மேலும் அறிய
Advertisement
Bigg Boss 7 Tamil Archana: ’தண்டம்’ என திட்டிய விஷ்ணுவை கிழித்தெடுத்த அர்ச்சனா...!
Bigg Boss 7 Tamil Archana: பிக்பாஸ் புரோமோவில் அர்ச்சனாவும், விஷ்ணுவும் குழாயடி சண்டையாய் மல்லுக்கட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.
Bigg Boss 7 Tamil Promo: பிக்பாஸ் புரோமோவில் அர்ச்சனாவும், விஷ்ணுவும் குழாயடி சண்டையாய் மல்லுக்கட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 7 தொடங்கிய முதல் இருவாரங்களில் பெரிதாக வரவேற்பு இல்லை என்றாலும் 5 வைல்டு கார்டு என்ட்ரிக்கு பிறகு பிக்பாஸ் ஷோ சுவார்சியமாகியது. ஒவ்வொரு நாளும் போட்டியாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல், வாக்குவாதம் சமூக வலைதளங்களிலும் விவாத பொருளாகி பிக்பாஸ் நிகழ்ச்சியை டிரெண்டாக்கி வருகிறது.
கடந்த வாரம் பிராவோ மற்றும் அக்ஷன்யா வெளியேறிய நிலையில், இந்த வார கேப்டனாக நிக்சன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரங்களில் மாயா, அர்ச்சனா இடையே மோதல் வெடித்து விறு,விறுப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த வாரம் விஷ்ணு அர்ச்சனா இடையே மோதல் வெடித்துள்ளது. இன்றைய எபிசோடுக்கான புரோமோ வெளியாகியுள்ளது. அதில், விஷ்ணு மற்றும் அர்ச்சனா இடையே ஏற்படும் வாக்குவாதம் இந்த வாரத்திற்கு தரமான சம்பவம் இருப்பதாகவே கூறப்படுகிறது.
#Promo3 #Archana dealing clown #Vishnu in Left Hand 💥🔥#BiggBoss7 #BiggBoss7Tamil#BiggBossTamil7 #BiggBossTamil#BiggBossTamilSeason7 #Vichitra#VJArchana #Dinesh #Pradeep pic.twitter.com/MxAZlncbJp
— BiggBossTamil👀 (@BiggbosTamil) November 29, 2023
நேற்று வெளியான புரோமோவில், ”யு ஆர் சிம்ப்ளி வேஸ்ட். நீங்கள் தண்டம்” என்று அர்ச்சனாவை பார்த்து விஷ்ணு கூறுகிறார். அதற்கு டென்ஷனான அர்ச்சனா, குப்பை தொட்டியை எடுத்து நீதான் இது என விஷ்ணுவை பார்த்து காட்டியதுடன், போயா என கத்தினார். விடாமல் அர்ச்சனாவிடம் சண்டைக்கு சென்ற விஷ்ணு போயிட்டு பெட்ஷீட் போட்டுகிட்டு அழு என கத்தினார். அதற்கு பதிலளித்து சீறிய அர்ச்சனா, ”இனி நான் அழுதட்டனா அப்பறம் பாத்துக்கோ உனக்கே இவ்வளவு இருக்கும்போது எனக்கு எவ்வளவு இருக்கும்” என வில்லத்தனமாக சவால் விடுகிறார்.
#VJArchana Thug Life 🔥#BiggBossTamil7 #BiggBossTamil#BiggBoss7 #BiggBoss7Tamil#BiggBossTamilSeason7 #BiggBoss pic.twitter.com/ISaDn8kHZo
— BiggBossTamil👀 (@BiggbosTamil) November 29, 2023
இப்படி அர்ச்சனாவும், விஷ்ணுவை அடித்துக் கொள்ளாத குறையாய் சண்டையிடுவதை மற்ற போட்டியாளர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவரவர் வேலையை பார்த்து கொண்டிருந்தனர்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
சென்னை
தேர்தல் 2024
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion