Beast Trailer: சிதறவிடு.. சவுண்டெல்லாம் ஏத்தி வை.. 3 மணிநேரத்துல பீஸ்ட் ட்ரெய்லர்.. அதகளப்படுத்தும் சன் பிக்சர்ஸ்
பீஸ்ட் ட்ரெய்லர் இன்று வெளியாக உள்ள நிலையில், அதனை ப்ரோமோட் செய்யும் விதமாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
![Beast Trailer: சிதறவிடு.. சவுண்டெல்லாம் ஏத்தி வை.. 3 மணிநேரத்துல பீஸ்ட் ட்ரெய்லர்.. அதகளப்படுத்தும் சன் பிக்சர்ஸ் Beast Trailer is releasing Today sun pictures Gearup Promotion Video Beast Trailer: சிதறவிடு.. சவுண்டெல்லாம் ஏத்தி வை.. 3 மணிநேரத்துல பீஸ்ட் ட்ரெய்லர்.. அதகளப்படுத்தும் சன் பிக்சர்ஸ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/02/e4935cf1f02de99622c5ed244694cbde_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பீஸ்ட் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ள நிலையில், அதனை ப்ரோமோட் செய்யும் விதமாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் (Beast) படத்தில் நடித்துள்ளார். பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வெளியாக உள்ளது. திரையரங்குகளில் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் ஒரு பகுதியாக, முதல் பாடல் கடந்த மாதம் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது.
சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதி அனிருத் இசையமைத்துள்ள அரபிக்குத்து பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஹிட் அடித்து இருக்கிறது. இந்நிலையில், படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி பட்டையைக் கிளப்பியது. அதனைத்தொடர்ந்து இன்று பீஸ்ட் ட்ரெய்லர் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
View this post on Instagram
பீஸ்ட் படம் நேற்று சென்சார் ஆகியிருக்கிறது. U/A சான்று பெற்றிருக்கிறது. சென்சார் வேலை முடிந்துவிட்டதால் தயாரிப்பு தரப்பு ஏப்ரல் 13 தான் ரிலீஸ் தேதி என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)