மேலும் அறிய

Toyota Ebella Vs Maruti E-vitara: டொயோட்டா Vs மாருதியின் முதல் மின்சார கார் - எது பெஸ்ட்? விலை, ரேஞ்ச் எப்படி? அம்சங்கள்

Toyota Ebella Vs Maruti E-vitara EV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் முன்னணி நிறுவனங்களான டொயோட்டா மற்றும் மாருதி சார்பில் களமிறக்கப்பட உள்ள முதல் மின்சார கார்களின் ஒற்றுமை, வேற்றுமைகளை இங்கே அறியலாம்.

Toyota Ebella Vs Maruti E-vitara EV: டொயோட்டா எபெல்லா மற்றும் மாருதி இ-விட்டாரா மின்சார கார்களின் ஒற்றுமை, வேற்றுமைகளை இங்கே அறியலாம்.

டொயோட்டா எபெல்லா Vs மாருதி இ-விட்டாரா

ஜப்பானை சேர்ந்த மாருதி சுசூகி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் இந்திய சந்தையில் முன்னணி ப்ராண்ட்களாக உள்ளன. இவை இரண்டும் தொழில்நுட்பங்கள் மற்றும் தரவுகளை பகிர்ந்துகொண்டு உள்நாட்டில் கார்களை விற்பனை செய்து வருகின்றன. இந்நிலையில், டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூசர் எபெல்லா மாடல் மூலமும், மாருதி நிறுவனம் இ-விட்டாரா மாடல் மூலமும், இந்திய சந்தையில் தங்களது மின்சார கார் பிரிவினை தொடங்க உள்ளன. இவை இரண்டுமே ஒரே கட்டமைப்பில் உருவாக்கப்பட்டு, பல பிரதான மெக்கானிக்கல் அம்சங்களை பகிர்ந்துகொள்கின்றன. அதேநேரம், டிசைன் அடிப்படையில் சில வித்தியாசங்களை பின்பற்றுகின்றன. விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ள இந்த இரண்டு கார் மாடல்கள் இடையேயான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 

எபெல்லா Vs இ-விட்டாரா: வெளிப்புற முன்பகுதி

இரண்டு கார் மாடல்களின் அளவிடூகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தாலும், தோற்ற அடிப்படையில் இரண்டு கார்களும் வித்தியாசமாக காட்சியளிக்கின்றன. எபெல்லாவின் முன்பக்கத்தில் க்ளாசிக் மின்சார கார்களுக்கான டிசைன் இடம்பெற்றுள்ளது. அதாவது சுத்தமான மற்றும் மாடர்ன் தோற்றத்தை கொண்டுள்ளது. பிக்சல் மாதிரியான பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகளுடன் கூடிய மோனோபாட் எல்இடி முகப்பு விளக்கு எபெல்லாவை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது. மேலும் இதை கூர்மையானதாகவும், மாருதியின் காரை காட்டிலும் எதிர்காலத்திற்கான டிசைனை கொண்டிருப்பதாகவும் காட்டுகிறது.

Toyota Ebella Vs Maruti E-vitara: டொயோட்டா Vs மாருதியின் முதல் மின்சார கார் - எது பெஸ்ட்? விலை, ரேஞ்ச் எப்படி? அம்சங்கள்

அதற்கு நேர் எதிராக இ-விட்டாராவின் முன்பகுதி கூர்மையான மற்றும் ரக்கட் ஆன தோற்றத்தை கொண்டுள்ளது. அதன் லைட்டிங் அம்சங்கள் தடிமனானதாகவும், பம்பர் வடிவமைப்புகள் வலுவானதாகவும், எஸ்யுவியை போன்றும் உள்ளது. இது மின்சார கார்களிலும் வழக்கமான மற்றும் கட்டுமஸ்தான தோற்றத்தை விரும்புவோரின் கவனத்தை ஈர்க்கலாம்.

எபெல்லாவில் கனெக்டிங் லைட் பட்டைக்கு மேலே டொயோட்டாவின் லோகோ இடம்பெற்றுள்ளது. அதேநேரம், இ விட்டாராவின் பாரம்பரிய முறைப்படி நடுப்பகுதியில் மாருதியின் லோகோ உள்ளது. இ-விட்டாராவில் உள்ள ஃபாக் லேம்ப்கள் எபெல்லாவில் இல்லை. இரண்டு கார்களின் பானெட்களில் கூர்மையாக கோடுகள் காணப்படுகின்றன.

எபெல்லா Vs இ-விட்டாரா: வெளிப்புற பக்கவாட்டு பகுதி

பக்கவாட்டில் எபெல்லாவின் தோற்றமானது இ-விட்டாராவை போன்றே பிரதிபலிக்கிறது. இரண்டு மின்சார கார்களிலும் வீல் ஆர்ச்களை சுற்றி தடிமனான கருப்பு நிற க்ளாடிங் இடம்பெற்றுள்ளது. கதவுகளுக்கு அடியிலும் இது வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களிலுமே 18 இன்ச் ஏரோடைனமிக் அலாய் வீல்களையே கொண்டுள்ளன. ஆனால், தனித்துவமான தோற்றத்திற்காக வித்தியாசமான டிசைன்களை கொண்டுள்ளன. 

Toyota Ebella Vs Maruti E-vitara: டொயோட்டா Vs மாருதியின் முதல் மின்சார கார் - எது பெஸ்ட்? விலை, ரேஞ்ச் எப்படி? அம்சங்கள்

எபெல்லா Vs இ-விட்டாரா: வெளிப்புற பின்பகுதி

பின்புறத்தில் டொயோட்டா எபெல்லாவானது பிக்சல் அடிப்படையிலான எல்இடி டெயில்லைட்களை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் இருப்பதை போன்ற பகல்நேரங்களில் ஒளிரும் விளக்கை கொண்டுள்ளது. இதேபோன்று இ-விட்டாராவில் முன்புறத்தில் இருப்பதை போன்ற Y வடிவிலான பகல் நேரங்களில் ஒளிரும் எல்இடி விளக்கு அமைப்பை அப்படியே பின்பற்றுகிறடு. இரண்டு எஸ்யுவிக்களுமே ரக்கட் ஆன லுக்கை கொண்ட பம்பரை பயன்படுத்துகின்றன. கட்டுமஸ்தான தோற்றத்திற்காக இரண்டிலுமே ஷார்க் ஃபின் ஆண்டெனா உடன் ரூஃப் மவுண்டட் ஸ்பாய்லர் இடம்பெற்றுள்ளது. இ-விட்டாராவில் டெயில் கேட்டின் மையப்பகுதியில் அதன் பெயர் பொருத்தப்பட்டுள்ளது. அதேநேரம், எபெல்லாவில் டெயில்கேட்டின் கீழே வலது ஓரமாக அதன் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் இரண்டு கார்களுமே தங்களுக்கான தனித்துவமான டிசைன் மற்றும் அடையாளங்களை கொண்டுள்ளது. மிகவும் ரக்கட் ஆன மின்சார எஸ்யுவியை விரும்பினால் இ-விட்டாரா சரியான தேர்வாக இருக்கும். மெல்லிய மற்றும் மாடர்ன் டச்சை விரும்பினால் எபெல்லாவை நாடலாம்.

Toyota Ebella Vs Maruti E-vitara: டொயோட்டா Vs மாருதியின் முதல் மின்சார கார் - எது பெஸ்ட்? விலை, ரேஞ்ச் எப்படி? அம்சங்கள்

எபெல்லா Vs இ-விட்டாரா: உட்புற வடிவமைப்பு

எபெல்லா மற்றும் இ-விட்டாராவின் உட்புறம் சென்றால் வேற்றுமைகளை காட்டிலும் ஒற்றுமைகளையே அதிகம் காண முடிகிறது. மாருதியின் காரில் இருப்பதைபோன்ற அதே டேஷ்போர்ட் டிசைன் மற்றும் லே-அவுட்டை டொயோட்டா பின்பற்றுகிறது. டேஷ்போர்டில் அகலமான இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்க்ரீன் ஆனது பிரதானமானதாக அமைந்துள்ளது. இது முற்றிலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டரும் இணைந்துள்ளது. இரண்டுமே பராமரிப்பிற்கு எளிதான டார்க் ப்ளாக் மற்றும் டேன் டூயல் டோன் தீமை பின்பற்றுகின்றன.  இரண்டிலும் ஒரே மாதிரியான ஃப்ளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல் உள்ளதோடு வாட்டர் பாட்டில் மற்றும் மொபைல்களுக்கான இடவசதியும் இடம்பெற்றுள்ளது.

Toyota Ebella Vs Maruti E-vitara: டொயோட்டா Vs மாருதியின் முதல் மின்சார கார் - எது பெஸ்ட்? விலை, ரேஞ்ச் எப்படி? அம்சங்கள்

எபெல்லா Vs இ-விட்டாரா: உட்புற வசதிகள்

அம்சங்களை கருத்தில் கொண்டால், எபெல்லா மற்றும் இ விட்டாரா இரண்டும் ஒரே மாதிரியானவற்றை பெற்றுள்ளன. அதில் 10.1-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட், 10.25-இன்ச் டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல், பல வண்ண ஆம்பியண்ட் விளக்குகள், ஃபிக்ஸ்ட் கண்ணாடி ரூஃப், காற்றோட்டமான முன் இருக்கைகள் மற்றும் 10-வழிகளில் அதெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை ஆகியவை அடங்கும். ஒரே வித்தியாசம் என்னவென்றால், எபெல்லாவில் e விட்டாராவின் 10-ஸ்பீக்கர் இன்ஃபினிட்டி யூனிட்டுடன் ஒப்பிடும்போது 10-ஸ்பீக்கர் JBL ஆடியோ சிஸ்டம் உள்ளது.

எபெல்லா Vs இ-விட்டாரா: பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்களில் ஏழு ஏர்பேக்குகள், EBD உடன் ABS, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், 360-டிகிரி கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை அடங்கும். இரண்டு மின்சார கார்களிலும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் டிபார்ட்சுர் வார்னிங் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் கண்காணிப்பு போன்ற அம்சங்களுடன் லெவல்-2 ADAS சூட்டும் இடம்பெற்றுள்ளது.

Toyota Ebella Vs Maruti E-vitara: டொயோட்டா Vs மாருதியின் முதல் மின்சார கார் - எது பெஸ்ட்? விலை, ரேஞ்ச் எப்படி? அம்சங்கள்

எபெல்லா Vs இ-விட்டாரா: பவர்ட்ரெயின்

பவர்ட்ரெயினை பொருத்தவரை எந்தவித மாற்றமும் இன்றி ஒரே மாதிரியான பேட்டரி ஆப்ஷன்களை கொண்டுள்ளன. 

பேட்டரி 49KWh 61KWh
சக்தி 144 PS 174 PS
டார்க் 189 Nm 189 Nm
ரேஞ்ச் 440KM 543KM

இரண்டு பேட்டரி பேக்குகளிலும் ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் அம்சம் மட்டுமே கிடைக்கிறது. 

எபெல்லா Vs இ-விட்டாரா: விலை, போட்டியாளர்கள்

இ-விட்டாராவின் விலை சுமார் 17 லட்சமாக நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படும் நிலையில், அதைவிட சற்றே அதிகமாக எபெல்லாவின் விலை சுமார் 18 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. உள்ளூர் சந்தையில் இந்த இரண்டு கார்களுமே  டாடா கர்வ், மஹிந்த்ரா BE 6, MG ZS EV, ஹுண்டாய் க்ரேட்டா மற்றும் விண்ட்சர் ஆகிய கார் மின்சார கார் மாடல்களுடன் போட்டியிட உள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
ஆகஸ்டில் அறிமுகமாகும் 3 புதிய கார் மாடல்கள்: கார்களின் சிறப்பம்சங்கள், விலை என்ன? முழு விவரம்
ஆகஸ்டில் அறிமுகமாகும் 3 புதிய கார் மாடல்கள்: கார்களின் சிறப்பம்சங்கள், விலை என்ன? முழு விவரம்
Next Gen Nexon: 5 ஸ்டார் ரேட்டிங், 4 எரிபொருட்கள் எல்லாமே இருக்கே..! அப்ப புதிய தலைமுறை நெக்ஸானில் என்ன வரும்?
5 ஸ்டார் ரேட்டிங், 4 எரிபொருட்கள் எல்லாமே இருக்கே..! அப்ப புதிய தலைமுறை நெக்ஸானில் என்ன வரும்?
LIVE | Kerala Lottery Result Today (29.07.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி குலுக்கல் முடிவுகள்- லட்சாதிபதி யார்?
LIVE | Kerala Lottery Result Today (29.07.2026): கேரளா தனலட்சுமி லாட்டரி குலுக்கல் முடிவுகள்- லட்சாதிபதி யார்?

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
மானக்கேடு; அரசே மதுவிற்பனை செய்வதோடு தனியாருக்கு தாரை வார்ப்பா? அன்புமணி கடும் எதிர்ப்பு
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
ஆயுஷ் மருத்துவப் படிப்புகள்; சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்னும் சிலநாளே அவகாசம்! விவரம்

Embed widget