Bigg Boss 5 Tamil Promo: “அடிக்க அடிக்க நான் வந்துட்டே இருப்பேன்” - அபிஷேக் ராஜா எமோஷனல்!
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர் தங்களது வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து வரும் நிலையில், இரண்டாவது ப்ரொமோவில் அபிஷேக் ராஜா அவரது கதையைப் பகிர்ந்து கொள்கிறார்.
Bigg Boss 5 Tamil Day 10 Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் நாமினேஷன் நேற்று தொடங்கியது. இதனால் நேற்று முதல் பிக் பாஸ் சீசன் 5 சுவாரஸ்யாமாக தொடங்கியுள்ளது.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர் தங்களது வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து வரும் நிலையில், இன்று காலை வெளியான ப்ரொமோவில் தாமரைச் செல்வி பேசி வருவது போன்ற ப்ரொமோ வெளியானது. இந்நிலையில் சற்றுமுன் வெளியான இரண்டாவது ப்ரொமோவில் அபிஷேக் ராஜா அவரது கதையைப் பகிர்ந்து கொள்கிறார்.
அதில், “கடவுள் மேல வைக்கிற நம்பிக்கை மேல நம்பிக்கை இருக்கு. அந்த பில்டிங்ல இருக்கிற ஒவ்வொரு ப்ரிக்ல இருக்கிறதும் எங்கப்பா இரத்தம். எவனையும் ஏமாத்தி சம்பாதிக்கல. அடிக்க அடிக்க நான் வந்துட்டே இருப்பேன். இதுதான் நான். புடிச்சிருக்கோ புடிக்கலையோ, வேற வழி இல்ல” என அபிஷேக் எமோஷ்னலாக பேசிக் கொண்டிருந்தார்.
அபிஷேக்கின் கதையைப் பற்றி விவாதித்து கொண்டிருந்த ராஜூவும், அண்ணாச்சியும் கமென்ச் செய்து கொண்டிருந்தனர். அப்போது, “என்சைக்ளோபீடியா விக்கிறதுக்கு சில பேரு வருவாங்க, வேண்டாம்னு சொன்னாலும் வித்துட்டு போயிடுவாங்க. அந்த மாதிரி இருந்துச்சு அவன் ஆரம்பிக்கும்போது.” என ராஜூ சொல்ல, “அவன் சொன்ன கதையில எனக்கு புடிச்ச ஒரே ஒரு லைனு, அத இரண்டு வருஷத்துல மீட்டேன் சொன்னான் பாரு அதான் ஹைலைட்” என இமான் அண்ணாச்சி கருத்து தெரிவித்துள்ளார்.
இதோ அந்த ப்ரொமோ வீடியோ உங்கள் பார்வைக்கு...
#Day10 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/DGEUe6Wkgi
— Vijay Television (@vijaytelevision) October 13, 2021
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
முன்னதாக, இன்று காலை வெளியான பத்தாவது நாளுக்கான முதல் ப்ரொமோவில், ”என் பையன நான் பார்க்கவே இல்லை. அவன தேடி போனேன். ஆனா, அவன் அங்கையே இருந்திருக்கிறேனு சொல்லிட்டான். என் புள்ளைய பார்த்து நாலு மாசமாச்சு. என் பையன ரொம்ப பிடிக்கும். போன்ல பேச மாட்டான், என்ன பார்க்க மாட்டான், நான் தப்பு பண்ணிட்டனு நினைக்குறான். அவன காப்பாத்தானும்னுதான் இங்க வந்தேன்” என கண்ணீர் மல்க நெகிழ்ச்சியாய் பேசிக் கொண்டிருந்தார் தாமரைச் செல்வி. அவரது கதையை கேட்டு கொண்டிருந்த மற்ற போட்டியாளர்களின் கண்களும் நீர் வடிய முதல் ப்ரோமோ முடிவடைந்தது.
#Day10 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/JdD8qGCTru
— Vijay Television (@vijaytelevision) October 13, 2021
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்