மேலும் அறிய

Baakiyalakshmi Serial: ராதிகா வீட்டுக்குப்போன பாக்யா.. அதிர்ந்துபோன கோபி.. என்ன ஆச்சு தெரியுமா? பரபரக்கும் ரசிகர்கள்..

பாக்கியலட்சுமி சீரியலின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இல்லத்தரசி ஒருவர் தன் வாழ்கையில் சந்திக்கும், பிரச்னைகளை மையமாக கொண்டு இந்தத்தொடர்  நகர்கிறது. கதையின் மைய கதாபாத்திரமான பாக்கியலட்சுமி கேரக்டரில் சுசித்ராவும், அவரது கணவர் கோபிநாத் கேரக்டரில் ராஜூவும் நடித்து வருகின்றனர். முன்னாள் காதலி ராதிகாவுடன் சுற்றும் கோபிநாத், அவளை திருமணம் செய்ய நினைக்கிறார். இதனால் தனது மனைவியான பாக்யாவை விவாகரத்து செய்ய முயல்கிறார். இதை அறியாத வெகுளி பாக்யா விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு குடும்ப நல நீதிமன்றம் வரை சென்றுவிடுகிறார். 

சூழ்நிலை இப்படி இருக்க, பகலில் ராதிகா வீட்டில் இருந்த கோபிநாத், இரவில் தன் வீட்டிற்கு வருவதை வழக்கமாக வைத்திருந்த நிலையில்  இப்போதெல்லாம் ராதிகா வீட்டிலேயே இருந்து விடுகிறார். இதை பாக்யா கேள்வி கேட்க,கோபி அதை தனது அதட்டலால் அடக்கி விடுகிறார். கோபியை கேள்வி கேட்டு வந்த தாத்தாவும் தற்போது பக்கவாதத்தில் படுத்துவிட்டார். பாட்டிக்கு கோபி மீது கோபம் கொப்பளித்தாலும், தாத்தாவை கவனிப்பதிலேயே காலம்  நகர்ந்து கொண்டிருக்கிறது. செழியன் சுயநலவாதி என்பது அப்பட்டமாக தெரிந்தாயிற்று. சூழ்நிலை இப்படி நகர்ந்து கொண்டிருக்க, நடுவில் பாக்யா, எழில், ஜெனி குடும்பத்தை நடத்த கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். 

நிலைமை இப்படி இருக்க, எதைப்பற்றியும் கவலைக்கொள்ளாத கோபி ரொமான்ஸ் செய்து கொண்டிருக்கிறார். இதனால் கோபி அடுத்து என்ன செய்யப்போகிறார், பாக்யாவின் நடவடிக்கை எப்படி இருக்கும் என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தற்போது, பாக்கிய லட்சுமி சீரியலில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், ராதிகா வீட்டிற்கு பாக்யலட்சுமி செல்கிறார். அங்கு ராதிகா பாக்யாவிடம் எனக்கும் என்னோட ஃப்ரெண்டுக்கும் ஒரு உறவு இருக்கிறது. நாங்கள் விரைவில் கல்யாணம் செய்யப்போகிறோம் என்று கூறுகிறார். அதற்கு பாக்ய உங்களை கல்யாணம் செய்து கொள்பவர் உங்களை நன்றாக வைத்துக்கொள்வார் என்று கூறுகிறார். இதைக் உள்ளே இருந்த கேட்டுக்கொண்டிருந்த கோபி அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டார். பேசி முடித்துவிட்டு வெளியே வரும் பாக்யா, வெளியே நின்ற கோபியின் காரை பார்த்து விடுகிறார். இதையடுத்து ராதிகா சொன்ன அந்த ப்ரெண்ட் கோபியாக இருக்குமோ என்று சந்தேகம் எழ, அத்துடன் ப்ரோமோ முடிவடைகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
Embed widget