![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bigg Boss Aishu: இது எங்க ஐஷூ இல்ல.. உண்மையானவங்கள தெரிஞ்சுக்கோ.. ஐஷூவின் அம்மா உருக்கமான பதிவு
Bigg Boss Aishu: ஐஷூ பிக்பாஸில் எண்ட்ரி தந்தது முதல் தொடர்ந்து அவருக்கு தன் இன்ஸ்டா பக்கத்தில் ஆதரவு தெரிவித்து வந்த ஷாஜி, கடந்த சில வாரங்களாக அமைதி காத்து வருகிறார்.
![Bigg Boss Aishu: இது எங்க ஐஷூ இல்ல.. உண்மையானவங்கள தெரிஞ்சுக்கோ.. ஐஷூவின் அம்மா உருக்கமான பதிவு Bigg Boss Season 7 Tamil Aishu mom post be your own and realise the real eyes Bigg Boss Aishu: இது எங்க ஐஷூ இல்ல.. உண்மையானவங்கள தெரிஞ்சுக்கோ.. ஐஷூவின் அம்மா உருக்கமான பதிவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/09/b2d593d57f5bd8e4328d9d66cf3b3fa81699522208775574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் ஐஷூவின் அம்மா ஷாஜியின் உருக்கமான பதிவு இணையத்தில் கவனமீர்த்து வருகிறது. பிக்பாஸில் கடந்த 5ஆவது சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரியாக பங்கேற்று விளையாடிய அமீரின் சகோதரி ஐஷூ இந்த சீசனின் பங்கேற்றுள்ளார்.
தற்போது பிக்பாஸ் வீட்டில் சுமார் 40 நாள்கள் எட்டியுள்ள நிலையில், முன்னதாக இண்டிவிஜூவல் கேம் விளையாடி வந்த ஐஷூ தற்போது அப்படி விளையாடாமல், சக போட்டியாளர் நிக்சன் உடன் இணைந்து விளையாடுவது பிக்பாஸ் வீட்டினர் மத்தியிலேயே விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
மேலும் நிக்ஸனுக்கு ஐஷூ மீது காதல் இருக்க, ஐஷூ அவருக்கு ஒப்புதல் வழங்காவிட்டாலும் அவர் நடவடிக்கைகள் நிக்ஸனுடன் காதலில் இருப்பது போல் தெரிவதாகவும், ஐஷூ தன்னிலை மறந்து கேம் விளையாடுவதாகவும் கடும் விமர்சனங்களை ரசிகர்கள் முன்வைத்து வருகிறார்கள்.
மேலும் பிரதீப் மீது ஐஷூ தெரிவித்த புகாரும் அதனைத் தொடர்ந்து அவர் ரெட் கார்டு பெற்று வெளியேறியதும் கடும் விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில், மாயா - பூர்ணிமா இருவருடனும் சேர்ந்து ஐஷூவும் கேங் சேர்ந்து விளையாடி பல ரசிகர்களின் வெறுப்பை கடந்த ஒரு வாரமாக சந்தித்துள்ளார்.
இதனிடையே ஐஷூவின் அம்மா ஷாஜி ஐஷூ பற்றி உருக்கமான பதிவினை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஐஷூ பிக்பாஸில் எண்ட்ரி தந்தது முதல் தொடர்ந்து அவருக்கு தன் இன்ஸ்டா பக்கத்தில் ஆதரவு தெரிவித்து வந்த ஷாஜி, கடந்த சில வாரங்களாக அமைதி காத்து வருகிறார். லவ் ட்ராக்கில் ஐஷூ சிக்கியது அவரது பெற்றோருக்கு பிடிக்கவில்லை எனக் கூறப்படும் நிலையில், கடந்த வாரம் அவர் ரவீணாவுடன் இணைந்து நடனமாடிய வீடியோவை மட்டும் பெருமையுடன் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் ஐஷூவுக்கு சமூக வலைதளங்களில் அதிகரித்திருக்கும் நெகட்டிவிட்டியை பார்த்து வருந்தி அவரது தாய் ஷாஜி பதிவிட்டுள்ளார்.
“எல்லாத்தையும் உணரு... நீ நீயாக இரு ஐஷூ.. நாங்கள் எங்க ஐஷூவை பார்க்க விரும்புகிறோம் இந்த ஐஷூவை இல்ல.. நீ உண்மையான கண்களை உண்மையான பொய்களை சீக்கிரம் உணருவாய் என நம்புகிறேன்” என தன் இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
ஷாஜியின் இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)