Shivani Net Worth: 19 வயதிலேயே பிஎம்டபிள்யூ கார்... பிக்பாஸ் ஷிவானியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
பிரபல நடிகையாக வலம் வரும் ஷிவானி நாரயணனின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகை ஷிவானி நாரயணனின் சொத்து மதிப்பு 10 முதல் 11 கோடியாக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
பிரபல மாடலாக வலம் வந்த நடிகை ஷிவானி கடந்த 2016 விஜய் டிவியில் ஒளிப்பரப்பான 'சரவணன் மீனாட்சி சீசன் 3' யில் துணை நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘பகல் நிலவு’ சீரியல் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.
ஆரம்பித்த முதல் சீரியலிலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் டெலிவிஷன் அவார்டு ஷிவானிக்கு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து விஜய் டிவி ஜோடி ஃபன் அன்லிமிட்டடு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றார். அதனைத் தொடர்ந்து கடைகுட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட தொடர்களில் நடித்த ஷிவானி பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் பிரபலமடைந்தார்.
12 வகுப்பு மட்டுமே படித்திருக்கும் ஷிவானி மேற்படிப்பை தொடராமலே மாடலிங் துறைக்கு வந்து விட்டார். இவரது தந்தை நாரயணன் ஒரு தொழிலதிபர். அம்மா அனிகா நாராயணன் இல்லத்தரசி. வளர்ப்பு பிராணிகள் அதிகம் பாசம் கொண்ட ஷிவானி கடந்த 2018 ஆம் ஆண்டு Renault Kwid காரை வாங்கினார். அதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கருப்புக் கலர் பிஎம்டபூள்யூ 7 சீரிஸ் காரை வாங்கினார்.
இதன் விலை 1.38 கோடி ஆகும். 19 வயதே ஆகும் ஷிவானி முன்னதாக ஒரு எபிசோடிற்கு 12,000 முதல் 15,000 வரை சம்பளமாக பெற்றதாக சொல்லப்படுகிறது. ஷிவானி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து வருகிறார். இவரது தற்போதைய சொத்து மதிப்பு சராசரியாக 10 முதல் 11 கோடியாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
View this post on Instagram