மேலும் அறிய

Bhagyalakshmi Serial: கோபியுடன் ராதிகா வீட்டுக்கு செல்லும் இனியா..கதையில செம ட்விஸ்ட்..பரபரக்கும் பாக்கியலட்சுமி சீரியல்!

Bhagyalakshmi Serial Written Update Today (17.11.2022):பாக்கியலட்சுமி சீரியலில் இனியா தனது அப்பா கோபியுடன் செல்ல முடிவெடுக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

பாக்கியலட்சுமி சீரியலில் இனியா தனது அப்பா கோபியுடன் செல்ல முடிவெடுக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

எதிர்பார்ப்புகள் நிறைந்த பாக்கியலட்சுமி

விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர்.  இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழுகிறார்.

அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது, அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில மாதங்களாக  எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.

குறிப்பாக பாக்யாவை விவாகரத்து செய்த நிலையில், ராதிகாவை திருமணம் செய்துக் கொண்டு தனது குடும்பத்தினருக்கு கோபி அதிர்ச்சியளித்தார். அதன் தொடர்ச்சியாக பாக்யா குடும்பம் இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டிலே இருவரும் மயூவுடன் குடியேறுகிறார்கள். இதன் பின்னர் நடக்கும் காட்சிகள் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம். 

சண்டை போடு கோபி

பள்ளியில் நடந்த பிரச்சனை தெரிய வந்ததால் வீட்டில் இனியாவை பாக்யா அடிக்கிறார். ஈஸ்வரியும் அடிக்க வர கோபத்தில் இனியா வீட்டை விட்டு வெளியேறுகிறார். அப்போது அங்கு வரும் கோபியிடம் நடந்ததை சொல்ல வா என்னவென்று கேட்கலாம் என தெரிவித்து மீண்டும் வீட்டுக்கு அழைத்து செல்கிறார். ஏன் அவளை திட்டுறீங்க என கோபி கேட்க, தப்பு பண்ணா திட்டத்தான் செய்வாங்க என ஈஸ்வரி தெரிவிக்கிறார்.

உடனே இனியா தன்னை அடிப்பதாக சொல்ல, பயந்து வீட்டை விட்டு ஓடுற அளவுக்கு அடிப்பீங்களா என கோபி கேள்வியெழுப்புகிறார். இப்பவும் நான் இனியாவோட அப்பா தான் என தெரிவிக்கிறார். அப்போது பாக்யா அப்பான்னா தப்பு பண்றப்ப கண்டிக்கணும். பிள்ளைங்களை நல்லா வளர்க்குறதும் தான். அதைவிட்டுட்டு தப்பு பண்றப்ப கூட நிக்குறது இல்ல என சொல்கிறார். 

அதற்கு கோபி என் பொண்ணோட ஸ்கூலுக்கு நான் போகத்தான் செய்வேன். எழில் நீங்க முதல்ல வெளியே போங்க என சொல்ல கோபி அமைதியாக இருக்குமாறு தெரிவித்து என்ன மிரட்ட நீ யாரு என கேட்கிறார். உடனே பாக்யா எழில் இனியாவுக்கு அண்ணன். உரிமையும் கடைமையும் அப்பாங்கிற பேர்ல வர்றது இல்ல. பொறுப்பா நடந்துக்கிறதுல வர்றது என சொல்ல, நான் பொறுப்பா தான் நடக்குறேன் என கோபி மல்லுக்கு நிக்கிறார். 

இவ்வளவு பெரிய பிள்ளைங்களை வச்சிகிட்டு இன்னொரு கல்யாணம் பண்ணவன் நீ என ஈஸ்வரி பேச, நான் பாக்யா வேண்டாம்ன்னு சொன்னாதால தான் பண்ணேன். குழந்தைகள் வேண்டாம்ன்னு சொல்லலையே என கோபி பதிலடி கொடுக்கிறார். உடனே எழில், செழியன் இருவரும் நாங்க வேணும்ன்னு சொல்லலையே என தெரிவிக்க, நான் என் பொண்ணுக்காக மட்டும் தான் பேசுறேன். அவ ஒரு குழந்தை. என்ன ஆனாலும் நான் அவளுக்கு அப்பா இல்லன்னு ஆகிடுமா என கோபி எகிறுகிறார். 

இதனையடுத்து எழில் கோபியிடம்  சண்டைக்கு செல்ல பாக்யா அமைதியாக இருக்குமாறு சொல்கிறார். இவ போன் பண்ணப்ப அம்மாவுக்கு போன் பண்ண சொல்லிருக்கலாம். நீங்க ஸ்கூலுக்கு போன அப்புறமாவது என்கிட்ட சொல்லிருக்கணும் என பாக்யா தெரிவிக்கிறார். 

இனியா எடுத்த முடிவு 

என் பொண்ணு என்னோட வந்தா நான் கூட்டிட்டு போக ரெடியா இருக்கேன் என சொல்லி இனியாவிடம் பாசமாக பேசுகிறார். இனியாவும் இங்க இருந்தா அடிப்பாங்க..அப்பா கூட்டிட்டு வந்தது அட்வைஸ் பண்ணுவாங்க. அதனால போலாம் என நினைத்து கோபி கையை பிடித்துக் கொள்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் பாக்யா குடும்பத்தினர் இனியாவை கோபி கூட போக வேண்டாம் என சொல்லி கூப்பிடுகின்றனர். ஆனால் இனியா வர மறுக்கிறார். பின்னர் கோபி இனியாவை அழைத்து செல்கிறார். 

கோபி முடிவால் ராதிகா அதிர்ச்சி 

இனியாவுடன் வீட்டுக்கு வரும் கோபியை பார்த்து ராதிகா அதிர்ச்சியடைகிறார். இனிமேல் அவ இங்க தான் இருப்பா. அந்த வீட்டுல இவளை டார்ச்சர் பண்றாங்க என நடந்ததை சொல்கிறார். ராதிகா சரி என இருக்கட்டும் என இனியாவை தொட அவள் விலகி செல்கிறாள். பின்னர் கோபி இனியா மற்றும் மயூவை அழைத்து உட்கார்ந்து பேசுவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanniyarasu Slams Aadhav Arjuna: ’’விஜய்தான் முக்கியமா! திருமாவை அவமதிக்காதே!'’ வன்னியரசு எச்சரிக்கைAllu Arjun son letter: ‘’அப்பா நீங்கதான் NO.1’’ மகன் எழுதிய CUTE LETTER! எமோஷனலான அல்லு அர்ஜுன்TANGEDCO Adani Tender: 19000 கோடி TANGEDCO டெண்டர்! தட்டி தூக்கிய அதானி! சிக்கலில் செந்தில்பாலாஜி?Drinking water mixed with sewage | குடிநீரில் கலந்த கழிவுநீர்? குடித்த நேரத்தில் பலியான 3 உயிர்..உச்சக்கட்ட பரபரப்பில் தாம்பரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
சீனியர்கள் சொல்லியும் கேட்காத திமுக! சண்டைக்கு தயாரான ஸ்டாலின்! கதிகலக்கத்தில் எதிர்க்கட்சிகள்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
Pushpa 2 Review: அல்லு அர்ஜூனின் புஷ்பா 2! நெருப்பா? வெறுப்பா? ரசிகனின் முழு திரைவிமர்சனம்!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
''விஜய் வந்தால் வரமாட்டேன்''- அம்பேத்கர் நூல் வெளியீட்டுக்கு செல்லாத திருமா- காரணத்தை போட்டுடைத்த விசிக!
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருக்கு கேன்சர்? அமெரிக்காவில் தீவிர சிகிச்சை! - ரசிகர்கள் அதிர்ச்சி
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாருக்கு கேன்சர்? அமெரிக்காவில் தீவிர சிகிச்சை! - ரசிகர்கள் அதிர்ச்சி
‘’உண்மையிலேயே தமிழச்சிக்குப் பிறந்திருந்தால்… வா மோதிப் பார்க்கலாம்’’- வருண்குமார் எஸ்பிக்கு சீமான் அழைப்பு!
‘’உண்மையிலேயே தமிழச்சிக்குப் பிறந்திருந்தால்… வா மோதிப் பார்க்கலாம்’’- வருண்குமார் எஸ்பிக்கு சீமான் அழைப்பு!
மன்சூர் அலிகான் மகன் கஞ்சா பயன்படுத்தியது உறுதி - வெளியான மருத்துவ அறிக்கையால் பரபரப்பு
மன்சூர் அலிகான் மகன் கஞ்சா பயன்படுத்தியது உறுதி - வெளியான மருத்துவ அறிக்கையால் பரபரப்பு
Jayalalithaa: சாகும் வரை CM..! ஜெ. ஜெயலலிதா - அறிந்ததும் அறியாததும்..!
Jayalalithaa: சாகும் வரை CM..! ஜெ. ஜெயலலிதா - அறிந்ததும் அறியாததும்..!
Embed widget