு உடலுக்கு முடியவில்லை என்றால் உதவி செய்வது என பார்வையாளர்கள் மனதை கவர்ந்துள்ளார் வாட்டர்மெலன்ஸ் ஸ்டார் திவாகர். இவர்களிடையே இருக்கும் கெமிஸ்ட்ரியை பார்த்தால் மெய்யழகன் படத்தில் வரும் அரவிந்த் சாமி கார்த்தி மாதிரி உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.





















