Bigg Boss 6 Tamil Promo: ‛ஜி.பி முத்துவை பாத்தாலே காண்டாவுது...’ முகம் சுழித்த தனலட்சுமி!
Bigg Boss 6 Tamil promo : கிண்டல் செய்து வரும் ஜி.பி முத்துவை பார்த்து தனலட்சுமி டென்ஷன் ஆகியுள்ளார்.
Bigg Boss 6 Tamil promo : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூன்றாவது நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகிவுள்ளது. விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை அன்று கோலாகலமாக தொடங்கியது. போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வரவழைக்கப்பட்டு, அவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பும் வழக்கமான நடைமுறையை நிறைவேற்றினார் கமல்.தனி அறிமுக வீடியோ, போட்டியாளர்களின் பங்கேற்பு லட்சியம் என அனைத்தும் முடிந்து ஒரு வழியாக முதல்நாள் போட்டி தொடங்கிவிட்டது. வழக்கமாக போட்டி தொடங்கினால், முதல் வாரம் கொஞ்சம் ரிலாக்ஸேசன் இருக்கும். ஆனால், இந்த முறை போட்டி தொடங்கியதுமே கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
View this post on Instagram
சாம்பாருக்கு சண்டை போட்ட தனலட்சுமியை, “ சாம்பார் ப்ரெஷா வேணும்.. சுட சுட வேணும். முருங்கைகீரை சாம்பார் சூப்பராக இருக்கும்.” என சொல்லி கலைக்கிறார்.இதைப்பார்த்த தனலட்சுமி சம கடுப்பாகி முகத்தை சுழுத்து கொண்டு பிக்பாஸ் வீட்டை சுற்றி வருகிறார். பின், பிக்பாஸ் கேமராவிடம் சென்று, “ ஜி.பி நாரதர் வேலையை செய்து விட்டு, இருக்கும் மொத்த டீம்மிற்கும் அதே வேலையை செய்கிறார்.” என்று சைகையுடன் கூறி தன் கடுப்பை வெளிப்படுத்துகிறார்.அதில் ஜி.பி முத்து வழக்கம் போல் கலர்ஃபுல் ஆன கண்டெண்டை கொடுத்து வருகிறார்.
இதற்கு முன்பாக வெளியான ப்ரோமோ காட்சிகளில், ஜனனி கூறிய சில வார்த்தைகளை கேட்டு, ஆயிஷா அப்-செட் ஆகி அழ ஆரம்பித்தார். பின்னர், நேற்று கிச்சன் டீமில் வந்த சண்டை போல், இன்றும் ஒரு பெரிய சண்டை வெடிக்க போகிறது. நேற்று நடந்த கலவரத்திற்கும் இன்று நடக்கபோவதற்கும், வித்தியாசம் ஒன்று இருக்கிறது. அது டீ காபிக்கு வெடித்த கலவரம், இது சாம்பாருக்கு வெடிக்க போகும் ப்ரளயம். இன்று, கொஞ்சம் கோவம் கொஞ்சம் அழுகை கொஞ்சம் என மொத்தமாக எமோஷனல் எபிசோடாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க : Bigg Boss 6 Tamil Promo: நேற்று டீ, காபி... இன்னைக்கு சாம்பாரா? பிக்பாஸில் தொடரும் உணவுச் சண்டை!