BiggBoss 5 Tamil Promo: ‘என்ன வெளிய அனுப்புங்க... I will go out...' - பிக்பாஸை மன்றாடும் ப்ரியங்கா!
பிக் பாஸ் பிரேக்கிங் நியூஸ் நிகழ்ச்சி வீட்டிற்குள் அரங்கேறியது. அந்த டாஸ்க் நடந்து முடிந்ததில் இருந்து வீட்டுக்குள் பிரச்சனையோ பிரச்சனை.
![BiggBoss 5 Tamil Promo: ‘என்ன வெளிய அனுப்புங்க... I will go out...' - பிக்பாஸை மன்றாடும் ப்ரியங்கா! Bigg Boss 5 Tamil Promo: Day 61 promo 1 priyanka, niroop, and abishek gets into serious fight BiggBoss 5 Tamil Promo: ‘என்ன வெளிய அனுப்புங்க... I will go out...' - பிக்பாஸை மன்றாடும் ப்ரியங்கா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/03/a73491d8cd1f8d49054cb5fc6439db96_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Bigg Boss 5 Tamil Day 61: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணியை அடுத்து, நவம்பர் 28-ம் தேதி ஒளிபரப்பான எபிசோடில் ஐக்கி பெர்ரி எலிமினேட் செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து, இந்த வாரத்தின் முதல் நாளான்று பிக் பாஸ் வீட்டில் தலைவருக்கான போட்டி நடைபெற்றது. இதில், இமான், சிபி, அபிஷேக் ஆகியோர் போட்டியில் கலந்து கொண்டனர். சிறப்பாக விளையாடி இமான் இந்த வாரத்திற்கான தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ஆளுமையை பயன்படுத்தி நிரூப் இமானின் தலைவர் பதவியை தட்டி பறிக்கிறார். இதனால் பிக் பாஸ் வீட்டில் மோதல் வெடித்தது. அதனை தொடர்ந்து, அக்ஷ்ரா,பாவனி, சிபி, இமான், ப்ரியங்கா, வருண், அபிஷேக், ராஜூ, தாமரை மற்றும் அபினய் என 10 பேர் நாமினேட்டாகினர்.
இந்நிலையில், பிக் பாஸ் பிரேக்கிங் நியூஸ் நிகழ்ச்சி வீட்டிற்குள் அரங்கேறியது. அந்த டாஸ்க் நடந்து முடிந்ததில் இருந்து வீட்டுக்குள் பிரச்சனையோ பிரச்சனை. அந்த வரிசையில், இன்றைய முதல் ப்ரொமோவில் நீருப் - அபிஷேக் - ப்ரியங்கா மத்தியில் மோதல் வெடிக்கின்றது. இதனால், கடுப்பாகும் ப்ரியங்க, ‘என்ன வெளிய அனுப்புங்க, I will go out' என கேமரா பார்த்து பேசுகிறார்.
#Day61#Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/rzEj8dEIvl
— Vijay Television (@vijaytelevision) December 3, 2021
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)