மேலும் அறிய

Bigg Boss 7 Tamil: ஒரு எபிசோடுக்கு இவ்வளவா.. யாருக்கு அதிகம், யாருக்கு கம்மி.. பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் சம்பள விபரம்!

பிக்பாஸில் பங்கேற்றிருக்கும் போட்டியாளர்களின் சம்பளம் குறைந்தபட்சம் ரூ.12,000, அதிகபட்சமாக ரூ.28,000 என ஒவ்வொரு எபிசோடுக்கும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. 

Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரபலங்கள் குறைந்த பட்சம் ரூ.12,000 முதல் அதிகபட்சம் ரூ.28,000 வரை சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. முதல் சீசனுக்கு இருந்த வரவேற்புகளால் அடுத்தடுத்த சீசன்கள் எனத் தொடர்ந்தன. தொடர்ந்து பிக்பாஸின் ஆறு சீசன்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது 7ஆவது சீசன் தொடங்கி உள்ளது. கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 

நேற்று முன் தினம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், நடிகர் கூல் சுரேஷ், நடிகை ரவீனா தாஹா, யூடியூப் பிரபலமான பூர்ணிமா ரவி, நடிகர் பிரதீப் ஆண்டனி, நிக்சன், விஷ்ணு விஜய், சீரியல் நடிகர் சரவண விக்ரம், அனன்யா ராவ், மாயா எஸ் கிருஷ்ணா, வனிதா மகள் ஜோவிகா விஜயகுமார், அக்‌ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, பாடகர் யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, எழுத்தாளர் பவா செல்லதுரை, விஜய் வர்மா உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி ஆகியுள்ளனர். 

வழக்கம் போல் முதல் நாளில் ஒருவரை ஒருவர் போட்டியாளர்கள் அறிமுகம் செய்து கொண்ட நிலையில், அவர்களுக்கான டாஸ்க் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிக்பாஸில் பங்கேற்றிருக்கும் போட்டியாளர்களின் சம்பளம் குறித்த சுவாரஸ்யத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி குறைந்தபட்சம் ரூ.12,000, அதிகபட்சமாக ரூ.28,000 என ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒவ்வொரு எபிசோடுக்கும் சம்பளம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. 

அதில், வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமார் ஒரு எபிசோடுக்கு ரூ.13 ஆயிரம் சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது. மாய கிருஷ்ணன் ஒரு எபிசோடுக்கு ரூ.18 ஆயிரமும், ஐஷு ஒரு எபிசோடுக்கு ரூ.15 ஆயிரமும், யூடியூப் பிரபலம் பூர்ணிமா ரவி ஒரு எபிசோடுக்கு ரூ.15 ஆயிரமும் சம்பளம் பெறுவதாகவும் கூறப்படுகிறது. 

மேலும். நடிகை அக்‌ஷயா உதயகுமார் ஒரு எபிசோடுக்கு ரூ.15,000, அனன்யா ராவ் ஒரு எபிசோடுக்கு ரூ.12,000, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம் சரவணன் விக்ரம் ஒரு எபிசோடுக்கு ரூ.18, 000 சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.

மேலும் விஜய் வர்மாவுக்கு ரூ.15,000, கூல் சுரேஷூக்கு ரூ.18,000, மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரனுக்கு ரூ.27,000, பிரதீப் ஆண்டனிக்கு ரூ.20,000, நடன கலைஞர் மணிச்சந்திராவுக்கு ரூ.18,000, விசித்ராவுக்கு ரூ.27,000, ரவீனாவுக்கு ரூ. 18,000, பாரதி கண்ணம்மா நடிகை வினுஷா தேவுக்கு ரூ.20,000, பிரபல எழுத்தாளர் பாவா செல்லதுரைக்கு ரூ. 28, 000 சம்பளமாக வழங்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க: BiggBoss 7 Tamil: ”இது பிக்பாஸா?.. இல்ல.. வேற ஏதாவது ஸ்டண்ட்டா?” .. மணிசந்திரா கையை கடித்த ரவீனா..!

Bigg Boss Promo: சாப்பாட்டால் வெடிக்கப்போகும் மோதல்.. சண்டைக்கோழியாக மாறிய பிரதீப் ஆண்டனி.. சூடுபிடிக்கும் பிக்பாஸ்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly Session LIVE:  நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாது என்ற சபாநாயகர் - அதிமுக வெளிநடப்பு
TN Assembly Session LIVE: நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாது என்ற சபாநாயகர் - அதிமுக வெளிநடப்பு
HBD Thalapathy Vijay: என்னுயிர்த் தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்.. முதல் ஆளாக வாழ்த்து சொன்ன சீமான்!
என்னுயிர்த் தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்.. முதல் ஆளாக வாழ்த்து சொன்ன சீமான்!
Vijay Birthday: பிறந்தநாளில் விஜய் போட்ட அதிரடி உத்தரவு: புலம்பும் த.வெ.க. தொண்டர்கள்!
பிறந்தநாளில் விஜய் போட்ட அதிரடி உத்தரவு: புலம்பும் த.வெ.க. தொண்டர்கள்!
Rain Alert: தமிழகத்தில் இன்றும் 2 நாட்களுக்கு கனமழை..எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? - வாங்க பார்க்கலாம்!
தமிழகத்தில் இன்றும் 2 நாட்களுக்கு கனமழை..எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? - வாங்க பார்க்கலாம்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  : Suriya on Kallakurichi Kallasarayam: ”தமிழக அரசுக்கு கண்டனம்! 20 ஆண்டுகளாக அவலம்” கொந்தளித்த சூர்யா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly Session LIVE:  நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாது என்ற சபாநாயகர் - அதிமுக வெளிநடப்பு
TN Assembly Session LIVE: நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாது என்ற சபாநாயகர் - அதிமுக வெளிநடப்பு
HBD Thalapathy Vijay: என்னுயிர்த் தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்.. முதல் ஆளாக வாழ்த்து சொன்ன சீமான்!
என்னுயிர்த் தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்.. முதல் ஆளாக வாழ்த்து சொன்ன சீமான்!
Vijay Birthday: பிறந்தநாளில் விஜய் போட்ட அதிரடி உத்தரவு: புலம்பும் த.வெ.க. தொண்டர்கள்!
பிறந்தநாளில் விஜய் போட்ட அதிரடி உத்தரவு: புலம்பும் த.வெ.க. தொண்டர்கள்!
Rain Alert: தமிழகத்தில் இன்றும் 2 நாட்களுக்கு கனமழை..எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? - வாங்க பார்க்கலாம்!
தமிழகத்தில் இன்றும் 2 நாட்களுக்கு கனமழை..எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? - வாங்க பார்க்கலாம்!
Breaking News LIVE: ஓமலூரில் ஆடுகளை தாக்கிய சிறுத்தை  - வனத்துறையினர் விசாரணை
Breaking News LIVE: ஓமலூரில் ஆடுகளை தாக்கிய சிறுத்தை - வனத்துறையினர் விசாரணை
Hinduja Family: நாய்க்கு ரூ.8 லட்சம், ஊழியர்களுக்கு ரூ.660 - ஹிந்துஜா குடும்பத்தினர் 4 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை
Hinduja Family: நாய்க்கு ரூ.8 லட்சம், ஊழியர்களுக்கு ரூ.660 - ஹிந்துஜா குடும்பத்தினர் 4 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை
அச்சச்சோ...! இனி கிரெடிட் கார்டு பில்லை இப்படியெல்லாம் கட்ட முடியாது:  ஆர்.பி.ஐ அதிரடி திட்டம்
இனி கிரெடிட் கார்டு பில்லை இப்படியெல்லாம் கட்ட முடியாது:  ஆர்.பி.ஐ அதிரடி திட்டம்
Kallakurchi illicit liquor: இன்று காலையிலேயே 3 பேர்: விஷச் சாராய பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு 
Kallakurchi illicit liquor: இன்று காலையிலேயே 3 பேர்: விஷச் சாராய பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு 
Embed widget