மேலும் அறிய

Bigg Boss 6 Tamil: பிக்பாஸ் வீட்டில் இருந்து ஷிவின் வெளியேற்றமா...? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்...!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் கடைசி நாள் நெருங்கி கொண்டு போக, அனைவருக்கும் பிடித்த போட்டியாளர் வெளியேறப்போகிறார் என்ற தகவல் பரவிவருகிறது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலிருந்து ஷிவின் வெளியேற உள்ளார் என்று வெளியாகியுள்ள தகவல்களால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த சீசன் முடிய இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், டிக்கெட் டு ஃபினாலே என்ற டாஸ்க் நடைபெற்றது. இதை விளையாடி வெற்றி பெறுபவர்கள், நேரடியாக இறுதி சுற்றுக்கு அனுப்பப்படுவர் என்ற அறிவிப்பும் கொடுக்கப்பட்டது.

இறுதிப்போட்டியில் அமுது:

அதன் அடிப்படையில், அமுதவாணன் நேரடியாக இறுதி சுற்றிற்கு செல்கிறார். ஒரு பக்கம் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் இறுதி போட்டியாளர் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்தாலும், இந்த வாரத்தில் வெளியாகப்போகும் போட்டியாளர் யார் என்ற பெரும் குழப்பம் ஏற்ப்பட்ட்டுள்ளது.

இந்த வாரத்தின் எலிமினினேஷன் நாமினேஷனுக்காக ஏடிகே, அமுதவாணன், கதிரவன், நந்தினி, ரச்சித்தா, ஷிவின், விக்ரமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில், இப்போது வரை அமுதவாணன் குறைந்த ஓட்டுக்களை பெற்று கடைசி இடத்தில் உள்ளார். இவர், டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கை வென்றதால், எலிமினேஷனிலிருந்து தப்பித்துள்ளார். இவருக்கு அடுத்து, ரச்சித்தா, ஷிவின் ஆகியோர் குறைந்த ஒட்டுகளை பெற்று கடைசி இடத்தில் உள்ளனர். விக்ரமன் அதிக ஓட்டுகளை பெற்று முதல் இடத்தில் இருக்க, அதற்கு அடுத்து ஏடிகே, கதிரவன், மைனா நந்தினி ஆகியோர் உள்ளனர்.

ஷிவினா..? ரச்சிதாவா..?

இந்த ஓட்டிங் பட்டியலை அடிப்படையாக கொண்டு, சிலர் ரச்சித்தா வெளியாகவுள்ளார் என்றும் சிலர் ஷிவின் வெளியாகவுள்ளார் என்று இணையத்தில் தகவலை பரவி வருகின்றனர். பெரும்பாலும், வாரத்தின் இறுதிநாளான சனிக்கழமையில், யார் நிகழ்ச்சியை விட்டு வெளியேறப்போகிறார் என்று தகவல் வந்துவிடும். அத்துடன் அந்த தகவலுக்கு ஏற்ப, அதே நபர் வெளியேற்றப்படுவர்.

Bigg Boss 6 Tamil: பிக்பாஸ் வீட்டில் இருந்து ஷிவின் வெளியேற்றமா...? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்...!

இடையில் ஒருமுறை மட்டும், ஏடிகே வெளியேறவுள்ளார் என்ற தகவல் வந்தது. ஆனால் அந்த வாரத்தில் ஜனனியை வெளியேற்றி பிக்பாஸ் நிகழ்ச்சி ட்விஸ்ட் கொடுத்தது. இந்த வார எலிமினேஷன் குறித்து பல குழப்பங்கள் பரவி வர, ஷிவினின் ரசிகர்கள்,  “ நல்ல போட்டியாளரை , நிச்சயமாக வெளியேற்றக்கூடாது.” என தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். மற்றொரு பக்கம், ஷிவின் இந்த நிகழ்ச்சியில் தொடருவார் என்றும் கூறிவருகின்றனர்.

மேலும் படிக்க : Bigg Boss 6 Tamil : இவர்தான் இந்த சீசனோட டைட்டில் வின்னர்.. ஹார்ட்டினை பறக்கவிடும் பிக்பாஸ் ரசிகர்கள்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ambedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget