Bigg Boss 7: முதல் நாளே அதகளம்... ரவீனாவுக்கு ஆதரவாக பூர்ணிமாவுக்கு கட்டளையிட்ட கூல் சுரேஷ்!
Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கேப்டன் பதவிக்கான சண்டை முதல் நாளே தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
![Bigg Boss 7: முதல் நாளே அதகளம்... ரவீனாவுக்கு ஆதரவாக பூர்ணிமாவுக்கு கட்டளையிட்ட கூல் சுரேஷ்! bigg boss season 7 actor cool suresh support actress raveena and oppose youtuber poornima Bigg Boss 7: முதல் நாளே அதகளம்... ரவீனாவுக்கு ஆதரவாக பூர்ணிமாவுக்கு கட்டளையிட்ட கூல் சுரேஷ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/01/843b1ec0d43ca92c804d320e532185851696168616534102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று லட்சக்கணக்கான ரசிகர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர், இந்த நிகழ்ச்சியின் 6 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய நிலையில், 7வது சீசன் இன்று தொடங்கியது.
கேப்டன் பதவி:
கமல்ஹாசன் இரு வீடுகளையும் இரண்டு கெட்டப்புகளில் வந்து அறிமுகப்படுத்தி அசத்தினார். இந்த நிலையில், இந்த தொடரின் முதல் போட்டியாளராக பிரபல நடிகர் கூல் சுரேஷ் உள்ளே சென்றார். அவருக்கு அடுத்தபடியாக 2வது போட்டியாளராக பிரபல யூ டிபர் பூர்ணிமா உள்ளே வந்தார்.
இந்த முறை கூல் சுரேஷை உள்ளே வந்தபோதே, பிக்பாஸ் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்தது. அதாவது, இந்த சீசனின் முதல் ஆளாக உள்ளே வந்த கூல் சுரேசை கன்பெசன் அறைக்கு பிக்பாஸ் அறைக்கு அழைத்தது. அந்த அறைக்கு சென்ற கூல் சுரேஷிற்கு இந்த சீசனின் முதல் ஆளாக உள்ளே வந்ததால் கேப்டன் அங்கீகாரத்தை அளித்தது.
வாக்குவாதம்:
கேப்டன் அங்கீகாரத்தை அளித்த பிக்பாஸ் அத்துடன், அடுத்து வரும் போட்டியாளரிடம் கேப்டன் பதவியை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்றால் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கேப்டன் பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டது.
இதன்படி, உள்ளே வந்த பூர்ணிமாவிடம் பிக்பாஸின் டாஸ்க்கை கூல் சுரேஷ் விளக்கமாக கூறினார். அப்போது, கேப்டன் பதவி குறித்து பூர்ணிமாவிடம் கூல் சுரேஷ் கேட்டபோது பூர்ணிமா தனக்கு கேப்டன் பதவி வேண்டுமென்று கூறினார். அதற்கு கூல் சுரேஷ் ‘நீ சின்ன பொண்ணுமா.. நான் இருந்தா எல்லாரையும் ஒருங்கிணைச்சு” என்று கூறி கேப்டன் பதவியை தக்க வைக்க முயற்சித்தார்.
கட்டிவிட மறுத்த கூல்சுரேஷ்:
ஆனால், யூ டிபர் பூர்ணிமா நீங்கள் ஏற்கனவே நன்கு பிரபலம் ஆனவர், என்னை நிரூபிக்க வேண்டும் என்று கேப்டன் பதவியை தனக்கு தருமாறு கேட்டார். அதற்கு கூல் சுரேஷ் அரைகுறை மனதுடன் கேப்டன் பதவிக்கான பேட்ஜை வழங்கினார். அந்த பேட்ஜை வாங்கிய பூர்ணிமா கூல் சுரேஷை அதை கட்டிவிடுமாறு கூறினார். அதை கட்டிவிட வந்தவர் பின்பு மாட்டேன் என்று கூறிவிட்டார். அதற்கு அந்த பெண் அப்போ அரைகுறை மனதுடன்தான் தந்துள்ளீர்கள் என்று கேட்டார். அதற்கு கூல் சுரேஷ் அமைதியாகவே இருந்துவிட்டார்.
அதன்பின்பு, மூன்றாவது போட்டியாளராக ரவீனா உள்ளே வந்தார். வெறும் 19 வயதே நிரம்பிய ரவீனா பூர்ணிமா கேப்டன் பதவியை தருமாறு கேட்டார். ஆனால், இந்த வாரத்திற்கு தான் கேப்டனாக இருப்பதாக பூர்ணிமா கூறினார். ஆனால், நடிகை ரவீனா தானே கேப்டன் இருப்பேன் என்று அடம்பிடித்தார். கூல் சுரேஷிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர் நடிகை ரவீனாவுக்கு ஆதரவு தெரிவித்ததுடன் பூர்ணிமாவிடம் கேப்டன் பேட்ஜை கட்டு என்று கூறினார்.
மேலும் படிக்க: Bigg Boss 7: பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் ஆட்டம் ஆடுவாரா கமல்ஹாசன்? ஆவலுடன் கட்சிகள்!
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil LIVE: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது போட்டியாளராக களம் கண்டார் பூர்ணிமா ரவி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)