மேலும் அறிய

வரம்பு இல்லையா? குரலில் கோபம்.. சீரியஸ் முகம். பாவ்னி விவகாரத்தில் கொதித்த கமல்ஹாசன்!

தனிப்பட்ட விவகாரம் என ஒருவர் பிரகடனப்படுத்தியப் பிறகு, அதில் தலையிடுவதோ, அதை பொதுவெளியில் விவாதிப்பதா வரம்புக்கு உட்பட்டதா வரம்பு மீறியதா எது வரம்பு விவாதிப்போம் என்கிறார் கமல்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 5 லூட்டி, நையாண்டி, சண்டை, சச்சரவு என விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 7 பேர் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது இமான் அண்ணாச்சி, சிபி, ராஜு,  வருண், நிரூப், அமீர், சஞ்சீவ், அபினய், பாவ்னி, பிரியங்கா, அக்‌ஷரா, தாமரை உள்ளிட்டோர் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் கமல் ஹாசன் மிக ஆக்ரோஷமாக பேசியுள்ளார். 

அவர் பேசும் போது , “ இது என் தனிப்பட்ட விவகாரம் என ஒருவர் பிரகடனப்படுத்தியப் பிறகு, அதில் தலையிடுவதோ, அதை பொதுவெளியில் விவாதிப்பதா வரம்புக்கு உட்பட்டதா வரம்பு மீறியதா எது வரம்பு விவாதிப்போம் என்று பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவர் எந்த விவகாரம் பற்றி பேசுகிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்தது என்ன? உள்ளிட்டவற்றை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். 

பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் 12 பேரில் பாவ்னியும், அபினயும் ஆரம்பத்தில் இருந்தே நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். ஒருகட்டத்தில் நட்பில் சந்தேகமடைந்த பாவ்னி, நேரடியாக நீங்கள் என்னை காதலிக்கிறீர்களா அபினயிடம் கேட்க, அதெல்லாம் ஒன்றுமில்லை நமக்குள் இருப்பது நல்ல நட்பு மட்டுமே என்று கூற, அவர்களின் நட்பு தற்போது வரை தொடர்ந்து வருகிறது. 

இந்த நிலையில் அண்மையில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு ட்ரூத் அண்ட் டேர் போட்டி நடத்தப்பட்டது. அப்போது ராஜூ அபினயிடன் நீ பாவ்னியை காதலிக்கிறாயா என்று கேட்க, அதிர்ச்சியில் உறைந்தது பிக்பாஸ் வீடு.  இந்த நிலையில், அபினய்க்கு திருமணமாகி குழந்தை இருக்கிறது என்பதை தெரிந்தே எப்படி இந்தக் கேள்வியை கேட்பாய் என பிரியங்கா ராஜூவிடம் கேட்க, நான் யதார்த்தமாக கேட்டேன், ஆனால் நான் கேட்டிருக்க கூடாது என்று அனைவரின் முன்னிலையிலும் மன்னிப்புக் கேட்டார் ராஜூ. 

இந்த நிலையில்தான்  வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அமீர், பாவ்னியுடன் நட்பாக பழகி வந்தார். அந்த வகையில் இருவரும் பேசிக்கொண்டிருந்த போது இருவரும் ஒருவரையொருவர் அடித்து விளையாடினர். இதைப் பார்த்த அபினய் கடுப்பானார். இமான் அண்ணாச்சியும் அமீரை அழைத்து நட்பாக பழகினாலும், அடித்து விளையாடுவது சரியில்லை என கூறினார். இதனைத் தொடர்ந்து அமீர் நான் பாவ்னியிடம் பேசுவது அபினய்க்கு பிடிக்கவில்லை என வெளிப்படையாக கூறினார். 

இந்த நிலையில் அண்மையில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில், நான் அபினய் கூட தனியாக உட்கார்ந்து எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பேசுவேன், அது எங்களது விருப்பம் உனக்கு இதை பற்றி பேச உரிமை இல்லை நீ ஏன் பேசுகிறாய் நீ யார்? என ராஜூவை பார்த்து கேட்டார். அப்போது குறுக்கிட்ட சிபி, இது நட்பு இல்லை காதல் இல்லை என்றால் வேறு என்ன? என்று கேட்டார். அதற்கு பாவ்னி இது தனிப்பட்ட பிரச்சனை என கூற, நான் அப்படி தான் பேசுவேன் என பாவ்னி கூறினார். இதனையடுத்து, அபினய் இதைப்பற்றி இனி பேச வேண்டும் என்று கூறினார். அந்தப் பிரச்னை அத்துடன் முடிந்த நிலையிதான் தற்போது கமல்ஹாசன் இப்படி பேசியிருக்கிறார். 

தலைப்பு செய்திகள்

மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
Embed widget