Cool Suresh: ”கூல் சுரேஷ் குளியல் வீடியோ” பங்கம் செய்த பெண் போட்டியாளர்கள்.. பிக்பாஸில் நடந்த கூத்து!
Bigg Boss 7 Tamil Update: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கூல் சுரேஷை, பெண் போட்டியாளர்கள் பங்கமாக கலாய்த்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
![Cool Suresh: ”கூல் சுரேஷ் குளியல் வீடியோ” பங்கம் செய்த பெண் போட்டியாளர்கள்.. பிக்பாஸில் நடந்த கூத்து! Bigg Boss 7 Tamil Update Female contestants kidding cool suresh video viral Cool Suresh: ”கூல் சுரேஷ் குளியல் வீடியோ” பங்கம் செய்த பெண் போட்டியாளர்கள்.. பிக்பாஸில் நடந்த கூத்து!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/02/d156a417826192c5e8460bf7c589fb2b1696235980082572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கூல் சுரேஷை, பெண் போட்டியாளர்கள் பங்கமாக கலாய்த்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
பிக்பாஸ்:
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் நேற்று (அக்டோபர் 1) ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. வழக்கம்போல இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். நேற்று நடைபெற்ற பிரமாண்டமான தொடக்க நிகழ்ச்சியில் கூல் சுரேஷ், பவா செல்லதுரை, அக்ஷயா உதயகுமார், பிரதீப் ஆண்டனி, விஷ்ணு விஜய், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, ஜோவிகா விஜயகுமார், மணி சந்திரா, ரவீனா தாஹா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கூல் சுரேஷ் குளியல்:
பிக்பாஸ் நிகழ்ச்சி வார நாட்களில் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகிறது. அதுமட்டுமல்லாமல் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனால் டிவியில், ஓடிடி தளத்தில் நாம் பார்க்க தவறிய காட்சிகள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில் முதல் போட்டியாளராக உள்ளே வந்த கூல் சுரேஷ் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
Ennada Idhu bathroom kulla Otaiya…
— U Views-தமிழ் (@U_Views_Off) October 2, 2023
Cool Suresh Bathroom Video Leaked 🤣🤣🤣#BiggBoss #BiggBoss7tamil #BiggBossTamil #BiggBossTamil7 #BBTamilSeason7 #CoolSuresh
pic.twitter.com/dzrSxe3saB
அதில் பெண் போட்டியாளர்களான மாயா, அனன்யா ராவ், ரவீனா ஆகிய 3 பேரும் பாத்ரூம் எப்படி இருக்கிறது என்பதை காண செல்கிறார்கள். அப்போது உள்ளே இருந்து குளித்து விட்டு கூல் சுரேஷ் வெளியே வருகிறார். அப்போது குறிப்பிட்ட பாத்ரூமை கைகாட்டி, அங்கேயா போறீங்க என கேட்கிறார். உடனே போட்டியாளர்கள் இல்லை இல்லை என கூற, என்ன நடந்துச்சுன்னு தெரியுமா என கூல் சுரேஷ் கதை ஒன்றை சொல்கிறார். அப்போது அனன்யா, “நீங்க வெளியே போனீங்கனா அண்ணாவோட குளியல் வீடியோ லீக் ஆகிடும்”.. அதன் பெயர் “கூல் சுரேஷ் குளியல் வீடியோ” என கேப்ஷன் சொல்லி 3 பெண் போட்டியாளர்களும் பங்கமாக கலாய்கின்றனர்.
உடனே அந்த பாத்ரூமில் மேலே ஒரு இடைவெளி இருக்கு என அதிர்ச்சி குண்டை தூக்கி போட, கூல் சுரேஷிடம் ரவீனா என்ன சொல்றீங்க என அதிர்ச்சியாக கேட்கிறார். உடனே சரவண விக்ரம் , “நானே போய் குளிக்க போயிடுவேன் போல” என சொல்லும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: நோகாமல் நுங்கு தின்ற பிக்பாஸ் வீட்டில் முதல் கேப்டன் விஜய் வர்மா.. விமர்சிக்கும் ரசிகர்கள்..!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)