Bigg Boss 7 Tamil:'வன்மம் நிறைந்த வீடா இருக்கு' சரமாரி கேள்வி கேட்கும் கமல்! ஆடிப்போன போட்டியாளர்கள் - இன்றைய பிக்பாஸில்!
பிக்பாஸில் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 7:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளுக்கு நாள் சண்டைகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாமல் போகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 67 நாள்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. மந்தமாகத் தொடங்கிய இந்த சீசனில் அனைவரும் ஆரம்பத்தில் இருந்தே திட்டம் வகுத்து விளையாடுவதை நோக்கி நகர்ந்தனர்.
சூடுபிடிக்கும் நிகழ்ச்சி:
ஆனாலும் 5 வைல்டு கார்டு எண்ட்ரி போட்டியாளர்கள் அதிரடியாக நுழைந்து மக்கள் கருத்துகளை உள்ளே சொல்ல, மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரேட்டிங்கில் முன்னேறியது. மொத்தம் 23 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த சீசனில் தற்போது விஷ்ணு விஜய், விசித்ரா, விஜே அர்ச்சனா, சரவண விக்ரம், தினேஷ், மணி சந்திரா, ரவீணா, மாயா கிருஷ்ணன், பூர்ணிமா, கூல் சுரேஷ், நிக்சன், விஜய் வர்மா, அனன்யா ராவ் ஆகியோர் இருக்கின்றனர்.
இந்த வாரத்தில் சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. அதாவது, அர்ச்சனா மற்றும் நிக்சன் இடையே வாக்குவாதம் முற்றி அளவுக்கு மீறி வார்த்தைகளை விடும் அளவுக்கு சென்றது. இந்நிலையில், நேற்றை எபிசோடில் அர்ச்சனாவை பயங்கரமாக விளாசி தள்ளினார். அதாவது, வீட்டில் இல்லாத வினுஷா மற்றும் ஜஷு பெயரை பயன்படுத்தி நீங்க (அர்ச்சனா) செஃப் கேம் ஆடுறீங்க என்று கூறி அர்ச்சனாவை கண்டித்ததோடு இல்லாமல், கோபத்தில் வார்ததைகளை விடாதீர்கள் என்று நிக்சனுக்கு அறிவுரை கூறினார்.
போட்டியாளர்களிடம் கடுமையாக சாடிய கமல்:
மேலும், தௌலத்தா பேசுற’ என்று கூறிய தினேஷ்க்கும், ட்ரூ கலர்ஸ் கம்மிங் அவுட்’ என்று கூறிய மணியையும் கடுமையாக கண்டித்தார் மணி. ”ஒருவரை பிராண்ட் குத்த நீங்க யார்? இந்த பிக்பாஸ் வீட்டில் சாதி, மதம் போன்ற எந்த ஒரு பிரிவினையும் இந்த வீட்டில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், ஸ்ட்ரைக் கார்டின் கலர் மாறும்" என்று கமல் கடுமையாக சாடினார்.
இந்நிலையில், இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், ”பிக்பாஸ் வீட்டில் எண்டர்டெயின்மெண்ட் இருக்கா? டாஸ்க்கையாச்சு சுவாரஸ்யமா பண்ணுறீங்களா? இல்லை. எந்த ஆசைக்கு நீங்க வீட்டிற்கு வந்தீங்க என்ற தடம் மாறி, வன்மம் நிறைந்த போதையில் இருந்து வெளியே வரமாட்றீங்க. ஒருவருக்கு ஒருவர் நீங்களே மதிக்கிறது இல்லை. மக்கள் ஏன் மதிச்சு உங்கள பார்க்கணும். முட்டாளுக்கு முட்டை என்று சாப்பிடும் போது கூட வன்மத்தை கக்கும் இடத்தில், எண்டர்டெயின்மெண்ட் எப்படி இருக்கும்?" என்று போட்டியாளர்களின் அடுக்கடுக்கான கேள்வி கேட்டப்படி ப்ரோமோ முடிகிறது.
மேலும் படிக்க