(Source: ECI/ABP News/ABP Majha)
Bigg Boss 7 : 'ரெட்' கோட் வார்த்தை மூலம் எச்சரிக்கை... விதிகளை மீறியதால் வெளியேற்றப்பட்ட ரவீனா குடும்பத்தார்..!
Bigg Boss 7 Promo 2 : கோட் வார்த்தையை பயன்படுத்தி ரவீனாவை எச்சரிக்கை செய்ய நினைத்ததால் பிக் பாஸ் வீட்டில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்ட ரவீனா குடும்பத்தார். வெளியானது பரபரப்பான ப்ரோமோ 2
18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மேலும் 5 பேர் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக என்ட்ரி கொடுத்தனர். இந்த நிலையில் தற்போது பூர்ணிமா, மாயா, அர்ச்சனா, தினேஷ், விசித்திரா, விக்ரம், விஜய், மணி, நிக்சன், ரவீனா, விஷ்ணு என 11 பேர் மட்டுமே வீட்டில் இருக்கிறார்கள்.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சூழலில் ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ஃப்ரீஸ் டாஸ்க் இந்த வாரம் நடைபெற்று கொண்டு இருக்கிறது. அந்த வகையில் இன்று ரவீனாவின் குடும்பத்தில் இருந்து பிக் பாஸ் வீட்டுக்குள் வருகை தந்துள்ளனர்.
ரவீனா குடும்பத்தினர் ரவீனா - மணி ரிலேஷன்ஷிப் குறித்து மிகவும் கடுமையாக எச்சரித்தனர். "உன் மேல கோவமாக இருக்காங்க, அம்மா எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டாங்கனு போய் சொல்லிக்கிட்டு இருக்க. நீ இங்க ஒன்னும் மணிக்காக விளையாட வரலை. இது நமக்கு தேவையும் கிடையாது" என மிகவும் கடுமையாக எச்சரித்தனர்.
அதை தொடர்ந்து மணி சந்திராவிடமும் சென்று "இந்த ஷோவில் தனியா உட்கார்ந்து பேசவா வந்தீங்க. இனிமே அது போல தனியா கூட்டிட்டு போய் பேசாத" என நேரடியாகவே கண்டித்துவிட்டார். இப்படியாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியானது.
அதன் தொடர்ச்சியாக 81வது நாளுக்கான இன்றைய நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் ரவீனா குடும்பத்தார் கோட் வார்த்தை மூலம் ரவீனாவை எச்சரிக்கை செய்ய நினைத்து "ரெட்" என சூசகமாக சொல்ல அதை அலேக்காக கண்டுபிடித்த பிக் பாஸ் "வெளி உலகத்தில் நடக்கும் விஷயங்களை பகிர்ந்து கொண்டதாலும் கோட் வார்த்தைகளை பயன்படுத்தியதாலும் இந்த பிக் பாஸ் வீட்டில் உங்கள் நேரம் இத்துடன் முடிவடைந்தது. நீங்க இரண்டு பெரும் மெயின் டோர் வழியா வெளியே வரலாம்" என சொல்லி மெயின் டோரை திறந்துவிட அதிர்ச்சியான ரவீனா பிக் பாஸிடம் "ப்ளீஸ் பிக் பாஸ்" என கெஞ்சுகிறார். அவரை அனைவரும் சமாதானம் செய்கிறார்கள்.