Bigg Boss FJ: எஃப்ஜே-வின் உண்மையான பெயர் இதுதான்.. பிக்பாஸ் ரசிகர்களே இதைப் படிங்க!
BiggBoss 9: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர் எஃப்ஜே-வின் முழுப்பெயர் என்னவென்று தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ மிகவும் பிரபலமான நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சபரி, கானா வினோத், எஃப்ஜே, வியானா, பார்வதி, ப்ரஜன் ஆகியோர் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.
எஃப்ஜே-வின் உண்மையான பெயர் என்ன?
இந்த நிகழ்ச்சி தொடங்கியது முதலே போட்டியாளராக உள்ளே இருப்பவர் எஃப்ஜே. இவர் பிக்பாஸ் வீட்டின் உள்ளே நுழைந்தபோது இவரிடம் விஜய் சேதுபதி இவரது பெயர் என்னவென்று கேட்பார். அதற்கு அவர் இந்த சீசன் முடியும்போது சொல்கிறேன் என்று கூறுவார்.
இவரது உண்மையான பெயர் என்னவென்று தற்போது தெரியவந்துள்ளது. இவரது முழு பெயர் பெட்ரிக் ஜான். இதையே சுருக்கி எஃப்ஜே என வைத்துக்கொண்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்தவர். இந்த சீசன் தொடங்கியது முதலே சர்ச்சைகளும், ஆதரவுகளும் இவர் மீது இருந்து வந்தாலும் இவருடைய ஆதரவாளர்களின் வாக்குகளால் இவர் போட்டியில் நீடித்து வருகிறார்.
பட்டத்தை வெல்லப் போட்டி?
வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் இருந்தபோது அவருடனான வாக்குவாதம், பிரஜனுடனான வாக்குவாதம், ஆதிரையுடனான நெருக்கமான நட்பு என தொடர்ந்து பேசுபொருளாகவே இருந்து வருகிறார் எஃப்ஜே. சுமார் 60 நாட்களுக்கும் மேலாக இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் எஃப்ஜே பட்டத்தை வெல்லும் முனைப்புடன் இருக்கிறார்.
அவருடன் விக்கல் விக்ரம்ஸ், வியானா, விஜே பார்வதி, கம்ருதின், பிரஜன், சான்ட்ரா, கானா வினோத், திவ்யா, அரோரா, ஆதிரை என பல போட்டியாளர்கள் உள்ளனர். 60 நாட்கள் ஆகியுள்ள நிலையில், அடுத்தடுத்த நாட்களில் இன்னும் பல போட்டியாளர்கள் வெளியேறுவார்கள்.
விமர்சனங்கள்:
முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த சீசன் போட்டியாளர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் ரசிகர்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதிகளவு இரட்டை அர்த்த வசனங்கள் ஆகியவை போட்டியாளர்களால் பேசப்படுவதாகவும் குற்றச்சாட்டை ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர்.





















