மேலும் அறிய
Advertisement
Vanitha Vijayakumar: "விசித்ரா பொய்யானவர்” - விமர்சனங்களை வாரிக் கொட்டிய வனிதா விஜயகுமார்!
Bigg Boss 7Tamil Vanitha: மக்களின் விருப்பத்தின் பேர் விசித்ரா வெளியேற்றப்பட்டதாகவும், அதுதான் நியாயமானது என்றும் வனிதா விஜயகுமார் விமர்சித்துள்ளார்.
Bigg Boss 7Tamil Vanitha: விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு சில நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்று தெரிய உள்ளது. இந்த சீசனில் என்றும் இல்லாத அளவுக்கு 18 போட்டியாளர்களுடன், 5 வைல்டு கார்டு என்ட்ரி, இரண்டு வீடுகள், மிட் வீக் எவிக்ஷன், ரெட் கார்டு எலிமினேஷன் என முற்றுலும் மாறுபட்ட நிகழ்ச்சியாக பிக்பாஸ் இருந்தது.
பிக்பாஸ் சீசன் 7 முடிய உள்ள நிலையில் இறுதிக்கட்ட போட்டியாளர்களாக மாயா, அர்ச்சனா, பூர்ணிமா, விஷ்ணு, தினேஷ், மணி, விஜய் வர்மா உள்ளிட்டோர் உள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு ரூ.16 லட்சம் பணப்பெட்டியுடன் பூர்ணிமா வெளியேறிய நிலையில், நேற்று விசித்ரா எலிமினேட் செய்யப்பட்டார்.
ஆரம்பத்தில் சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும், தனது அனுபவம் மூலம் 95 நாட்களை விசித்ரா இப்போட்டியில் கடந்தார். மூத்த போட்டியாளராக இருந்த போதும், ஒவ்வொரு வாரம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனக்கான ஃபேன் பேஸ் வைத்திருந்த விசித்ரா, கடந்த வாரம் முழுவதும் தினேஷின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி விமர்சனத்துக்கு ஆளானார். அதுவும் விசித்ரா எலிமினேட் செய்யப்படுவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் விசித்ரா எலிமினேட் செய்யப்பட்டது குறித்து நடிகை வனிதா விஜயகுமார் விமர்சித்து பேசியுள்ளார். இது தொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், விசித்ரா வெளியேற்றம் பிக்பாஸ் நிகழ்ச்சி மீது நம்பிக்கை தந்திருப்பதாகக் கூறியுள்ளார். இத்தனை நாட்கள் வாங்கிய நல்ல பெயரை ஒரே வாரத்தில் தடம் மாறி விசித்ரா கெடுத்துக் கொண்டதாகவும், அவர் செய்த சில சம்பங்கள் முகம் சுளிக்க வைத்ததாகவும் கூறியுள்ளார். மேலும், மக்களின் விருப்பத்தின் பேர் விசித்ரா வெளியேற்றப்பட்டதாகவும், அதுதான் நியாயமானது என்றும் வனிதா விஜய்குமார் விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பூர்ணிமா பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறியது அவர் வாழ்வில் எடுத்த சரியான முடிவு என்று கூறியுள்ளார். அர்ச்சனா பற்றி பேசிய வனிதா, அர்ச்சனா தனக்கு ஒரு பிஆர் டீம் வைத்திருப்பாதாகவும், அவரே அர்ச்சனாவை நிகழ்ச்சியில் நன்றாக காட்டிக் கொள்ள வேலை பார்த்து வருவதாகவும் கூறியுள்ளார்.
மாயாவிற்கு வீட்டில் இருக்கும் முக்கால்வாசி பேர் ரசிகர்களாக இருப்பதாகவும், அவர்களில் தானும் ஒருவர் வனிதா கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Bigg Boss Vichitra: பிக்பாஸ் ஃபைனல்ஸ் மேடையை தவறவிட்ட விசித்ராவுக்கு இத்தனை லட்சங்கள் சம்பளமா?
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion