Pavani Reddy | ''அமீர் எனக்கு தம்பியா..? அந்த முத்தம் இருக்குல்ல... '' - பாவ்னி பளீர் பேட்டி!
பிக்பாஸ் ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்ட நிலையில் முத்தம் தொடர்பாக பாவ்னி பளிச்சென்று பேசியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 5 வீட்டில் ஆரம்பத்திலிருந்தே அழகுப் பதுமையாக உலா வந்தவர் பாவனி ரெட்டி. ஃபைனலில் கோப்பை பாவனிக்கு என்றுதான் பேசப்பட்டது. இந்நிலையில் பாவனி ரெட்டிக்கு ஒரு முறை அமீர் முத்தம் கொடுத்தார். அது பரபரப்பானது. இது தொடர்பாக பிக்பாஸ் ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்ட நிலையில் முத்தம் தொடர்பாக பாவ்னி பளிச்சென்று பேசியுள்ளார்.
View this post on Instagram
இண்டியாக்ளிட்ஸுக்கு பேசிய பாவ்னி ''அமீர் எனக்கு ஒரு சிறந்த நண்பர். அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தபிறகு ஒரு நல்ல நட்பை உணர்ந்தேன். அமீர் தொடர்பாக ஏராளமான எதிர்மறை கருத்துகள் பரவி வருகிறது. என்னை பயன்படுத்தி அமீர் பிக்பாஸ் வீட்டில் விளையாடியதாக மக்கள் நினைக்கிறார்கள். என்னால் அவருக்கு அப்படி ஒரு எதிர்மறையான போக்கு நிலவுகிறது. எனக்கு கஷ்டமாக இருக்கிறது. அவர் என்னிடம் எந்த கோபத்தையும் காட்டவில்லை. அமீரை நான் தம்பி என்று ஒரு கிண்டலாகத்தான் அழைத்தேன். என்னிடம் ஒருவர் காதலை தெரிவிக்கும் போது அதனை மறுத்தேன்.
View this post on Instagram
அதற்காக அவரை தம்பி என்று சொல்ல முடியாது. அந்த உணர்வுகளை நாம் மதிக்க வேண்டும். அவர் என்னிடம் எல்லையை மீறியதே இல்லை. என் கை அடிபட்ட நேரத்திலும் என்னை அவர் கவனித்துக்கொண்டார். என்னால் முகம் கழுவக் கூட முடியவில்லை. அவர் உதவி செய்தார். அந்த நேரத்தில் கூட அவர் அதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தவில்லை. நான் நிரூப்பை முத்தமிட்டேன். அது தவறில்லை. அமீர் என்னை முத்தமிட்டு தவறாக போய்விட்டதா? மக்கள் பலரும் அவரைத் திட்டும்போது அவர் கோபப்படவில்லை. மக்கள் புரிந்துகொள்வார்கள் என கூலாக சொல்வார'' என்றார்.