Watch Video : பென்னி தயாள் பற்றிய சீக்ரெட்... திருமண நாளில் தெரியாத உண்மைகளை பகிர்ந்த மனைவி...
பென்னி தயாள் மனைவி கேத்ரின் பிலிப் அவர்களின் திருமணம் குறித்த சில தகவல்களை அவர்களின் திருமண நாளை முன்னிட்டு வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான பாடகரான பென்னி தயாள் ஏராளமான ஹிட் பாடல்கள் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றவர். இவர் 2016ம் ஆண்டு நியூயார்க்கில் வசிக்கும் மாடல் கேத்ரின் பிலிப்பை மணந்தார். குவைத்தில் பிறந்து வளர்ந்த கேத்ரின் அமெரிக்கா முழுவதும் பல நிகழ்ச்சிகளில் மேடையேறியுள்ளார். இந்திய பாரம்பரிய நடனத்தில் பயிற்சி பெற்றவர்.
பென்னி தயாள் - கேத்ரின் பிலிப் தம்பதி இன்று அவர்களின் ஏழாம் ஆண்டு திருமண நிறைவு நாளை ஜூன் 5ம் தேதி கொண்டாடினார்கள். அவர்களின் திருமண நாளை முன்னிட்டு அவர்களின் திருமணம் குறித்த மூன்று தகவல்களை தனது இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்துள்ளார் கேத்ரின் பிலிப்.
1 . தயாள் என்பது எனது அதிகாரபூர்வமான கடைசி பெயர் இல்லை. நாங்கள் இருவரும் வெவ்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் என்பதால் எனது அனைத்து டாகுமெண்ட்களையும் மாற்றுவது என்பது கடினமானது. எனது பாஸ்போர்ட், OCI கார்டு, சோசியல் செக்யூரிட்டி கார்டு, டிரைவிங் லைசென்ஸ் என அனைத்தையும் எனது கடைசி பெயரை மாற்றாமல் அப்படியே கேத்ரின் பிலிப் என்றே தொடர்வது எளிதாக இருந்தது. அதிகாரப்பூர்வமாக நான் கேத்ரின் பிலிப் ஆனால் எனது பணி நிமித்தமாக நான் கேத்ரின் தயாள்.
2 . வீட்டு நிதி நிர்வாகத்தை நானே நிர்வகிக்கிறேன். பென்னி மிகவும் பிஸியான ஷெட்யூலில் இருப்பதால் வீட்டிற்கு தேவையான அனைத்து யுடிலிட்டி பில்ஸ், கிராசரி மற்றும் வீட்டுக்கு தேவையான அனைத்தையும் நானே கவனித்து கொள்கிறேன்.
3 . நாங்கள் இருவரும் வேலை காரணமாக வெகு தொலைவில் இருப்பதால் ஒருவரையொருவர் சில சமயங்களில் தான் பார்த்து கொள்ள நேரிடுகிறது. ஒரு சில மாதங்கள் ஒன்றாக இருக்கும் சமயங்களில் அந்த நாட்களை சிறப்பாக அமைத்து கொள்வோம். இது போல இருக்க நிறைய தியாகம் செய்ய வேண்டி இருக்கிறது. அது அவ்வளவு எளிதானது அல்ல என்றாலும் நாங்கள் இருவரும் அந்த நேரங்களில் ஸ்ட்ராங்காக இருக்க முயற்சிக்கிறோம்.
View this post on Instagram
எல்லா வகையான திருமணங்களிலும் ஏதாவது வித்தியாசம் இருக்கும். நாங்கள் உட்பட திருமணமான ஒவ்வொருவரும் போராட்டங்களை சந்திக்கிறார்கள். எனவே அதை ஒப்பிட தேவையில்லை. எங்களின் திருமண வாழ்க்கையில் வளர்ந்து வருகிறோம். எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.