Bigg Boss 5 Tamil Promo: புட்டு புட்டு வைத்த அபிஷேக்... தட்டிக்கொடுத்து பாராட்டிய அண்ணாச்சி... புகைச்சலுக்கு தயாராகும் பிக்பாஸ் வீடு!
Bigg Boss 5 Tamil Promo Today: ஒவ்வொரு போட்டியாளர் பற்றியும், தன்னுடைய கருத்துகளை தெறிக்கவிடும் அபிஷேக்கிற்கு கை கொடுத்து ‘தம்ப்ஸ் அப்’ காட்டுகிறார் இமான் அண்ணாச்சி.
Bigg Boss 5 Tamil Day 9 Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் நாமினேஷன் நேற்று தொடங்கியது. இதனால் நேற்று முதல் பிக் பாஸ் சீசன் 5 சுவாரஸ்யாமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஒன்பதாவது நாளுக்கான முதல் ப்ரோமோ சற்றுமுன் வெளியானது. யூட்யூப் சேனலில் ரிவ்யூ சொல்லி வந்த அபிஷேக், இன்று முதல் பிக் பாஸ் வீட்டு போட்டியாளர்கள் பற்றிய ரிவ்யூவை தர தொடங்கியுள்ளார்.
ஒவ்வொரு போட்டியாளர் பற்றியும், தன்னுடைய கருத்துகளை தெறிக்கவிடும் அபிஷேக்கிற்கு கை கொடுத்து ‘தம்ப்ஸ் அப்’ காட்டுகிறார் இமான் அண்ணாச்சி. ப்ரோமோவில் பேசி கொண்டிருக்கும் அபிஷேக், “நடியா சங், வணிதா விஜயகுமார் போல வெளிப்படைத்தன்மையாக இருப்பவர், ஐக்கி பெர்ரியோடு யாராலும் நட்பு பாராட்ட முடியவில்லை, நிரூப் ஒரு விநோத பிறவி, பாவனி நாமினேஷனில் இடம் பெறாததற்கு அவருடைய கதை ஒரு முக்கிய காரணம், மக்களின் பார்வையில் இசை வாணிக்கு நிறைய சோகம் உண்டு. ஆனால், அதை அடிக்கடி வெளியே சொல்லிவிடுகிறார்” என பிக் பாக் போட்டியாளர்களை பற்றி தன்னுடைய கருத்துகளை தெரிவித்து வருகிறார். அபிஷேக் பேசுவதை பார்த்தால், பிக் பாஸ் வீடு பழைய பிக் பாஸ் வீடாக உருமாறி வருகின்றது என்பது தெளிவாக தெரிகிறது.
இதோ அந்த ப்ரொமோ வீடியோ உங்கள் பார்வைக்கு...
#Day9 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/6TaydCKBCL
— Vijay Television (@vijaytelevision) October 12, 2021
Biggboss Tamil 5 Episode 7 ரீகேப்
‘நான் இனிமே எப்பப்ப எப்படி நடந்துக்கணும்னு ப்ரியங்கா சொல்லிக் கொடுத்துச்சு. இனிமே சரியா நடந்துக்குவேன்னு’ இமான் அண்ணாச்சிகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாங்க தாமரைச்செல்வி. நீ எப்படி ஏற்கெனவே இருக்கியோ அப்படியே இரு. யாருக்காகவும் உன்னை நீ மாத்திக்க தேவையில்லன்னு அறிவுரை சொன்னாரு அண்ணாச்சி.
முதல் வீட்டுத்தலைவரை தேர்ந்தெடுக்குற டாஸ்க்கை வெச்சார் பிக்பாஸ். டாஸ்கோட பேரு ராஜாவுக்கு ராஜா நாந்தான். இடுப்புல பலூன் கட்டிக்கணும். ஊசி வைச்சு குத்துறதுல தப்பிக்குறவங்கதான் பிக்பாஸ் ஹவுஸ் தலைவர்/இல்லன்னா தலைவி.
கிராமியப் பாடல்களா, நாடகமா?
போட்டியில் இருந்து அவுட்டாகி வெளியேறிய அபினய், நிரூப்பின் பலூனை உடைக்கப்போனாரு. அப்போ இது ரொம்ப தப்பா இருக்குன்னு இமான் சொன்னார். உடனே அபினய் விரல நீட்டி இது வேண்டாம், இது வேண்டாம்னு எச்சரிச்சார். மறுபடியும் ரூல்ஸைப் படிச்சு தெரிஞ்சதும் அபினய் சாரியும் கேக்கல. அப்படியே டேக் இட் ஈஸி பாலிசி Mode ல நடந்துபோய்ட்டாரு. அபினய் இந்த ஆட்டிட்யூட் காட்டினா, கண்டிப்பா நாமினேஷன் குத்துக்கள் ஜாஸ்தியாதான் இருக்கும். சின்னப்பொண்ணும், தாமரைச்செல்வியும் சுற்றி விளையாடியனதும், நிரூப்பும், சின்னப்பொண்ணும் டான்ஸ் ஆடியதும் பாக்கவே செம்ம ரகளையா இருந்துச்சு. கடைசியா தாமரைச்செல்வியும், சின்னப்பொண்ணும் கடைசியா போட்டி போடும்போது, சின்னப்பொன்ணு தானாவே பலூனை உடைச்சிட்டாங்க. ப்ரியங்காகிட்ட பேசும்போதும், தாமரைச்செல்வி சரியில்லன்னு சின்னப்பொண்ணு சொன்னாங்க.
தாமரை வந்து நேர்ல மன்னிச்சிருங்கன்னு சின்னப்பொண்ணுகிட்ட சொன்னப்போ, விளையாட்டாதான் பேசுனேன். விளையாட்டாதான் நானே பலூவை உடைச்சுக்கிட்டேன்னு சொன்னாங்க சின்னப்பொண்ணு. சின்னப்பொன்ணு மாத்தி மாத்தி அந்நியன் மாதிரி பேசுறது நமக்கு நல்லாவே தெரியுது. இன்னைக்கு ஆடியன்ஸோட டிஸ்லைக் சின்னப்பொண்ணுக்குத்தான். நிரூப், இசைவாணி, நாடியா, ராஜு, ஐய்க்கி பெர்ரி, சுருதி, சிபி, மதுமிதா, இசைவாணி, வருண், சின்னப்பொண்ணு, அபினய், அபிஷேக், இமான் அண்ணாச்சி, அக்ஷரான்னு நாமினேஷன் லிஸ்ட் பெருசா போய்டுச்சு.
பாவனி மட்டும்தான் மிஸ்ஸிங்.
இங்கிலீஷ்ல பேசவே கூடாதுன்னு ஒரு போடு போட்டாங்க லீடர் தாமரை. மைக்கை கழட்டக்கூடாது. தூங்கக்கூடாதுன்னு சொன்னாங்க. நாமினேஷன் முடிஞ்சது. இனிமே ஜாலியா வேடிக்கை பாக்கலாம்னு ஒரு Announcement கொடுத்து முடிச்சுவெச்சாரு பிக்பாஸ். சந்தோஷமா பிக்பாஸ்
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்