ஜூலிக்கு நேர்ந்த கொடுமை... காதலன் ஏமாற்றியதாக போலீசில் கண்ணீர் புகார்!
திருமணம் செய்வதாக கூறி தன்னிடம் நகை, பணம், பல்சர் பைக் ஆகியவற்றை ஏமாற்றி வாங்கிவிட்டதாக அண்ணாநகர் காவல்நிலையத்தில் காதலன் மீது பிக்பாஸ் ஜூலி புகார் அளித்துள்ளார்.
ஒரு சில சின்னத்திரை நிகழ்ச்சிகள் உலகளவில் பிரபலமானவை. அப்படி நகர்ந்து நம்ம ஊருக்கு வந்தது தான் பிக்பாஸ். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிணக்கு பிக்பாஸ் முதல் பாகம் மூலம் மீண்டும் பிரபலமானவர் ஜூலி. இவர் அதற்கு பிறகு தொடர்ந்து ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிவரும் வேளையில் தற்போது தனது காதலன் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், திருமணம் செய்வதாக கூறி தன்னிடம் நகை, பணம், பல்சர் பைக் ஆகியவற்றை ஏமாற்றி வாங்கிவிட்டதாக அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஜூலி அவரது காதலன் மீது அளித்த புகாரை தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் அவரை கமெண்ட் செய்து வருகின்றனர்.
முன்னதாக, பிக்பாஸ் ஒரு வீட்டுக்குள்ள 100 நாள் இருக்கணுமாம்.. வீடு முழுக்க கேமராவாம் என்ற பல பல எதிர்பார்ப்பு பேச்சுகளுக்கு இடையே கமல்ஹாசன் குரலில் தொடங்கியது. முதல் சீசன் மீதான எதிர்பார்ப்பு அதனை பூர்த்தி செய்யவே செய்தது. ஜூலி, ஓவியா என பரபரப்பாகவே இருந்தது. ஆர்மிகளும், ஹேட்டர்களும் சோஷியல் மீடியாக்களில் சுற்றித் திரிந்தார்கள். முதல் சீசன் வெற்றி என்ற பெருமிதத்துடன் கணக்கை தொடங்கிய பிக்பாஸ் இன்று 5வது சீசனில் சென்றுகொண்டிருக்கிறது. முதல் சீசனில் இருந்த அதே சுவாரஸ்யமும், எதிர்பார்ப்பும் 5வது சீசனில் இருக்கிறதா என்றால், பெரும்பாலானோரின் பதில் இல்லையென்றே வருகிறது.
இதில் கலந்துகொள்ளவுள்ள பங்கேற்பாளர்கள் ஏற்கெனவே பிக்பாஸில் பங்கேற்றவர்களாவே இருப்பார்கள் என்ற தகவலும் கசிந்துள்ளது. அதன்படி, நடிகை ஓவியா பிக்பாஸ் ஓடிடியில் பங்கேற்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நாயகியான ஓவியா சோஷியல் மீடியாவில் பெரிய அளவில் கொண்டாடப்பட்டார். ஆர்மிகள் உருவாக்கப்பட்டு வைரலானார். அவர் மீண்டும் பிக்பாஸுக்குள் வந்தால் நிகழ்ச்சி நிச்சயம் தாறுமாறு ஹிட்டடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஜூலியும் பிக்பாஸ் வைரல்தான் என்பதால் அவரும் உள்ளே வர வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது பிக் பாஸ் 5 யில்...
இந்தநிலையில், தனது காதலன் மீது ஜூலியே புகார் அளித்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்