Bigg Boss 7 Tamil: ஹீரோவும் இல்ல, வில்லனும் இல்ல.. சோசியல் மீடியாவில் பெருகும் ஆதரவு.. பயன்படுத்திக் கொள்வாரா சரவண விக்ரம்?
கடந்த இரண்டு வாரங்களாக ட்ரோல் செய்யப்பட்டு வந்த சரவண விக்ரமுக்கு ஆதரவாக சோஷியல் மீடியாவில் பாசிட்டிவ் கமெண்ட்டுகள் வந்துக் கொண்டிருக்கிறது.
பிக்பாஸ் 7 தமிழ்
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தற்போது, கூல் சுரேஷ், விஷ்ணு விஜய், விசித்ரா, விஜே அர்ச்சனா, சரவண விக்ரம், தினேஷ், மணி சந்திரா, ரவீனா, மாயா, பூர்ணிமா, நிக்ஸன், விஜய் வர்மா, அனன்யா ராவ் ஆகியோர் உள்ளே உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுகிழமையில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரையும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் விசித்ரா, தினேஷ், அனன்யா, பூர்ணிமா, விக்ரம், ஜோவிகா, கூல் சுரேஷ் என எட்டு பேர் உள்ளனர்.
விக்ரமுக்கு சோசியல் மீடியாவில் பெருகும் ஆதரவு
இந்நிலையில், தற்போது சரவணன் விக்ரமுக்கு சோஷியல் மீடியாக்களில் பாசிட்டிவ் கமெண்ட்டுகள் வந்து கொண்டிருக்கிறது. முன்னதாக, மிக்சர் போட்டியாளர் என வினுஷா, அக்ஷயா, பிரோவோ குறித்து விமர்சனம் செய்யப்பட்ட நிலையில், கடந்த சில வாரங்களாகவே சரவண விக்ரம் பெயர் அடிப்பட்டு வந்தது. ஆரம்பம் முதலே பெரிய அளவில் அவர் யார் என மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 'பிக்பாஸ் வெற்றியாளர் சரவண விக்ரம்' எனக் கூறியிருந்தார்.
அதில் இருந்து நெட்டிசன்களின் மீம்ஸ் மெட்டீரியலாக மாறியுள்ளார் விக்ரம். பலராலும் ட்ரோல் செய்யப்பட்டு வருவதோடு, வீட்டில் சக போட்டியாளர்களும் சரவண விக்ரமை கிண்டல் செய்து வருகின்றனர். அவ்வளவு ஏன், கடந்த வாரம் வீட்டிற்குள் வந்த விஜய்யும் சரவண விக்ரமை கலாய்த்தார்.
குறிப்பாக, நேற்றைய எபிசோட்டில் கூட நள்ளிரவு சரவண விக்ரமை மோசமாக ஒரு குரூப் கலாய்த்து தள்ளியது. அதாவது, விக்ரமும் அக்ஷயாவும் மாற்றி மாற்றி 'டைட்டில் வின்னர்' என்று சொல்லி விளையாடி நள்ளிரவு சம்பவத்தை மீண்டும் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார் விஜய். விஷ்ணுவும் கூல் சுரேஷூம் கூடுதலாக கலாய்த்தனர். இது வெளியில் இருந்த விக்ரமிற்கு கேட்டது. "என்னை பற்றி தான் உள்ளே கிண்டல் பண்ணுறாங்க” என்று மன வருத்தத்துடன் அனன்யாவிடம் கூறினார். மேலும், "என்னை ஒரு ஆளாவே பார்க்க மாட்டாங்களா?” என்று சோகமாக கூறினார். இதற்கு, "நீ இதையெல்லாம் அவர்களிடம் கேட்க மாட்டியா?" என்றும் "உனக்கு இது பழகிடுச்சா?” என்றும் கேட்ட அனன்யா, பிறகு திடீரென்று அழ ஆரம்பித்து விட்டார். "இந்த மாதிரி ஒருவரை ill treat செய்றது தப்பு" என்று கூறி அனன்யா அழுதார்.
இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகுவதோடு, சரவண விக்ரம் மற்றும் அனன்யாவுக்கு ஆதரவாக பல கருத்துகள் சோஷியல் மீடியோவில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மேலும், என்ன தான் விக்ரம் கேமில் ஆக்டிவாக இல்லாமல் இருந்தாலும், அவர் வீட்டில் இதுவரை யாரையும் காயப்படுத்தியதில்லை என்றும் மரியாதை குறைவாக நடத்தியதில்லை என்றும் நெட்டிசன்கள் பலரும் கூறி வருகின்றனர்.
மேலும், இதுபோன்ற விமர்சனங்களுக்கு அவரின் செயலின் மூலம் பதிலடி கொடுத்தால் தான் இந்த நிகழ்ச்சியில் தொடர முடிவதோடு, வீட்டில் இருப்பவர்களை எதிர்கொள்ள முடியும் என்பதே பலரது கருத்தாக இருந்து வருகின்றது.