Bigg Boss | ‛பிக்பாஸ் என் வாழ்க்கையை நாசமாக்கிடுச்சு...’ - நடிகர் சக்தி வேதனை!
நல்ல கதைக்களத்திற்காக காத்திருந்து பல படங்களை வேண்டும் என்றே ஒதுக்கிவிட்டேன் என தெரிவிக்கும் சக்தி,.அதில் முக்கியமானது களவாணி, தம்பிக்கோட்டை போன்ற படங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் தன்னுடைய வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிட்டதாகவும், இதில் எடிட் செய்த பிறகு தான் ஸ்கிரிப்ட் எழுதுவதால் யாரை வேண்டுமானாலும் நல்லவர்களாகவும், கெட்டவர்களாகவும் மாற்றலாம் என மன வேதனையுடன் பகிர்ந்துள்ளார் சக்தி வாசு.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் தான் வாசு. இவருடைய மகன் சக்தி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக வலம் வந்தாலும் அந்தளவிற்கு தமிழ் சினிமாவில் வெற்றி இலக்கை அடையவில்லை என்று தான் கூற வேண்டும். இருந்தப்போதும் நினைத்தாலே இனிக்கும், கள்ளச்சிரிப்பழகா , மகேஷ் சரண்யா மற்றும் பலர் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தார். இதுமட்டுமின்றி ஆக்சன் ஹூரோ ஆட்ட நாயகன் திரைப்படத்தில் நடித்த இவருக்கு இப்படம் சரியான வெற்றியைக் கொடுக்கவில்லை எனவும், முன்னதாக வந்த திரைப்படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்தால், தயாரிப்பாளர்கள் ஸ்கிரிப்டை மாற்றிமாற்றி எடுக்கச்சொன்னார்கள் என தெரிவித்துள்ளார் சக்தி.
இதனால் அடுத்த படங்களுக்கான வாய்ப்பு குறைந்ததாக கூறிய அவர், நல்ல கதைக்களத்திற்காக காத்திருந்து பல படங்களை வேண்டும் என்றே ஒதுக்கிவிட்டேன் என கூறியுள்ளார். அதில் முக்கியமானது களவாணி, தம்பிக்கோட்டை போன்ற படங்கள் என்றும் இந்த முடிவு தன்னுடைய வாழ்வில் சினிமா வாழ்க்கையை மிகவும் பாதித்ததாகவும் கூறியுள்ளார். அந்த படங்களில் தான் நடித்து இருந்தால் தற்போது நிச்சயம் பெரிய உயரத்தில் இருந்து இருப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் நடித்த பல படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் பெரிய சிக்கல் இருந்து வந்ததாகவும் தெரிவிக்கிறார்.
சினிமாத்துறையில் பல ஆண்டுகளாக வெளிவராமல் இருந்த சக்தி வாசு, விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக களம் இறங்கினார். பிக்பாஸ் வந்த போது பல்வேறு சண்டைகளில் ஈடுபட்ட அவரை பிக்பாஸ் வீட்டில் மட்டும் இல்லை வெளியிலும் டிரிக்கர் சக்தி என்று அழைக்கும் அளவிற்கு நடந்துக்கொண்டது மிகவும் பிரபலமானது. இந்நிலையில் தான் இதற்கு பதிலளிக்கும் விதமாக போட்டி ஒன்று அளித்த பிக்பாஸ் சக்தி, பிக்பாஸ் சென்றால் பலரின் வாழ்க்கையில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்படும் என்பார்கள். ஆனால் என்னுடைய வாழ்க்கையில் பிரச்சனையைத் தான் ஏற்படுத்தியது எனவும், குடும்பத்தில் மட்டுமில்லை சினிமா வாழ்க்கையிலும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியதாக மனவேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
மேலும் ஒரு சினிமா எடுக்கிறோம் என்றால், படங்களை ஸ்கிரிப்ட் செய்து எடிட் பண்ணுவோம். ஆனால் பிக்பாஸ் அதுப்போன்று இல்லை எடிட் செய்த பிறகு தான் ஸ்கிரிப்ட் எழுதுகிறார்கள். இப்படி முற்றிலும் மாறுபட்டதாக உள்ளதால் இதில் யாரை வேண்டுமானாலும் நல்லவர்களா காட்டாலம், யாரை வேண்டுமானாலும் கெட்டவர்களாக காட்டலாம் என தெரிவித்துள்ள கருத்து பிக்பாஸ் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தான் பிக்பாஸ் சென்றிருக்கக்கூடாது என மிக தாமதமாக தான் தனக்கு புரிந்ததாகவும் தெரிவித்துள்ளார். பிக்பாஸில் இருந்து வெளியில் வந்த பிறகு தான் என்ன நடந்தது? என தெரிய வந்தது எனவும் பகிர்ந்துள்ளார்.