Bigg Boss 5 Tamil Promo: ‛மனுஷங்க கொடுக்காத அங்கீகாரத்த.. ஒரு ஆப் கொடுத்திச்சு’ - நதியா சங் எமோஷனல்!
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர் தங்களது வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து வரும் நிலையில், இன்று நிரூப் நந்தகுமார், நதியா சங் ஆகியோர் தங்களது கதைகளை பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர்.
Bigg Boss 5 Tamil Day 11 Promo:விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் நாமினேஷன் நேற்று தொடங்கியது. இதனால் நேற்று முதல் பிக் பாஸ் சீசன் 5 சுவாரஸ்யாமாக தொடங்கியுள்ளது. இந்நிலையில், 11-வது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ சற்றுமுன் வெளியானது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர் தங்களது வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து வரும் நிலையில், இன்று நிரூப் நந்தகுமார், நதியா சங் ஆகியோர் தங்களது கதைகளை பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர்.
இன்று வெளியான இரண்டாவது ப்ரொமோவில், “அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு, எனக்கு அம்மா மேல என்னிக்கு ரொம்ப வெறுப்பு வந்துச்சுனா, போலீஸ்காரங்ககிட்ட அடி வாங்க வச்சாங்க. என் லைஃப் முழுக்க வேலை வேலைனு இருந்திருக்கேன். நான் என்னோட டீன் ஏஜ் வயச அனுபவிச்சதில்ல. காலேஜ் லைஃப் அனுபவிச்சதில்ல. மனுஷங்க கொடுக்காத ரெகக்னிஷன ஒரு ஆப் கொடுத்திச்சு” என நதியா சங் பேசியுள்ளார்.
இதோ அந்த ப்ரொமோ வீடியோ உங்கள் பார்வைக்கு...
#Day11 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/BDCAuoTQIj
— Vijay Television (@vijaytelevision) October 14, 2021
முன்னதாக, இன்று வெளியான முதல் ப்ரொமோவில், “நான் உள்ள வரேன்னு தெரியும்போது நிறைய பேரு ஷேர் பண்ணிருந்தீங்க. யாஷிகாவோட எக்ஸ்-பாய்ஃப்ரெண்டு உள்ள வரான்னு. நான் பெருமையா சொல்றேன். யாஷிகாதான் நான் இங்க வரதுக்கு காரணம். இது சொல்றதுக்கு எந்த அசிங்கமும் கிடையாது. நிறைய பேரு கேப்பாங்க, ஆனா, அவதான் எனக்கு ஒரு வாழ்க்கையை காட்டினா. மீடியா இண்டஸ்ட்ரில எந்த தொடர்பும் எனக்கு கிடையாது, அவதான் எனக்கு காட்டினா. ஏன் ஒர் பெண்ணால ஒரு பையன் வளர கூடாதா? பசங்களால நிறைய பெண்கள் வளரும்போது, ஒரு பெண்ணால ஒரு பையன் வளரக் கூடாதா?” என நிரூப் பாஸ்ட்டீவாக பேசி முடிக்கிறார். இதை கேட்டுக் கொண்டிருந்த மற்ற போட்டியாளர்கள் விசில் அடித்து, கைத்தட்டி கொண்டாடினர்.
வாழ்க்கை பயனத்தை பகிர்ந்து கொள்ளும் எபிசோட்கள் பிக் பாஸில் இந்த வாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. கவலைகளும், கண்ணீருமாய் இருந்த மற்றவர்களின் அனுபவத்தில் இருந்து மாறுபட்டு பாஸிட்டீவாக பேசி இருக்கிறார் நிரூப். அதனால், இன்றைய எபிசோடில், பல சுவாரஸ்யங்கள் காத்திருப்பதாக தெரிகின்றது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்