மேலும் அறிய

Bigg Boss 6 Tamil : தட்டை தூக்கி எறிந்த ரச்சிதா.. எச்சில் உணவை விக்ரமனுக்கு கொடுத்த அசிம்.. களேபரமான பிக்பாஸ் வீடு!

Bigg Boss 6 Tamil : அசிம் மற்றும் விக்ரமன் ஆகிய இருவரிடையே மூண்ட சண்டையில், ஷிவின் ஆஜராக எரிமலையாய் வெடித்து நிற்கிறது பிக்பாஸ் வீடு

பிக்பாஸ் நிகழ்ச்சியின், ராஜவம்சம் டாஸ்க் தொடர்பான இன்றைக்கான மூன்று ப்ரோமோக்கள் வெளியாகிவுள்ளது. அவற்றின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.

இந்த வாரத்திற்கான டாஸ்க்காக “ராஜ வம்சமும் அருங்காட்சியகமும்” என்ற விளையாட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில், பிக்பாஸ் வீடு ராயல் அருங்காட்சியகமாக மாறவுள்ளதாகவும், இதில் ஹவுஸ்மேட்டுகள் மூன்று அணிகளாக பிரிய வேண்டும் என்ற விதி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் நடக்கவுள்ள டாஸ்க்கின் அறிமுகமாக முதல் ப்ரோமோ அமைந்தது. ராஜ அலங்காரத்தில், அனைத்து போட்டியாளர்களும் அசத்தி வர, ராணி வேடம் அணிந்த ரச்சித்தா சாப்பாட்டில் வெறும் உப்பு மட்டும்தான் உள்ளது என்று தட்டை வீசுகிறார். அதற்கு அடுத்து, ராபர்ட் மாஸ்டரும் கோபப்பட்டு தட்டை தூக்கி எரிகிறார்.

இரண்டாவது ப்ரோமோவில், ராஜ குருவாக வேடம் அணிந்த விக்ரமனை பார்த்து, எச்சில் துப்பிய உணவை உண்ணுங்கள் என அசிம் சொல்கிறார். அவ்வளவுதான், எரிமலையாக பொங்கி எழுந்தார் விக்ரமன். அடித்து கொள்ளாத குறையாக இருவரும் கைநீட்டி வாக்குவாதம் செய்தனர். பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் அவர்களை சமதானம் செய்ய முயற்சி செய்தனர். 

தோல்வியுற்ற அந்த முயற்சியினால், இவர்களின் அந்த எச்சில் சண்டை மூன்றாவது ப்ரோமோ வரை நீண்டு சென்றது. “வாயா போயா என்று என்னை அழைக்கிறாய்” என விக்ரமன் கேள்வி கேட்க, “நீ கூடதான் என்னை ஏய் என்று அழைக்கிறாய்”என அசிம் பதிலளித்தார். பிறகு, உப்பு போட்டது நீதான் என்று ஷிவினை கைகாட்டுகிறார் அசிம். இருவரிடையே மூண்ட சண்டையில், ஷிவின் ஆஜராக மூன்றாவது ப்ரோமோ நிறைவடைந்தது.

பிக் பாஸ் போட்டியாளர்கள் :

Bigg Boss 6 Tamil : தட்டை தூக்கி எறிந்த ரச்சிதா.. எச்சில் உணவை விக்ரமனுக்கு கொடுத்த அசிம்.. களேபரமான பிக்பாஸ் வீடு!

இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். மூன்றாம் வாரத்தில் ஷெரினா ஷாம் வெளியானார். நான்காம் வாரத்தில் விஜே மகேஸ்வரி எலிமினேட் செய்யப்பட்டார். இவர்கள் சென்ற பின், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன், அரவிந்த், சீரியல் நடிகர் முகமது அசிம், சீரியல் நடிகை ஆயிஷா, மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 16  போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

காவிரி, வைகைக்கு திட்டம்.. மாநில வரி பங்கு! பிரதமரிடம் முதலமைச்சர் வைத்த டிமாண்ட் இதுதான்
காவிரி, வைகைக்கு திட்டம்.. மாநில வரி பங்கு! பிரதமரிடம் முதலமைச்சர் வைத்த டிமாண்ட் இதுதான்
வெறும் ரூ 40,000க்கு கசியவிடப்பட்ட ராணுவ தகவல்கள்.. வசமாக சிக்கிய குஜராத் இளைஞர்
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மற்றொரு நபர்.. குஜராத்தில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ATS
பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?
பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?
"மீளாத் துயரில் ஏழை, எளிய மக்கள்" உடனே அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ராகுலுக்கு பிடிவாரண்ட்! அதிரடி காட்டிய நீதிமன்றம்! அமித்ஷா குறித்து அவதூறுKaliyammal Political Party | காளியம்மாளின் புதிய கட்சி?அதிர்ச்சியில் சீமான்! பின்னணியில் திமுக?அருண் ராஜ் கையில் பொறுப்பு! கலக்கத்தில் புஸ்ஸி ஆனந்த்! ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்”பொன்முடியவே ஓரங்கட்டுறீங்களா” லட்சுமணனை கண்டித்த MRK பன்னீர்செல்வம்! கடுப்பில் ஆதரவாளர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காவிரி, வைகைக்கு திட்டம்.. மாநில வரி பங்கு! பிரதமரிடம் முதலமைச்சர் வைத்த டிமாண்ட் இதுதான்
காவிரி, வைகைக்கு திட்டம்.. மாநில வரி பங்கு! பிரதமரிடம் முதலமைச்சர் வைத்த டிமாண்ட் இதுதான்
வெறும் ரூ 40,000க்கு கசியவிடப்பட்ட ராணுவ தகவல்கள்.. வசமாக சிக்கிய குஜராத் இளைஞர்
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த மற்றொரு நபர்.. குஜராத்தில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ATS
பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?
பொறியியல் பட்டதாரியா? உணவு, இருப்பிடத்துடன் வெளிநாட்டு வேலை- ரூ.80 ஆயிரம் சம்பளம்- விண்ணப்பிப்பது எப்படி?
"மீளாத் துயரில் ஏழை, எளிய மக்கள்" உடனே அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு உடனே விண்ணப்பிங்க- 4 ஆயிரம் பணியிடங்கள்!- முழு விவரம்
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு உடனே விண்ணப்பிங்க- 4 ஆயிரம் பணியிடங்கள்!- முழு விவரம்
Thug life: கமல் பேசுனது எங்கப்பா பேசுனது மாதிரி இருந்துச்சு.. மேடையிலே சிவராஜ்குமார் உருக்கம்
Thug life: கமல் பேசுனது எங்கப்பா பேசுனது மாதிரி இருந்துச்சு.. மேடையிலே சிவராஜ்குமார் உருக்கம்
இனி கரண்ட் பில் கட்ட வேண்டாம்! எப்படி தெரியுமா? இதை செய்யுங்கள் முதலில்
இனி கரண்ட் பில் கட்ட வேண்டாம்! எப்படி தெரியுமா? இதை செய்யுங்கள் முதலில்
Villupuram DMK: பொன்முடிக்கு நோ ! ஆர்டர் போட்ட லட்சுமணன்..  ஆடிப்போன எம்.ஆர்.கே
Villupuram DMK: பொன்முடிக்கு நோ ! ஆர்டர் போட்ட லட்சுமணன்.. ஆடிப்போன எம்.ஆர்.கே
Embed widget