Bigboss Ultimate : பிக்பாஸ் ரசிகர்களை கடுப்பேற்றுகிறாரா கலக்கப்போவது யாரு பிரபலம் சதீஷ்..?
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலக்கப்போவது யாரு சதீஷின் பெர்பாமென்ஸ் ரசிகர்கள் மத்தியில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது.
![Bigboss Ultimate : பிக்பாஸ் ரசிகர்களை கடுப்பேற்றுகிறாரா கலக்கப்போவது யாரு பிரபலம் சதீஷ்..? bigboss ultimate programme comedy actor and kalakkapovathu yaru fame sathish disappointed performance Bigboss Ultimate : பிக்பாஸ் ரசிகர்களை கடுப்பேற்றுகிறாரா கலக்கப்போவது யாரு பிரபலம் சதீஷ்..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/10/955614411d8b95ca221797aa4488e9d7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடர் தமிழ்நாடு முழுவதும் பிரபலம். இந்த தொடருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் ஒளிபரப்ப தொடங்கப்பட்டது. 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் தற்போது விறுவிறுவிப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில், போட்டியாளர்களின் மனதில் இருப்பதை சொல்லும் டாஸ்க் நடைபெற்றது. அதில், சக போட்டியாளர்களின் மனதில் இருப்பதை மற்ற போட்டியாளர்கள் சொல்வது போல இந்த டாஸ்க் இருந்தது. இதில், இந்த பிக்பாஸ் அல்டிமேட் சீசனில் பங்கேற்கும் வரை பங்கேற்போம் என்ற மனநிலையில் விளையாடுபவர் யார்? என்று பிக்பாஸ் கேட்டது.
அதற்கு பெரும்பாலான போட்டியாளர்கள் சதீஷின் புகைப்படத்தையே காட்டினர். கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சி மூலம் பிரபலமான சதீஷ் இந்த போட்டியில் பங்கேற்றார். ஆனால்., அவர் பிற போட்டியாளர்கள் அளவிற்கு இந்த சீசனில் ஆர்வம் காட்டவில்லை என்று ரசிகர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாகவே அவர் மீது சக ஹவுஸ்மேட்களுக்கும் பெரியளவில் ஈடுபாடு வரவில்லை என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே, பிக்பாஸ் வீட்டில் பாலா, நிரூப், சுரேஷ் தாத்தா, ஜூலி, சுருதி என அவரவர் தங்களது பாணியில் செயல்பட்டுக்கொண்டிருக்க, வைல்ட் கார்டு ரவுண்ட் மூலமாக சதீசும், ரம்யா பாண்டியனும் உள்ளே நுழைந்தனர். விஜய் டி.வி. பிரபலங்களாக இதற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் களம் கண்ட தாடி பாலாஜி, கவின், ரியோ ராஜ், அறந்தாங்கி நிஷா, பிரியங்கா ஆகியோர் பார்வையாளர்களை கவரும் விதமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பிரியங்கா கடந்த சீசனில் ஆடி இரண்டாவது இடத்தை பிடித்தார்.
ஆனால், இந்த முறை களமிறக்கப்பட்ட சதீஷ் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அவர் கலக்கப்போவது யாரு பிரபலம் என்பதால் அவர் கலக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், பெரியளவில் அவர் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இதனால், அவர் விரைவில் எலிமினேஷன் ஆவார் என்று கருதப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)