(Source: ECI | ABP NEWS)
Bigg Boss Tamil : அதிகாரம் கிடைத்ததும் திமிர் காட்டிய ரம்யா ஜோ...பிக்பாஸ் வீட்டின் வில்லியாக மாறுகிறாரா
Bigg Boss Tamil 9 : சூப்பர் டீலக்ஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் ரம்யா ஜோவின் நடத்தை பலரிடம் விமர்சனங்களை சந்தித்து வருகிறது

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இல் நீல நிற பேட்ஜ் தேர்சு செய்தவர்களுக்கு சூப்பர் டீலக்ஸ் என்கிற சிறப்பு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் இருப்பவர்களுக்கு மற்ற போட்டியாளர்களை வேலை வாங்கும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சூப்பர் டீலக்ஸ் போட்டியாளர்கள் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்றபடி மற்ற போட்டியாளர்களை வேலை சொல்லி வருவதால் போட்டியாளர்களிடம் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ரம்யா ஜோவின் செயல்கள் சமூக வலைதளத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது
அதிகாரம் கிடைத்ததும் திமிரை காட்டிய ரம்யா ஜோ
இந்த ஆண்டு பிக்பாஸ் வீட்டில் சென்ற போட்டியாளர்களில் மேடை நடன கலைஞரான ரம்யா ஜோ பலரது கவனத்தை ஈர்த்த போட்டியாளர்களில் ஒருவர். சிறு வயது முதல் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து நடன கலைஞராக பல அவமானங்களை எதிர்கொண்டு வந்தவர் என்பதால் ரம்யா ஜோவுக்கு முதல் நாள் முதலே பார்வையாளர்களிடம் ஆதரவு கிடைத்தது. நீல நிற பேட்ஜை தேர்வு செய்து சூப்பர் டீலக்ஸ் வீட்டிற்குள் சென்றார் ரம்யா. சூப்பர் டீலக்ஸ் போட்டியாளர்களுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டது முதல் அதை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என ரம்யா திட்டமிட்டு வருகிறார்.
வாட்டர்மெலன் ஸ்டார் மற்றும் வி.ஜே பார்வதியை அழைத்து தங்களது அறையை சுத்தம் செய்ய சொன்ன ரம்யா அவர்களை கோபப்படுத்தும் விதமாக செயல்களில் ஈடுபட்டார். பெட்ஷீட் மடித்துக்கொண்டு இருந்த வாட்டர்மெலன் ஸ்டாரை இன்னொருவேலை செய்ய சொன்னார். இருங்க இந்த வேலையை முடித்துவிட்டு வருகிறேன் என வாட்டர்மெலன் ஸ்டார் சொல்ல ' அதெல்லாம் நீங்க சொல்லக்கூடாது சொன்னால் சொன்னதை மட்டும் செய்ய வேண்டும் ' என்று கடுப்படித்தார். விளையாட்டாக வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் சொன்ன Country Fruits என்கிற வார்த்தையை ஊதி பெரிதாக்கி அதை வைத்து சண்டையை உருவாக்கினார். இப்படி தனக்கு கிடைத்த அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்தி வருவதால் ரம்யா ஜோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் விமர்சிக்கத் தொடங்கியுள்ளார்கள்.
பிக்பாஸ் தமிழ் 9
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி துவங்கியது. இரண்டாவது ஆண்டாக விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த ஆண்டு வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் , அரோரா சின்க்ளேர் , ரம்யா ஜோ , பிரவீன் காந்தி , பிரவீன் , எஃப்.ஜே. விஜே பார்வதி , நந்தினி, வியானா , கெமி , கானா வினோத் , ஆதிரை , சுபிக்ஷா , அப்சரா சிஜே , விக்கல்ஸ் விக்ரம் , துஷார் , கனி திரு , சபரி , கமருதின் , அகோரி கலையரசன் ஆகிய 20 போட்டியாளர்கள் பெங்கேற்றுள்ளார்கள்.





















