மேலும் அறிய

தூங்குறவங்க காதிலும், வயதானவர்களிடமும் விசில் அடிக்காதீங்க.! ஓட்டு போயிடும்- செங்கோட்டையன் அட்வைஸ்

TVK Sengottaiyan: யாரிடம் கேட்டாலும் தவெகவிற்கு தான் ஓட்டு என கூறுகிறார்கள். திமுகவினரிடம் கேட்டால் நமக்கு தான் ஓட்டு, எந்த கட்சியை கேட்டாலும் தளபதிக்கு தான் ஓட்டு என தெரிவிப்பதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தேர்தலை எதிர்கொள்ள தயாராகும் தவெக

தமிழக வெற்றிக்கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்றது.  தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், அரசியல் வரலாற்றில் 50ஆண்டு காலத்திற்கு பிறகு ஒரு புதிய முகத்தை எதிர்கால தமிழகத்தை ஆள போகிற வெற்றிக்கழக தலைவர் உடன் இணைந்து ஆற்றுகிற வாய்ப்பை எனக்கு தந்துள்ளார்கள். இங்கு பார்க்கும் போது எல்லாலோரும் கையில் விசில் வைத்துள்ளீர்கள். ஆனால் நாளை காவல்துறை கூட விசிலை அடிக்க முடியாத நிலை உருவாகும். பேருந்தில் நடத்துனர்கள் விசில் அடிக்க மாட்டார்கள். 

2 நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து அழைத்து வரப்பட்டனர்.  தொலை தூரத்தில் இருந்து வந்தவர்கள் தூங்கி கொண்டிருந்தார்கள். அப்போது அந்த கூட்டத்தில் திமுகவை வீழ்த்துவோம் என கூறினார்கள். ஆனால் ஒருவரும் கை தட்டவில்லை. ஆனால் திமுகவை வீழ்த்தும் ஒரு தலைவர் தளபதி தான். 10 கூட்டணி, 8 கூட்டணி இதையெல்லாமல் தூள் தூளாக்கும் சக்தி யாருக்கு உள்ளது என்று சொன்னால் அது வெற்றிக்கழகத்தலைவர் வருங்கால முதலமைச்சராக வரவிருக்கும் விஜய்க்கு தான் உள்ளது. 

ஆளை விட்டா போதும்டா.. செங்கோட்டையன்

பல தலைவர்களை பார்த்து விட்டு வந்துள்ளேன். புரட்சி தலைவரை பார்த்தேன், அப்போது உங்களை போல தான் நானும் இருந்தேன். ஆனால் நம்முடைய தலைவரோடு இணைந்ததற்கு பிறகு எங்கு சென்றாலும் உங்களை பார்க்கும்போது ஆளை விட்டால் போதும் எனத் தோன்றுகிறது. ஒரு பக்கம் செல்பி எடுக்கிறார்கள், இன்னொரு பக்கம் பெண்களும் ஓடி வந்து படம் எடுக்கிற காட்சியையும் பார்த்தேன். இது இந்திய வரலாற்றில் யாருக்குமே இல்லாத ஒரு புகழ் தளபதிக்கு இருக்கிறது என்ற வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய நோக்கம் தமிழ்நாடு மக்களை வாழ வைப்பதுதான் நம்முடைய நோக்கம். ஏறத்தால ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை வேண்டியதில்லை என்று சொல்லிவிட்டு மக்களை காப்பதற்காக ஒரு தலைவர் இங்கே வந்திருக்கிறார். அவருடைய ஆற்றலும் சிந்தனையும் தொலைநோக்கு பார்வையும் மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். 

 10 கட்சி கூட்டணியை அசைத்துவிட முடியுமா என நினைத்தார்கள். ஆனால் எல்லோரும் ஆடிப்போய் நிற்கிறார்கள். அந்த இரு கட்சியிலும் இருக்கின்ற தலைவர்கள், தலைவர்களே அல்ல. ஏனென்று சொன்னால் தலைமை என்பது வேறு. ஆனால் இன்று இருக்கக்கூடிய தலைமை ஆடிப்போய் இருக்கிறது. இவர் எப்போது வெளிவந்தாலும் சரி, தமிழ்நாடு மக்கள் இவரை முதலமைச்சராக மாற்றியே தீருவோம் எனச் சூழரை ஏற்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே வந்திருக்கிற செயல்வீர்களுக்கு தெரியும். 

யார் காதிலும் விசில் அடிக்காதீங்க..

நீங்கள் கவலைப்பட தேவையில்லை. எந்த சக்தியாலும் தமிழ்நாட்டிலே இனி நம்மை தடுத்து நிறுத்த முடியாது. தமிழ்நாட்டின் மண்ணிலே அவர் முதலமைச்சராவதை எந்த சக்தியாலும் தடுத்து விட முடியாது, நமக்கு விசில் சின்னம் கிடைத்திருக்கிறது. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தூங்கிக் கொண்டிருப்பவர் காதிலே சென்று விசிலை அடித்து விடாதீர்கள். ஓட்டு போய்விடும். பஸ் ஸ்டாண்டில் வயதாக தடுமாறிக் கொண்டிருக்கிற பெரியவர் அருகே திடீரென்று விசில் அடித்தால் அவர் தடுமாறி போய்விடுவார். ஆகவே நம்முடைய விசிலை பொறுத்தவரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அவர்கள் போடுகிற வாக்கில் தான் வெற்றி கிடைக்கும். மற்ற இடங்களில் ஆயிரத்தை கொடுத்து கூட்டத்தை கூட்டுகிறார்கள். ஒரு ரூபாய் கூட  கொடுக்காமல் கூடும் கூட்டம் பார்க்கும் போது தமிழகத்தில் நம்மை வெல்ல எந்த சக்தியும் இல்லை என்ற காலம் அமையும் என செங்கோட்டையன் தெரிவித்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Ind vs Afg: அசத்திய ஆரோன் ஜார்ஜ்! ஆப்கானை அசால்ட்டாக வீழ்த்திய ஆயுஷ் பாய்ஸ்... U19 உலகக்கோப்பையில் இந்தியா
Ind vs Afg: அசத்திய ஆரோன் ஜார்ஜ்! ஆப்கானை அசால்ட்டாக வீழ்த்திய ஆயுஷ் பாய்ஸ்... U19 உலகக்கோப்பையில் இந்தியா
AIADMK Election Manifesto: கல்வி கடன் தள்ளுபடி.. முதியோர்களுக்கான ஓய்வூதியம் ரூ.2000 உயர்வு- கொத்து கொத்தாக வாக்குறுதி அறிவித்த இபிஎஸ்
கல்வி கடன் தள்ளுபடி.. முதியோர்களுக்கான ஓய்வூதியம் ரூ.2000 உயர்வு- கொத்து கொத்தாக வாக்குறுதி அறிவித்த இபிஎஸ்
Pariksha Pe Charcha 2026: முதல்முறையாக தமிழ்நாட்டில்... தேர்வு பயம் நீங்க வருகிறது பரிக்ஷா பே சர்ச்சா! பிரதமர் மோடியுடன் லைவ் உரை, எங்கே தெரியுமா?
Pariksha Pe Charcha 2026: முதல்முறையாக தமிழ்நாட்டில்... தேர்வு பயம் நீங்க வருகிறது பரிக்ஷா பே சர்ச்சா! பிரதமர் மோடியுடன் லைவ் உரை, எங்கே தெரியுமா?
Kamal in Rajya Sabha: ''தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான்“ மக்களவையில் பொளந்துகட்டிய கமல்
''தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான்“ மக்களவையில் பொளந்துகட்டிய கமல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்
Tirunelveli News | சமபந்தி விருந்தில் தீண்டாமை விரட்டப்பட்ட நரிக்குறவர் சிறுவர்கள் வெடித்த சர்ச்சை
US Trade Deal with India |
US Trade Deal with India | ட்ரம்ப் விரித்த வலை ரஷ்யா நட்பை முறிக்கும் இந்தியா? மோடி முடிவின் பின்னணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ind vs Afg: அசத்திய ஆரோன் ஜார்ஜ்! ஆப்கானை அசால்ட்டாக வீழ்த்திய ஆயுஷ் பாய்ஸ்... U19 உலகக்கோப்பையில் இந்தியா
Ind vs Afg: அசத்திய ஆரோன் ஜார்ஜ்! ஆப்கானை அசால்ட்டாக வீழ்த்திய ஆயுஷ் பாய்ஸ்... U19 உலகக்கோப்பையில் இந்தியா
AIADMK Election Manifesto: கல்வி கடன் தள்ளுபடி.. முதியோர்களுக்கான ஓய்வூதியம் ரூ.2000 உயர்வு- கொத்து கொத்தாக வாக்குறுதி அறிவித்த இபிஎஸ்
கல்வி கடன் தள்ளுபடி.. முதியோர்களுக்கான ஓய்வூதியம் ரூ.2000 உயர்வு- கொத்து கொத்தாக வாக்குறுதி அறிவித்த இபிஎஸ்
Pariksha Pe Charcha 2026: முதல்முறையாக தமிழ்நாட்டில்... தேர்வு பயம் நீங்க வருகிறது பரிக்ஷா பே சர்ச்சா! பிரதமர் மோடியுடன் லைவ் உரை, எங்கே தெரியுமா?
Pariksha Pe Charcha 2026: முதல்முறையாக தமிழ்நாட்டில்... தேர்வு பயம் நீங்க வருகிறது பரிக்ஷா பே சர்ச்சா! பிரதமர் மோடியுடன் லைவ் உரை, எங்கே தெரியுமா?
Kamal in Rajya Sabha: ''தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான்“ மக்களவையில் பொளந்துகட்டிய கமல்
''தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான்“ மக்களவையில் பொளந்துகட்டிய கமல்
TN Power Shutdown (5-2-2026): நாளை மின் தடை: சென்னை, ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர் உட்பட பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்! உங்க ஊர் இருக்கா?
TN Power Shutdown (5-2-2026): நாளை மின் தடை: சென்னை, ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர் உட்பட பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்! உங்க ஊர் இருக்கா?
Honda Hornet 2.0: ஸ்டைல், பவர், மைலேஜ்; ஹோண்டா ஹார்னெட் 2.0-ன் விலை, அம்சங்கள் என்ன.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
ஸ்டைல், பவர், மைலேஜ்; ஹோண்டா ஹார்னெட் 2.0-ன் விலை, அம்சங்கள் என்ன.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
CUET UG 2026: க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி! முக்கிய வழிமுறைகள், பாடத்திட்டம் இதோ!
CUET UG 2026: க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி! முக்கிய வழிமுறைகள், பாடத்திட்டம் இதோ!
Edappadi Palanisamy: முதல்ல இதை பண்ணுங்க.. அப்புறம் வந்து பேசுங்க.. விஜய்க்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி!
Edappadi Palanisamy: முதல்ல இதை பண்ணுங்க.. அப்புறம் வந்து பேசுங்க.. விஜய்க்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி!
Embed widget