மேலும் அறிய

Bigg Boss Tamil Love Story: லவ்வோ லவ்வோ.. ஓவியா முதல் பாவ்னி வரை.. பிக்பாஸ் கடந்து வந்த 5 காதல் கதைகள்!

Bigg Boss Tamil Love Story: நீச்சல் குளம், கார்டன் ஏரியா, ஜெயில், கன்ஃபஷன் ரூம், பெட்ரூம், புகைப்பிடிக்கும் இடம் என அனைத்து வசதிகளும் கொண்ட அந்த வீட்டின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 தொடங்கவுள்ள நிலையில் இதுவரை நடந்து முடிந்த 5 சீசன்களில் நிகழ்ந்த காதல் கதைகளை காணலாம். 

விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளது. இதுவரை ஒளிபரப்பான 5 சீசன்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்தாண்டு ஓடிடி தளத்திற்கென பிரத்யேகமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. பிக்பாஸ்  என்றாலே நினைவுக்கு வருவது பிரமாண்ட வீடு தான். 

View this post on Instagram
 
A post shared by Vijay Television (@vijaytelevision)

நீச்சல் குளம், கார்டன் ஏரியா, ஜெயில், கன்ஃபஷன் ரூம், பெட்ரூம், புகைப்பிடிக்கும் இடம் என அனைத்து வசதிகளும் கொண்ட அந்த வீட்டின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வீட்டைப் போலவே நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களில் பலரையும் இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியவில்லை என்றே சொல்லலாம். எப்படி சண்டை சச்சரவுக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் வீடு இருக்குமோ அந்த அளவுக்கு பாசம், காதல் என ஒரு எண்டெர்டயின்மெண்ட் நாடகம் பார்க்கும் அளவுக்கு காட்சிகள் இடம் பெறும். 

இது ஒரு ஸ்கிரிப்ட் ஷோ என சொல்லப்பட்டாலும் காதல் கூட ஏற்கனவே எழுதப்பட்ட கதைப்படியா இருக்கும் என்ற அளவுக்கு இருக்கும். நாம் இச்செய்தியில் பிக்பாஸ் முந்தைய 5 சீசன்களில் முளைத்த காதல் கதைகள் குறித்து காணலாம். 

Bigg Boss Tamil Love Story: லவ்வோ லவ்வோ.. ஓவியா முதல் பாவ்னி வரை.. பிக்பாஸ் கடந்து வந்த 5 காதல் கதைகள்!

பிக்பாஸ் சீசன்  1

பிக்பாஸ் முதல் சீசன் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த சீசன் எப்படி இருக்குமோ என எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு அல்டிமேட்டாக அமைந்து அடுத்தடுத்த சீசன் மீதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நடிகர் ஆரவ் - நடிகை ஓவியா நெருங்கி பழகினர். இது காதல் என ஓவியா நினைத்த தருணத்தில் அப்படியெல்லாம் இல்லை என ஆரவ் அந்நிகழ்ச்சிக்குப் பின்னும் நட்புடன் பழகினார். 

பிக்பாஸ் சீசன் 2 

பிக்பாஸ் இரண்டாவது சீசன் 2018 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இந்த சீசன் அதிகமாக இளம் நடிகர், நடிகைகளை போட்டியாளர்களாக களமிறக்கிய நிலையில், இதில் மஹத்- யாஷிகா நெருங்கி பழகியதை காதலிப்பதாக பலரும் கருதினர். ஆனால் தனக்கு வெளியே ஒரு காதலி இருப்பதாக கூறி ரசிகர்களை அதிர வைத்தார் மஹத். 

பிக்பாஸ் சீசன் 3

பிக்பாஸ் மூன்றாவது சீசன் 2019 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 6 ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இந்த சீசன் ரசிகர்களை கவர்ந்த சீசன்களில் ஒன்று. அதற்கு காரணம் கவின், தர்ஷன், லாஸ்லியா, சாண்டி, முகென், சாக்‌ஷி அகர்வால், ஷெரின், அபிராமி என கலர்ஃபுல்லான போட்டியாளர்களை களமிறக்கினர். இதில் கவின் - லாஸ்லியா இடையே காதல் மலர்ந்தது. ஆனால் நிகழ்ச்சியில் லாஸ்லியா அப்பா வந்து அறிவுரை வழங்கியது உள்ளிட்ட பல காரணங்களால் இந்த காதல் கைகூடாமலே போனது. 

பிக்பாஸ் சீசன் 4 

கொரோனா முதல் அலை ஊரடங்கு கட்டுப்பாடுகள் இந்த பிக்பாஸ் நடக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில் அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த சீசனில் பாலாஜி முருகதாஸ் - ஷிவானி, ஆஜித்- கேப்ரியல்லா இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டாலும் இவர்கள் யாவருமே அதனை உறுதிப்படுத்தவே இல்லை. 

பிக்பாஸ் சீசன் 5

கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக இந்த சீசனும் அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 16 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் முதலில் பங்கேற்ற நடிகை பாவ்னி, சக போட்டியாளரான அபிநய் தன் மீது காதல் கொண்டுள்ளதாக எண்ணினார். இதனை மறுத்த அவரோ அப்படி ஒரு எண்ணமே இல்லை என தெரிவித்தார். இதற்கிடையில் வைல்ட் கார்டு ரவுண்ட் மூலம் உள்ளே வந்த நடன இயக்குநர் அமீரோ பாவ்னி மீது காதல் கொண்டு அவரை கவரும் வகையிலான செயல்களை செய்து சமீபத்தில் பாவ்னியின் சம்மதத்தையும் பெற்றார். ஆகவே இந்த சீசனிலும் காதல் வசப்படப் போகும் ஜோடி யார் என்பது பார்வையாளர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Paamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Paamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Paamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Paamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Embed widget